அனைவரும் முதலில் இந்தரின் வீட்டை அடைந்தனர். மணமக்களை சிறப்பாக ஆரத்தி சுற்றி வரவேற்றனர். வீட்டின் உள்ளே வலது காலை எடுத்து வைத்ததும்.........
“இனிமேல் உங்களை அண்ணா தான் உள்ளே தூக்கி செல்ல வேண்டும் “என்று, அபி முன் மொழிய இளைஞர் பட்டாளம் “ தூக்கு, தூக்கு” என வழி மொழிந்தனர்.
பெரியவர்கள் அனைவரும் மெதுவாக உள்ளே நகர்ந்து விட்டனர். பூஜா தான் வெட்கப்பட்டு “வேண்டாம் “ என கூறினாள்.
“அண்ணி, காலையில் மண்டபத்தில் உங்க வீட்டு பெண்கள் எல்லாம் பரிசு கொடுதால் தான் உள்ளே விடுவோம் என்று கூறினார்கள், நாங்க அப்படியா கேட்டோம், இங்கிலீஷ் பட ஸ்டைலில், அண்ணா உங்களை தூக்கி வர வேண்டும் என்று தானே கேட்கிறோம்” என அபி கூற........ இந்தர் ஒன்றும் கூறாமல், புன்னகைத்து கொண்டிருந்தான்........
அதற்குள் குழலி வந்து “இந்தர் உங்களால் பூஜாவை கூட தூக்க முடியாதா? வீட்டில் ஜிம் எல்லாம் வைத்து பூஜை மட்டும் செய்வீங்களா? என்று சவால் விட
“யாரை பார்த்து என்ன கேட்ட, அவளை தூக்கறது என்ன பிரமாதம், விட்டா பாகுபலியில் வந்தது போல் என் தோள் மீதே நடக்க வைப்பேன், இது என்ன ஜுஜுபி “ என்ற படி , சவால் என்றதும் பூஜாவே எதிர் பார்க்காத பொழுது டக்கென்று அவளை இரு கைகளிலும் ஏந்தி வீட்டின் உள்ளே நடந்தான் இந்தர்..........
“ஹே “ என்று கூச்சலிட்டபடி இளைஞர் பட்டாளம் அவர்களை பின் தொடர்ந்தது.
“ஜித்து ப்ளீஸ் போதும் , என்னை கீழே விடுங்க “ என்று பூஜா கெஞ்சிய பிறகே, நிலத்தில் அவள் கால் பதிய அனுமதித்தான் இந்தர்.......
அனைவரும் உள்ளே வந்ததும் அவர்கள் இருவரையும் ஒரு சோபாவில அமர வைத்து சுற்றி அனைவரும் அமர்ந்தனர்.
ஆள்ளாளுக்கு பூஜாவை கேள்வி கேட்டு புது பெண்ணை கலாய்த்து கொண்டு இருந்தனர். இந்தர் அவர்களிடமிருந்து அவளை காப்பாற்றி கொண்டு தான் இருந்தான்.
அடுத்து சித்தி சுஜி, ஒரு வெள்ளி குடத்தை எடுத்து வந்து இருவருக்கும் இடையில் வைத்தார். அதில் முக்கால் அளவு நீர் நிரம்பி, அதன் உள்ளே உதிரி பூக்களை போட்டு நிரப்பி இருந்தார். உள்ளே எதுவும் போட்டால், மேலிருந்து பார்த்தால் தெரியாத அளவிற்கு.
சம்யுக்தா வந்து ஒரு வைர மோதிரத்தை அந்த குடத்தினுள் போட்டார். பின் பூஜாவை பார்த்து அவள் வலது கையில் அணிந்திருந்த தங்க வளையல்கள் அணைத்தையும் கழட்டி ஷியமளாவிடம் கொடுக்குமாறு கூறினார்.
“ ஏன் அத்தை” என்று கேட்டதற்கு
“குடத்தின் வாய் பகுதி சிறியதாக இருக்கிறது. அதனால் இருவரும் கையை விட்டால், வளையல்களில் உள்ள வேலைபாடுகள் நிறைந்த பகுதி, இந்தரின் கையை கீறி விட கூடும், அதற்க்கான முன் எச்சரிக்கை தான் இது.” என கூறினார்.
“உன்னோட அம்மா பாசத்திற்கு அளவே இல்லை சம்யு, புல் அரிக்குது எனக்கு” என்று சம்யுவை கிண்டல் செய்தார் சுஜி........
இந்தர் தனது முழு கை சட்டையை மடித்து விட்டு தயார் ஆனான். இருவரும் வலது கையை குடத்தினுள் விட்டனர். பூக்களும் இருந்ததால் பூஜாவிற்கு தேட வேண்டி இருந்தது.
இந்தர், இந்தர் , என ஒரு கும்பல் கூச்சலிட, பூஜா, பூஜா என்று ஷ்யாமளாவுடன் சேர்ந்து குழலியும் முழங்கினாள்.
“என்ன இப்பவே அக்காவை காக்கா பிடிக்கரியா?” என அபி, குழலியின் காதுகளில் மெல்ல கேட்க........... குழலி அவனை திரும்பி முறைக்க.......
“இந்தர் அண்ணா உனக்கு அத்தான் என்றால், பூஜா அண்ணி உனக்கு அக்கா தானே? அதுக்கு என்ன முறைப்பு வேண்டி இருக்கு?
“அப்படி கேட்கரதுன்னா சத்தமா கேட்பது தானே? இதுல என்ன ரகசியம்?
“அது ரகசியம்ன்னு உனக்கு புரிஞ்சா சரி தான்.” என பதிலுக்கு அபி ரகசியமாகவே கூறினான்.......
அதற்குள் பூஜாவின் கைக்கு கிட்டாத மோதிரம் இந்தரின் கைகளில் சிக்கியது. அதை எடுத்தவுடன், உடனே கைகளை வெளியே எடுக்காமல், பூஜாவின் விரல்களை பற்றினான். அவன் விரல் தீண்டியதும் அவள் முகம் குங்குமமென சிவந்தது. அதை மறைக்க தலையை குனிந்து கொண்டாள் பூஜா..........
சிறிது நேர விளையாட்டிற்கு பின் இருவரும் கையை வெளியே எடுத்தனர். அனைவரும் ஆவலாக பார்த்தனர், யார் கையில் மோதிரம் உள்ளது என்று. இருவரும் கைகளை திறந்து காட்டிய பொழுது இருவர் உள்ளங்கைகளிலும் மோதிரம் இல்லை.
“இவ்வளவு நேரம் என்னடா தேடினீங்க? என்று அண்ணா ஒருவர் கேட்க .......
பூஜா மெதுவாக அவளது கைகளை திருப்பி காண்பித்த பொழுது அவளது மோதிர விரலில், இந்தரால் மாட்டப்பட்ட அந்த மோதிரம் இருந்தது.
ஒ வென இளைஞர் அணி ஆர்ப்பரிக்க, “அண்ணா, அண்ணியிடம் கவுந்துட்டார்” என அபி கூற அங்கே சிரிப்பொலி அடங்க சிறிது நேரம் ஆனது.
சம்யுக்தா பெருமை பொங்க, தன் மகனை பார்த்து கொண்டிருந்தார். போட்டியில் வென்றாலும் அதனை தன் மனைவியுடன் பகிர்ந்து கொள்கிறானே என்று............
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
You rocks
Indhar super , Samyu aunty super , pooja super
All super O suoper
Antha mithirathai Purvi kaiyil pottu Indhar romantic hero aagitaru
Hospital-la wait panni innim konjam score pannitaru..
Waiting for the next epi..
Ellorukum Indhar pol hero kidakka aasai thaan
Kandippa Samyuktha Aunty maathiri oruthanga irukkanga .
Aana paiyan thaan Indhar maathiri irukka maattan paravaillaya
:sorry: Vasu,. kojam busy in personal work. Athaan pages kammi agiduchu.
Starting rombave romantic pinne sogama aagiddee
But loved their bonding