(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 15 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

வா பாரதி, அந்த சேர்ல உக்கார்ந்து பேசலாம்....”, ராஜா அழைக்க இருவரும் சென்று மல்லிப்பந்தல் கீழே இருந்த நாற்காலியில் அமர்ந்தார்கள்.

“சொல்லு பாரதி உனக்கு எதுனால என்னைப் பிடிச்சுது...”

“ராஜா இதெல்லாம் அநியாயம் சொல்லிட்டேன்...  நீங்க இன்னும் லவ்வே சொல்லலை... ஆனா நான் மட்டும் எனக்கு ஏன் பிடிச்சிருக்குன்னு கதை வரைக்கும் சொல்லணும்....”

“என்னது நான் சொல்லலையா... இப்போதானே, டேபிள், சேர் எல்லாம் நீ சொன்ன ஒரே காரணத்துக்காக வாங்கிப் போட்டேன்னு சொன்னேன்....”

“ஐயே இந்த ரிங்கா ரிங்கா ரோஸஸ்ன்னு சுத்தி சுத்தி வர்ற விளையாட்டே  வேணாம்.... நேர்படப் பேசுதான் நமக்கெல்லாம் ஒத்து வரும்... ஸோ ஓடிப்போய் அந்த ரோஜாப்பூவ பறிச்சுட்டு வந்து மண்டி போட்டு செம்ம தூளா  ப்ரொபோஸ் பண்ணுங்க பார்ப்போம்....”

“ஹா ஹா ஹா.... எப்படி பாரதி இப்படி வளைச்சு வளைச்சு பேசற.... lawyers எல்லாருமே இப்படித்தானா....”

“ச்சே ச்சே எல்லாரும் இப்படி கிடையாது... நானும் சாரங்கனும் மட்டும் ஸ்பெஷல் மேக்....”

“சாரங்கன்.....”

“என்னோட Dear most friend....”

“ஓ ஓகே... புரியுது.... நீயே இப்படின்னா உனக்கு friend-னா அவரும் அப்படித்தானே இருந்தாகணும்....”

“Professor சார்.... ரூட்ட மாத்தாதீங்க.... என் கேள்விக்கென்ன பதில்....”

“பாரதி அம்மா என்னைப்பத்தி என்ன சொல்லி இருக்காங்கன்னு தெரியலை.... நீ என்னோட வெளித்தோற்றத்தை வச்சு பிடிச்சிருக்குன்னு சொல்ற... அது மட்டுமே குடும்ப வாழ்க்கைக்கு போதாது... நீ வக்கீல் தொழில்ல இருக்க... ஒரு நாளைக்கு எத்தனை விவாகரத்து வழக்கு வருதுன்னு உனக்கே தெரியும்... சகிப்புத்தன்மை அப்படிங்கறது இப்போ குடும்பங்கள்ல குறைஞ்சுட்டு வருது.... நமக்கு அமையற கணவனோ, மனைவியோ எப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழ்க்கையை நடத்துவோம்னே யாரும்  நினைக்கறதில்லை.... சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் நீதிமன்றம் வரைக்கும் வந்துடறாங்க... ஸோ நாம மொதல்ல நம்மைப் புரிஞ்சுக்கலாம்... நான் என்னைப் பத்தி உனக்கு சொல்றேன்... அதுக்குப்பிறகு உன்னோட முடிவை சொல்லு....”,ராஜா பேச பாரதி ‘இவனுக்கு ஏற்கனவே ஒரு காதலி இருந்து இப்போ விட்டுட்டு போய் இருப்பாளோ”, என்று கோக்குமாக்குத்தனமாக யோசித்தாள். அந்த யோசனையின் பின் படு உன்னிப்பாக ராஜா சொல்வதை கேட்க ஆரம்பித்தாள்.

“என்னோட அம்மாக்கு உன்னை பிடிச்சதுக்கான முதல் காரணம் நீ வக்கீல் அப்படிங்கறதுதான்.... காரணம் என்னோட அப்பா ஒரு வக்கீல்...”

“உங்களுக்கும் அதுதான் காரணமா....”

“எனக்கு பிடிச்ச காரணத்தை  நான் அப்பறமா சொல்றேன்... நாங்க சென்னை வர்றதுக்கு முன்னாடி மதுரைல இருந்தோம்... அப்பா மதுரை லா காலேஜ்லதான் படிச்சார்.... படிச்சு முடிச்சுட்டு அங்கேயே ப்ராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாறு... இந்த வீடு  என்னோட தாத்தா, பாட்டி வீடு...  அப்பா காலேஜ் படிக்க ஆரம்பிச்ச காலத்துல இருந்தே மாணவர் இயக்கம் அது இதுன்னு படு ஆக்டிவா இருப்பார்... அது வழியா ஏகப்பட்ட பேருக்கு நல்லது பண்ணி இருக்கார்... லா படிச்சு முடிச்ச பிறகு, எடுத்த கேஸ் முக்காவாசி இல்லாதப்பட்டவங்களோடதுதான்.... அதுவும் இல்லாம எங்க அநியாயம் நடந்தாலும் முதல் ஆளா போய் நிப்பார்....”, ராஜா சொல்ல சொல்ல, ‘ஆ நம்ம மாமனார் அப்படியே நம்ம மாதிரி போல...’, பாரதியின் மைன்ட் வாய்ஸ் பேசியது...

“ஒரு தடவை நாங்க குடியிருந்த  ஏரியால இருந்த பெரிய மனுஷன்  குடி போதைல ஒரு பெரியவர் மேல வண்டிய ஏத்திட்டு கண்டுக்காம போய்ட்டான்... அதுல அவர் இறந்து போய்ட்டார்.... அப்போ அப்பா அந்த ஆள்  மேல கேஸ் போட்டு வாதாடி, பத்து வருஷம் உள்ளத் தள்ளிட்டு பாதிக்கப்பட்டவங்க  குடும்பத்துக்கும் கணிசமா நஷ்டஈடு வாங்கி கொடுத்தார்.... அவனை உள்ளத் தள்ளின ஆத்திரத்துல அவனோட ஆளுங்க எங்க வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் அடிச்சு உடைச்சுட்டு போய்ட்டாங்க... அப்போ அப்பா இன்னொரு கேஸ் விஷயமா தஞ்சாவூர் வரை போய் இருந்தாரு... ... நானும் அம்மாவும் பக்கத்துல  கோவிலுக்கு போய் இருந்தோம்... அதனால நாங்க பிழைச்சோம்.... விஷயம் கேள்விப்பட்டு வந்த தாத்தாவும், பாட்டியும் அழுது புலம்பி மதுரைல  இருந்து உடனே கிளம்ப சொன்னாங்க... அப்பா எத்தனையோ எடுத்து சொல்லியும் அவங்க கேக்கலை... வேற வழியில்லாம  எல்லாரும் கிளம்பி சென்னை வந்துட்டோம்... அம்மா பக்கத்துல ஒரு ஸ்கூல்ல வேலைக்கு சேர்ந்தாங்க... சென்னை வந்து ஒரு ஆறு மாசம் எந்தத் தொந்தரவும் இல்லாம போச்சு... அவனுங்க அந்த ஆறு மாசமும் எங்களைத் தேடி இருக்கானுங்க போல... எங்களுக்குத்தான் அந்த விஷயம் தெரியலை.... எப்படியோ நாங்க இருக்கற இடத்தை கண்டுபிடிச்சவங்க அப்பா வெளிய போயிட்டு வரும்போது வீட்டு வாசல்லையே வச்சு அவரை வெட்டிட்டாங்க.... எனக்கு அப்போ ஆறு வயசு....”,ராஜா கண்கலங்க பாரதி அவன் கையை தட்டிக்கொடுத்து  ஆறுதல் கூறினாள்.

“அப்பாவோட சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளிய வந்து பார்க்கறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு... ஒருத்தரை கொலை பண்ண பத்து பேர்.... என்ன மாதிரி வீரம் பார்த்துக்கோ..... எல்லாருமே நிலை குலைஞ்சு போய்ட்டோம்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.