(Reading time: 11 - 21 minutes)

“போதுண்டா உன் ரொமான்ஸ் தாங்கலை” என்று சித்தி தான் கலாய்த்து கொண்டிருந்தார்.

“பொறாமை படாதிங்க சித்தி, வேணும்னா, சித்தப்பாவிற்கு கிளாஸ் எடுத்து அனுப்பறேன். அப்புறம் சிவப்பு ரோஜாவுடன் உங்க பின்னாடியே அலைவார்.” என்று பதிலுக்கு இந்தரும் திருப்பி கலாய்த்தான்.

“உன் கூட பேசி ஜெய்க்க முடியுமா? என கூறியவாறு அங்கிருந்து அகன்றார் சித்தி.........

ன்று இரவு விருந்து அவர்கள் வீட்டில் தோட்டத்தில், புல் வெளியில் நடந்தது. அனைவரும் பேசி மகிழ்ந்தபடி விருந்துண்டனர். விருந்து முடிந்ததும், பீஷ்மரும், சரோஜினியும் மணமக்களை தங்கள் வீட்டிற்க்கு அழைத்து செய்வதாக கூற, இந்தருக்கு அவ்வளவாக விருப்பம் இருக்க வில்லை.

“மாமா நாங்க இங்கேயே தங்கி, நாளை காலை அங்கு வருகிறோமே” என இந்தர் கூற

“இல்லை, இந்தர் சம்பரதயம்ன்னு ஒண்ணு இருக்கு, அதனால் அங்கேயே வந்துடுங்க, பூஜாவிர்க்கும் அது தான் வசதியாக இருக்கும்” என அவர் கூறியதும்.........  பூஜா பெயரை கேட்ட பின்பு அவன் மறுத்து ஒன்றும் சொல்லவில்லை.

ஒரு வழியாக கிளம்பி பீஷ்மரின் இல்லம் வந்து சேர்ந்தனர். இவர்களுக்கு முன்பே வந்திருந்த ஷியாமளா, பூஜாவின்  அறையை அலங்கரிக்கும் பொறுப்பை செவ்வனே முடித்திருந்தாள்.

அவர்களது விருந்தினர் அறைக்கு இந்தரை அழைத்து சென்று அவனை உடை மாற்றி வருமாறு கூறினார் துரை. அதற்குள் பீஷ்மரின் அறையில் பூஜாவிற்கு மிதமான ஒப்பனை செய்து, தலையை ஒரு சிறு மாட்டி கொண்டு பினைதிருந்தாள். இள ரோஜா வண்ணத்தில், மைசூர் பட்டு புடவையும், வேலைபாடுகள் நிறைந்த ஜாக்கெட்டும் அணிந்து, நகை அதிகம் அணியாமல், எளிமையாகவும் அதே நேரத்தில் தேவதை போலவும் காட்சி அளித்தாள்.

“சித்தி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்றபடி கட்டிலில் ஏறி பின் புறம் இருந்து பூஜாவின் கழுத்தை கட்டி கொண்டாள் ஜனனி.....

“தேங்க்ஸ் டா செல்லம், நீங்க ஏன் இன்னும் தூங்காம இருக்கீங்க” என்று ஜனனியை கேட்க .........

“சித்தப்பா, நம்ம வீட்டுக்கு புதுசா வந்து இருக்காங்க, அவங்களுக்கு எதாவது உதவி தேவைபட்டா, அதுக்கு தான். சித்தப்பா எனக்கு கதை சொல்றேன்னு சொல்லி இருக்காங்க. அதனால சித்தப்பாவோட தான் படுப்பேன். அப்போ தான் அவங்க எனக்கு பெட் டைம் ஸ்டோரிஸ் சொல்லுவாங்க”. என  அழகாக கூறினாள் ஜனனி........

பூஜா வெட்கத்துடனும், சியாமளா குபீர் என்றும் ஒரே நேரத்தில் சிரித்தனர்.

“இன்னைக்கு வேண்டாம்டா, இன்னைக்கு சித்தப்பாவுக்கு  ரொம்ப அசதியா இருக்காம். அதனால் இன்று சித்தப்பா தூங்கட்டும், நாம நாளைக்கு கதை கேட்கலாம்.” என கூறி ஷியாமளா ஜனனியை அழைத்து செல்ல பார்க்க........

“அப்போ சித்தி கதை சொல்லட்டும்” என கூறினாள் ஜானும்மா

“சித்தியும் அசதியா தான் இருக்கா” என சியாமளா அவளை முறைக்க.....

“இல்லை, சித்தி எவ்வளோ பிரஷ்ஷா இருக்காங்க பாருங்க, புது டிரஸ் எல்லாம் போட்டு இருக்காங்க. நான் இன்னைக்கு சித்தி ரூமில் தான் தூங்குவேன்.” என கூறி அடம் பிடிக்க ஆரம்பித்தாள்.

“ நீ இன்னைக்கு மாடி பக்கமே போக வேண்டாம். இங்க தாத்தா, பாட்டியோட படுத்துக்கோ” என சியாமளா சொல்லி கொண்டிருக்கும் போதே, அந்த அறையிலிருந்து வெளியேறி, ஹாலில் இருந்த படிகளை நோக்கி ஓடினாள் ஜனனி........

பின்னால் பிடிக்க அம்மா வருவது, தெரிந்தவுடன் வேகம் அதிகரிக்க, எட்டாவது படியில் கால் வைத்த பொழுது, கால் வழுக்கி, எதையும் பிடிக்க முடியாமல், கீழே விழ ஆரம்பித்தாள். சியாமளா போய் பிடிக்குமுன் படிகளில் உருள ஆரம்பித்திருந்தாள். உருண்டு முடித்த பொழுது மயங்கி இருந்தாள்.

துரை ஓடி வந்து பார்த்த பொழுது, மயங்கி இருந்தாள் ஜனனி. பூஜா ஓடி சென்று தண்ணீர் எடுத்து வந்தாள். அதை தெளித்தும் மயக்கம் தெளியவில்லை.

அனைவரும் ஒன்றும் புரியாமல் நின்ற பொழுது, இந்தர் “ஜனனியை மருத்துவ மனைக்கு கூட்டிட்டு போகலாம் என கூறி வேகமாக சென்று காரை ஸ்டார்ட் செய்தான். சரோஜினியை தவிர அனைவரும் கிளம்பினர்.

“பூஜா நீ வீட்டில் இரு” என்று இந்தர் கூறியது கேட்டு.........

“என்னால் இங்கு நிம்மதியா இருக்க முடியாது. தவிர அவ கண் விழித்ததும் என்னை தான் கேட்ப்பா” என கூறி அவளும் காரில் ஏறி கொண்டாள்.

காரில் போகும் போதே, துரை , குழந்தைகள் நல மருத்துவருக்கு போன் செய்த பொழுது, அவர் இன்னும் மருத்துவ மனையில் தான் இருப்பதாக கூறினார்.

அங்கு சென்று ஜனனியயை சேர்த்த பின் MRI ஸ்கேன் எல்லாம் எடுத்து நார்மல் என்று தெரிந்த பின் அவளுக்கு டிரிப்ஸ் ஏற்றினர். அதன் பின் அவர் வெளியே வந்து “ என்ன துரை நீங்களே பெரிய மருத்துவர். நீங்க இப்படி பயப்படலாமா? அவளுக்கு ஒண்ணு இல்லை, படியில் விழுந்த அதிர்ச்சியில் மயக்கமாகி இருப்பா. இரண்டு நாளா உங்க வீட்டு கல்யாணத்தில் ஓடியாடி விளையாடியதால் கொஞ்சம் சோர்வா இருக்கலாம். மற்றபடி  அவளுக்கு ஒன்னும் இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.