யோகா தியானம் செய்பவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் இதயத் துடிப்பு சராசரியாகவே மிகக் குறைந்து காணப்படும். இதை சைனஸ் ப்ராடிகார்டியா SINUS BRADYCARDIA என்பர்
நித்தம் நித்தம் வண்ணக் கனவுகளில் திளைத்துக் கொண்டிருந்தவள் மனமோ நிலை கொள்ளாமல் தவித்தது.
“எப்போடா நியூயார்க் போவோம்ன்னு இருக்கு ஸ்ரீதர்” வர்ஷினி லாக் புக் டைப் செய்து கொண்டே சொல்லவும் ஸ்ரீதர் அவளை ஓர் கேள்விப் பார்வை பார்த்தான்.
“ஏன் நியூயார்க் உனக்கு அவ்வளவு பிடிச்சு போச்சா”
“நியூயார்க் பிடிச்சு போகலை மக்கு. நியூயார்க் டாக்டர் பிடிச்சுப் போய்ட்டார்” மனதிற்குள் நினைத்தவள் உள்ளம் பரவச வெள்ளத்தில் மூழ்கியது.
“நியூயார்க் போனா இன்னும் இரண்டு மாசம் தானே அப்புறம் ஊருக்கு போயிடுவோம்ல. அதான்” ஸ்ரீதரின் கேள்விக்கு பதிலை சொல்லி மழுப்பி விட்டிருந்தாள்.
அன்று கணேஷ் ராமின் செக்ரட்டரி லிசி பரபரப்பாக காணப்பட்டாள். இன்னும் இரு தினங்களில் கணேஷ் கிளம்புவதாக இருந்தது.
அன்று வெள்ளிக்கிழமை. பார்க்க வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கணேஷ் இன்னும் சர்ஜரி முடித்து வந்தபாடில்லை.
லிசி அந்த சனி ஞாயிறு கலிபோர்னியாவில் இருக்கும் அவளது வீட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தாள். இரவு விமானத்தில் அவளுக்கு செல்ல வேண்டியிருந்தது.
நோயாளிகளின் முழு மருத்துவக் குறிப்புகள் இன்ன விவரங்களை கேட்டறிந்து அதை தொகுத்து கணேஷின் பார்வைக்கு வைத்தாள்.
சர்ஜரி முடித்து வந்த கணேஷ் விரைவாக நோயாளிகளை பார்க்க ஆரம்பித்தான்.
“மிசஸ் ராம். யுவர் மெடிகல் பைல் ப்ளீஸ்” அன்று கடைசி அப்பாயின்ட்மன்ட் பெற்றிருந்த பெண்ணிடம் லிசி மருத்துவக் குறிப்புகள் அடங்கிய கோப்பினை தருமாறு கேட்டாள்.
தான் அவசரத்தில் பைலை மறந்து வைத்து வந்து விட்டதாக அந்தப் பெண் கூறவும் லிசி அவளது பிரச்சனைகள் என்ன என்று கேட்டு அதை குறித்துக் கொள்ள ஆயத்தமானாள்.
“என் இதயம் திருட்டு போயிருச்சு. அதனால மாற்று இதயம் பெற வந்திருக்கேன்” அந்தப் பெண் சொல்லவும் டைப் செய்து கொண்டிருந்த லிசி சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.
சொல்லிக் கொண்டிருந்த பெண்ணின் முகம் மிகவும் சீரியசாக இருந்தது. விளையாடும் பாவனையோ கேலி செய்யும் குறியோ அதில் இல்லை.
“உங்க கூட யாரும் வரலையா மிசஸ் ராம்” லிசி கேட்க இல்லை என்று மறுப்பாய் தலையாட்டினாள்.
“ஒரு வேளை சைக்கியாட்ரிக்கு அப்பாயின்ட்மன்ட் வாங்குவதற்கு பதில் மாறி இங்கே வந்துவிட்டாளோ என்று சந்தேகம் கொண்டாள் லிசி.
அதே நேரம் அவளது மேஜை மேலிருந்த போன் அடிக்க அப்பாயின்ட்மன்ட் எல்லாம் முடிந்து விட்டதா என்று கணேஷ் கேட்டுக் கொண்டிருந்தான்.
லிசி விரைவாக கணேஷின் அறைக்குள் சென்றாள்.
“டாக்டர் கணேஷ், ஒரு பேஷன்ட் வந்திருக்காங்க. நம்ம பழைய பேஷன்ட் மாதிரி தெரியல. மனநிலை பாதிக்கப்பட்டவங்களோன்னு சந்தேகமா இருக்கு”
“லிசி அவங்களை சைக்கியாட்ரிக்கு அனுப்பு. நான் ஐசியுவில் ரவுண்டஸ் போயிட்டு டென் மினிட்ஸ்ல வரேன்” ராம் கிளம்ப எத்தனிக்கையில் அவன் முன் இருந்த அந்த பைலை பார்த்தான்.
“மிசஸ் ராம்” என்று முகப்பில் இருக்கவும் அதை கையில் எடுத்து புரட்ட லிசி முந்திக் கொண்டு மிசஸ் ராம் என்ற பெண் தனது இதயம் தொலைந்து போய்விட்டது மாற்று இதயம் பொறுத்த வந்திருக்கேன்னு” என்று சொல்லிக் கொண்டு போனது கணேஷின் செவிகளில் விழவே இல்லை.
அவனது மேஜையில் இருந்த கணினியில் சில பட்டன்களை தட்ட அது வெளியில் உள்ள சிசிடிவி காமரா படங்களை திரையில் காண்பித்தது.
கருப்பு வண்ண நீளமான ஸ்கர்ட் மரூன் நிற டாப்ஸ் மல்டிகலர் ஸ்டோல் அலட்சியமாய் கொண்டையிட்டு இருந்த கூந்தலின் ஓரிரு கற்றைகள் முகத்தில் தவழ அதை ஒதுக்கியபடி சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன் இதயம் அக்கணமே துள்ளி குதித்துக் கொண்டு அவளிடம் சென்று விட பரபரத்தது.
“ராட்சசி என் அழகான ராட்சசி உடம்பெல்லாம் குறும்பு. இருக்கு உனக்கு இன்னிக்கு” மனதில் உற்சாகம் பீறிட அதை வெகுவாய் பாடுபட்டு கட்டுபடுத்திக் கொண்டான்.
“லிசி நான் ஐசியுவில் ரவுண்ட்ஸ் முடித்துக் கொண்டு வருகிறேன். அந்தப் பெண்ணை காத்திருக்க சொல்” கணேஷ் சொல்லவும் லிசி ஏதோ சொல்ல எத்தனித்து பின்பு சொல்லாமல் தயக்கம் கொண்டாள்.
மணியைப் பார்த்தவன் அவள் என்று சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தாளே என்பது நினைவு வர அவளை கிளம்பச் சொன்னான்.
“அந்த பேஷன்ட்” லிசி தயங்க
Varshini is cute
Haha Varsh oda vaalu thanam lovely
Looking forward
You don't know how our hearts are struggling, pl do give a
Big update. Apologies are not taken :(