(Reading time: 29 - 57 minutes)

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 05 - தீபாஸ்

oten

மிகவும் சந்தோசமாக கவலை என்பதே தெரியாது இருந்தான் ஆதித்தராஜன். அவனுக்கு கண்டிப்புடன் இருக்கும் அவன் அம்மாவை விட செல்லமாக அவனை வைத்திருக்கும் அவன் அப்பாவைத்தான் ரொம்பவும் பிடிக்கும்.

அதுவும் அவன் அப்படியே அவன் அப்பாவின் உருவத்தையே உரித்து வைத்து பிறந்திருந்தான் அவரை போல் பேச்சு நடை எல்லாம் அவரை கொண்டே இருந்ததாலோ அல்லது அவரை விட புத்திசாலியாக சிறு வயதிலேயே இருந்ததாலோ அல்லது ஜானகியின் கட்டுப்பாட்டில் சிறு வயதிலேயே எல்லாவற்றிலும் ஒழுக்கமானவனாக திறமைசாளியாக இருந்ததாலோ என்னவோ அவனின் அப்பா வேலாயுதத்திற்கு என் மகன் என்று ஆதித்தை கூறுவதில் அவ்வளவு சந்தோசக் கர்வம் வெளிப்படுவதை பார்த்திருக்கிறான். அவன் கேட்டு எதையும் அவர் மறுத்ததே இல்லை.

தனது அப்பா முதல்நாள் இரவு வாங்கி வந்த செஸ்போர்டில் அவருடன் விளையாடி விட்டு படுக்கைக்கு செல்ல இரவு நேரம் ஆனதால் அன்று காலை தாமதமாக எழுந்து ஸ்கூல் பஸ்ஸை மிஸ் பண்ணி விட்டான் ஆதித் .

எனவே தந்தை காரில் டிரைவருடன் ஸ்கூலில் வந்து இறங்கி தனது வகுப்புக்கும் போகும்போது வழி மறைத்து நின்ற தன தனது ஸ்கூலில் படிக்கும் மாணவன் நீ ஏன என் அப்பாவின் காரில் வந்து இறங்குகிறாய்? யார் நீ? என்று கேட்டான்.

அவன் கேட்டதும் அவனை முறைத்துப் பார்த்த ஆதித் அது ஒன்றும் உன் அப்பா கார் இல்லை. என் அப்பா கார். நான் இன்று ஸ்கூல் பஸ்ஸை மிஸ் பண்ணியதால் காரில் வந்தேன் என்று கூறி விட்டு தன் வகுப்பிற்கு சென்று விட்டான் ஆனால், அதன் மறுநாளில் இருந்து ஆதித்துக்கு பெரும் கோபம் ஏற்படும்படியான நிகழ்வுகள் ஸ்கூலில் அரங்கேற ஆரம்பித்தது.

ஆதித்தின் வகுப்பில் என்றுமே அவன்தான் பாடத்திலும் விளையாட்டிலும் முதலிடம், அவனை முந்தநினைத்து முடியாமல் அவன் மேல் கோபத்திலும் பொறாமையிலும் இருக்கும் அவன் வகுப்பில் அவனுக்கு அடுத்த மார்க் வாங்கும் சேகர் அன்று அவனை கடந்து போகையில் உடன் படிக்கும் மற்ற பையன்களிடம் “சாடையாக ஆதித்தை பார்த்து ஏதோ கூறுவதும்” அதற்கு அப்படியா…? என்னும் விதமாக ஆதித்தை அவனுடன் இருந்த மற்றவர்கள் பார்ப்பதும் தொடர்கதையாகிப் போனது .

அந்த விஷயம் அவன் அருகில் அமர்திருக்கும் அவன் நண்பனின் மூலம் அவன் காதுக்கு வந்ததும் ஆதித் கொதித்து போய்விட்டான். இடைவெளியின் போது வகுப்பைவிட்டு வெளியேறிய சேகரின்பின் வேகமாக வந்த ஆதித் “என் அம்மாவை என்னடா சொன்ன..? அப்படி சொல்வாயா? சொல்வாயா...?” என்று அடி பின்னிஎடுத்துவிட்டான் அவனை பதிலுக்கு அடிக்கமுயன்று, அது முடியாத காரணத்தால் சேகர் கோபமாக ஆத்திதை பார்த்து “ஆமாடா... உங்க அம்மா மாதேஷ்அண்ணாவின் அப்பாவுடைய வைப்பாட்டியாம். மாதேசின் அப்பா வேலாயுதம், அவனுக்கு மட்டும் தான் அப்பாவாம்” என்று கூறினான்.

அவன் அவ்வாறு கூறியதும் என்ன சொன்ன என்று மீண்டும் அவனை அடிக்க முயன்ற நேரம் அங்கு வந்த பி.இ.டிமாஸ்டர் விரைந்து இருவரையும் பிடித்து பிரித்து தனித்தனியாக முட்டி போட வைத்தார்.

பின் இருவரிடமும் எதற்கு சண்டை என்று கேட்டதும் இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு இருந்தனர். சண்டைக்கு என்ன காரணம் என்று திரும்ப திரும்ப கேட்டும் இருவரும் காரணத்தை சொல்லாததால் அவர் இருவரையும் இனி இது போல் சண்டை போடக் கூடாது என்று வார்ன் பண்ணி அனுப்பினார்.

ஆனால் அன்று ஸ்கூல் விட்ட பின்னும் சேகர் சொன்ன வார்த்தை உலகத்தை பாதி புரிந்தும் அறிந்தும் அறியாபருவத்து ஆதித்தை மிகவும் தாக்கியது. அவன் மாதேஷ் யார்? என்று யோசித்துக்கொண்டும் எப்படி என் அப்பா வேலாயுதத்தின் பேரை சொல்லி அவன் அப்பா என்று கூறி என் அம்மாவை தவறாக கூறலாம் என்று குழப்பத்திலும் கோபத்திலும் வகுப்பை விட்டு வெளியில் வந்து ஸ்கூல் பஸ் நிற்கும் இடத்திற்கு போய்கொண்டு இருக்கும் போது, தனது பாட்டியுடன் அங்கு நின்று கொண்டிருந்த மாதேஷ் அவனின் முன் காலை நீட்டி வழியை மறைத்தான்.

பார்த்தவுடன் தன மருமகனின் சாடையில் மாதேஷைவிட சற்று வளர்த்தியாக வந்துகொண்டிருந்த ஆதித்தராஜை பார்த்ததுமே திகுதிகு என வன்மம் ஏறியது மனோன்மணிக்கு. அவர்களின் காருக்குள் அமர்ந்தபடி மஞ்சுளாவும் அவனை பார்த்துக்கொண்டுதான் இருந்தாள்.

மேலும் அந்த கார் ஆதித்தின் அப்பாவுடையது அதை வேலாயுதம் அவர் மட்டும் உபயோகிக்க வைத்திருந்தார் மஞ்சுளாவிற்கு வேறு கார் வாங்கிகொடுத்திருந்தார் மேலும் அவரின் வெள்ளைநிற பி எம் டபிள்யூ காரில் மஞ்சுளாவை எங்கும் அழைத்துப்போனதில்லை

மேலும் குடும்பத்துடன் போவதென்றால் அவர்களிடம் உள்ள மற்ற காரில்தான் கூட்டிப்போவார். ஆனால் இன்று அவர் `   பி.எம்.டபிள்யூவண்டியை சர்வீசுக்கு விட்டிருந்ததால் தனது அழுவலகத்திற்கு வேறு காரில் சென்றிருந்தார்.

மேலும் அவரது ட்ரைவர் முருகன் சர்வீஸ் முடிந்த காரை வீட்டில் ட்ராப் பண்ண வந்தபோது மனோன்மணி தன பேரனிடம் காலையில் ஸ்கூல் போகும்போது சாயங்காலம் ஸ்கூல் முடிந்ததும் உன்னை கூப்பிட நான் காரில் வருகிறேன் நீ ஸ்கூல் பஸ்ஸில் ஏராதே , எனக்கு அந்த ஆதித்தை அப்பொழுது காட்டு என்று கூறியிருந்ததாள் தன மகள் மஞ்சுலாவோடு கிளம்பி வெளியில் வந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.