Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 03 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 03 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

உன்னில் தொலைந்தவன் நானடி, கதை மனதில் தோன்றிய நடையை அப்படியே உங்களுக்கும் தர முயற்சிப்பதால், அத்தியாயங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் இருப்பதாக இருக்கலாம், சில பதிவுகளுக்கு பின் உங்களுக்கே புரியும் என்று நம்புகிறேன்

 

( நீயும் உன் முயற்சியும்னு நீங்க யோசிப்பது எனக்கு புரியுது, என்ன பண்றதுங்க ஆசை யாரை விட்டது, பெரிய மனசு வச்சு பொறுத்துக்கோங்க, நன்றி )

ஊர்  : திருச்சியில் ஒரு குக்கிராமம்

நேரம் : இரவு 10

இடம் : பள்ளியறை

நபர்கள் : மணமகன், மணமகள்

ணமகனின் மிடுக்கோடு குணசேகர் அமர்ந்திருக்க மணமகளுக்கே உரிய நாணத்தோடு உள்ளே வந்தாள் சுந்தரி. அவளுக்கு அறிவுறுத்தப்பட்ட அனைத்தையும் அவள் செவ்வனே  செய்தாலும் மனம் எதிலோ சிக்கி தவிக்க, குணசேகரோ அமைதியாய் அவளையே கண்டு கொண்டிருக்க , சுந்தரியோ பேஎன்று விழித்தாள்.

உனக்கு என்கிட்டே ஏதாவது கேட்கணுமா  ? என்று நேரடியாக அவர் தாக்க , அதுவரை மனதில் இதுநாள் வரை உறுத்தி கொண்டிருந்த அந்த கேள்வியை கேட்டுவிடும் எண்ணத்தில்

"நான் உங்கட்ட ஒரு விஷயத்தை பற்றி கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே " என்று அவள் நீட்டி முழக்கியதிலேயே குணசேகர் அவள் தன் குடும்ப விவாகரம் பற்றி ஏதோ கேட்க போகிறாள் என்று யூகித்து

ம் கேளுஎன்று ஊக்குவிக்க, அவளோ, நீங்க  இரண்டாம் தாரத்து பிள்ளை இல்லையா ..? என்று மென்று விழுங்கி வார்த்தைகளை விட , சேகரோ ஆமா என்று பதிலளித்தான்.

இல்ல உங்க பெரியம்மாவுக்கு நாலு பெண் குழந்தைங்க பிறந்தும் உங்க பாட்டி வாரிசு வேணும்னு உங்க அம்மாவைஎன்று இழுக்க , ஆமா, அதுக்கு என்ன?   மேல சொல்லு என்று கூறியபடியே  அவள் நெற்றியில் பூத்திருந்த  வியர்வை முத்துக்களை தன் மேல் துண்டால் ஒற்றி எடுக்க அவள் கண்களில் ஏனோ கண்ணீர் வந்து விட்டது.

சுந்தரி  எந்தவிதமான சந்தேகத்தோடும், தயக்கத்தோடும் நம் வாழ்க்கை ஆரம்பிக்க கூடாது உன் மனசுல என்ன இருந்தாலும் தயக்கம் இல்லாம கேட்டுடு என்று சொல்ல சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்ட சுந்தரியோ

இல்ல ..ஒரு வேளை எனக்கும்  ஆண் குழந்தை பிறக்கலைன்னா.. என்னையும் நீங்கஎன்று சொல்லும் போதே அவள் விம்மி அழ தொடங்க சேகரோ சிரித்துக் கொண்டிருக்க, கணவன் சிரித்ததில் மனைவிக்கே உரித்தான ஊடல் தொடங்கியது அவளிடத்தே.

தன் மனையாளின் ஊடலை வெகு நேரம் ரசித்தவன் அவளின் ஐயத்தை நீக்கும் பொருட்டு இங்கே பாரு சுந்தரி நான் எங்க அம்மாக்கு ஒரே பையன் மட்டும் இல்லை ஒரே குழந்தை , என்னோட வாழ்க்கையில் நீ , எங்க அம்மா, என் அக்காக்கள் நமக்கு பிறக்கும் பெண் குழந்தைகள் தவிர வேற எந்த பொண்ணுக்கும் என்னை சொந்தம் கொண்டாடும் உரிமையை  நான் கொடுக்க மாட்டேன் என்று தான் கட்டிய தாலி மீது சத்தியம் செய்ய, செய்த தவத்தின் பலனோ என்று எண்ணி மெய் சிலிர்த்தாள் சுந்தரி.

ஆனால் அந்த நிம்மதியை மெல்ல மெல்ல இழக்க வைத்தன  அவள் கணவன்  மறுநாள் அவளிடம் பகிர்ந்த செய்திகள்.

சுந்தரி இப்போ நான் உன்கிட்ட ஒரு விஷயம் பத்தி சொல்லணும் சொல்லலாமா?, இது வரைக்கும் இந்த விஷயத்தை பத்தி நான் யார்கிட்டயும் மூச்சே விட்டதில்லை ஆனா உன்கிட்ட இதை மறைச்சு என் வாழ்க்கையை நான் ஆரம்பிக்கவும் விரும்பலை .நீ எப்படி என்னை நம்பி வாழ வந்திருக்கியோ அதே மாதிரி தான் நான் உன்னை நம்பித் தான் என் வாழ்க்கையை ஒப்படைக்க போறேன் அதனால என்று அவன் பீடிகை போட

சுந்தரிக்கோ இருதயம்  தாறு மாறாக  துடிக்க த் தொடங்கியது

ஏங்க நீங்க  கல்யாணத்துக்கு முன்னாடியே  வேற ஒருத்தியோட , அவ கூட , என்று அவள் எச்சிலை விழுங்கியபடி மேற்கொண்டு பேச முயற்சிக்க,

"ஒன்னு போட்டேன்னு வை கன்னம் பழுத்துரும்" என்று அவன் கையை ஒங்க அவளோ வெல வெலத்து விட்டாள். வெளிறிய அவள் முகத்தை கண்டவன் , “உன்னை சொல்லி குத்தம் இல்லடி லாரி டிரைவர்ன்னாலே  இப்படித்தான் இருப்பாங்கன்னு ஒரு கணக்கு போட்டு வெச்சிருக்கீங்க பாரு அதை சொல்லணும்அம்மாடி இந்த நிமிஷம் வரைக்கும் நான் எங்க அம்மா சத்தியமா , உனக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா? என்று அவன் பற்களை நர நரத்தபடி கேட்க

ம் புரியுது என்று அவள் கண்களில் நீர் கோர்த்த படி சொல்ல

அதுவரைக்கும் சந்தோஷம், என்று அவன் பெருமூச்சு விட

பின்ன ஏன் நீங்க யார்கிட்டையும் சொல்லாத ரகசியம் உன் கிட்ட மட்டும் சொல்றேன்னு சொன்னீங்க? இப்படி ஆம்பளைங்க ஆரம்பிச்சாலே வினை தான்னு எங்க அம்மச்சி சொல்லியிருக்கு என்று அவள் கூற

நீயும் உன் கூறுகெட்ட அம்மச்சியும், இத பாரு இன்னிக்கு நான் ஒன்னு சொல்லித்தரேன் அதை இந்த மண்டையில் ஏத்திப்பியா என்று அவன் கேட்க

ம் என்று அவள் தலையை ஆட்டினாள்

யாரவது ஒரு விஷயத்தை பத்தி பேச வந்தா அவங்க அந்த விஷயத்தை முழுசா சொல்லி முடிக்கிறவரைக்கும் குறுக்க பேசமா இருக்கணும் புரியுதா? என்று அவன் பாடம் நடத்த

சரி என்று பாடம் கற்றாள் அவள். பாடத்தை காற்றாளே தவிர அதை செயல்படுத்துவாளா?

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 03 - பிரேமா சுப்பையாDevi 2017-10-09 13:35
adutha episode enna Prema :Q: .. waiting to know
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 03 - பிரேமா சுப்பையாPrama 2017-09-27 15:16
Thank you Adharv, Saju,kavya,saaru Tamil, madhumathi, and Apoorva :thnkx: for your support
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 03 - பிரேமா சுப்பையாApoorva 2017-09-27 10:58
waiting to c how it all merges into the story line.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 03 - பிரேமா சுப்பையாmadhumathi9 2017-09-27 05:52
:clap: intha maathiri Pudhiyathaaga ullathum Nandraaga irukkirathu. Super. Waiting to read more :thnkx: :GL: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 03 - பிரேமா சுப்பையாTamilthendral 2017-09-26 22:41
Intha puthu muyarchi nalla irukku (y) aana entha linkum illatha maathirithan ippothaikku poguthu.. Neenga sonna mathiri aduthadutha updates-kaga waiting. :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 03 - பிரேமா சுப்பையாsaaru 2017-09-26 22:22
Ha supeeruuu pudhu murchiku valthukal prema
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 03 - பிரேமா சுப்பையாkavyakavya 2017-09-26 19:37
Nalathu......... Ana sathyama enaku puriyale....
Sekrama adutha update kodunga mam......
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 03 - பிரேமா சுப்பையாsaju 2017-09-26 19:14
HA HA SUPERRRRRRRR
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 03 - பிரேமா சுப்பையாAdharvJo 2017-09-26 18:57
Unga muyarchi Nala irukku madam ji adhu vettri pera vazhuthukal (y) ninga no feeling eppadi-um nanga puzzle full mudiravaraikum irundhu padichittu Tha vacate panuvom :D :P

Cute update ma'am :clap: guna Tha pavam ippadi oru innocent wife ah facepalm ippadi starting laya no mudiyala telling ammachi paduthuvanga poliruke so ninga brave soul ah irukanum sikrama unga screte sollunga adhuvaraikum nanga no naduvula interruption :-)

:thnkx: for this cool update (y)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top