(Reading time: 29 - 57 minutes)

நீங்க என்ன நெனச்சு என்கிட்டே இந்த காசை கொடுக்குறீங்கனு எனக்குப் புரியல, அன்னைக்கு நான் ஹோட்டலில் உங்களின் மேல் ஆர்வம் இருபதாக காட்டியதுக்கு... நீங்கள் என்னை அண்ணன்... என்று கூப்பிட்டபிறக்கும், உங்களை வேறு எண்ணத்தில் நான் நெருங்க முயலமாட்டேன். ஆனால் கூடவேலை பார்க்கும் சக தோழனாக கூட உங்களால் என் உதவியை ஏற்றுக்கொள்ள முடியாத அபாக்கியவதியா நான்? என்று கேட்டான் .

அவன் அவ்வாறு கூறியதும் ரமேஸ் உங்களை தவறானவராக நான் நினைத்திருந்தால் உங்களிடம் முகம் கொடுத்தே நான் பேசியிருக்க மாட்டேன். ஆனால் நான் கிராமத்தில் வளர்ந்தவள் அந்நிய ஆண்களிடம் தேவையில்லாமல் நின்று பேசுவதை கூட என் அம்மா அனுமதிக்க மாட்டார்கள். அதனால்தான் சட்டென்று உங்களின் உதவியை பெற கொஞ்சம் யோசனயாகிவிட்டது.

இப்போ என்ன, உங்களிடம் நான் இந்த பணத்தை கொடுக்ககூடாது. சரி.. இனி நீங்களும் என் நண்பன். அதனால் காலத்தில் உதவிய என் நண்பனுக்கு நன்றி என்று கூறியவள்.காசு கொடுத்ததுக்கு போய் இப்படிபேசி போன தலைவலியை திரும்ப வர வச்சுட்டீன்களே! என்றவள் மாத்திரையை எடுத்து தண்ணீரை அருந்தியவள் முகம் தனது மொபைல் ஒலியில் திரும்ப கலவரமானது. அதனை எடுத்துப்பார்த்தவள் தனது அம்மா அழைத்ததை பார்த்து சற்று பதட்டம் குறைந்தாள்.

போனை அட்டன் செய்தவள். அம்மா! நான் நல்லா இருக்கேன்மா.... வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களாமா... இப்போ ஆபீஸ்ல கொஞ்சம் வேலயாய் இருக்கேன் ரூம் போனதும் பேசறேன்மா என்றவள் தொடர்பை துண்டித்தாள். பின் ஆசுவாசமாக மூச்சை எடுத்தவள் யோசனையுடன் தன முகம் பார்த்தபடி இருந்த ரமேசை பார்த்து தன முகபாவனையை மறைத்தபடி சிரித்த முகத்தோடு என்ன ரமேஸ் அப்படி பார்கிறீங்க! என்று கேட்டாள்.

“நான் உங்கள் நண்பன் தானே அழகுநிலா” என்று கேட்டதும், ஆம். என்று தலை அசைத்து அவளும் யோசனையுடன், இப்போ எதுக்கு திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறீங்க ரமேஸ் என்றாள்.

நீங்க “ஆம்” என்று சொன்னதால் கேட்கிறேன், ஏதேனும் பிரச்சனையா அழகுநிலா. வேலையில் சேர்ந்தில் இருந்து நான் பார்த்த துறுதுறுப்பான அழ்குநிலாவாக இன்னைக்கு நீங்க இல்லை. காலையில் இருந்து டல்லாகவும் அடிக்கடி உங்களுக்கு போன் வருவதும் போன் வந்ததும் நீங்கள் டென்சன் ஆவதையும் நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஏதேனும் பிரச்சனையா? என்னிடம் கூறும் விசயமாக இருந்தால் நண்பனாக நினைத்து சொல்லுங்களேன், என்னால் என் தோழியை இப்படி பார்க்க கஷ்டமாக இருக்கு என்றான்.

துன்பம் வரும்போது தான் உண்மையான நண்பனை நீ அடையாளம் காண முடியும் என்பதற்கு இணங்க அவளின் சோர்ந்த முகம் பார்த்தே உதவத்துடிக்கும் அவனின் செயலில் கொஞ்சம் ஆறுதல் அடைந்தவள் தன்னை இயல்பாக அவனிடம் காட்டிகொள்ள முயன்றாள்.

எனவே குறும்புடன் அவனை பார்த்து இப்போதான் நான் உங்களை நண்பன்டா என்று சொல்லி ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை, அதற்குள் என்னை காலையில் இருந்து சைட் அடிச்சுகிட்டு இருந்ததாக என்னிடமே சொல்றீங்களே! என்ன திரும்பவும் உங்களை பார்த்து அண்ணா என்று கூப்பிட வைக்கப் போகிறீர்களா? என்று அவன் பேசும் பேச்சை திசைதிருப்ப குறும்புடன் கேட்பதுபோல் நடித்தாள்.

அதற்கும் அசராமல் பேச்சை மாற்றாதீர்கள் அழகுநிலா! உங்களுக்கு நான் உங்களின் விசயத்தில் தலையிடுவது பிடிக்கவில்ல்லை எனில் நேராக சொல்லிவிடுங்கள், சுமதி பிறந்தளால் அன்று பார்ட்டிக்கு ஹோட்டல் போனபோதும் நீங்க ரெஸ்ட்ரூம் போனபோது எதுவோ அசம்பாவிதம் உங்களுக்கு நடந்ததை என்னால் யூகிக்க முடிந்தது. அன்றைக்கும் உங்கள் முகம் வாடியபோதே, என்னபிரச்சினை? என்று விசாரித்து உதவவேண்டும் என்று உந்துதல் ஏற்பட்டது

ஆனால் நீங்கள் நான் கேட்பதை விரும்பமாட்டீர்கள். மேலும் உரிமையோடு உங்களிடம் என்னால் எப்படி ஏதும் பிரச்சனையா? என்று கேட்க்கமுடியாதே! ஆனால் இன்று நான் உங்களின் நண்பன் என்று நீங்கள் ஏற்றுக்கொண்டதால் தான் கேட்டேன் என்று கூறினான்.

அன்று நடந்ததை யாரும் கவனிக்கவில்லை என்று தான் நினைத்திருந்தது தவறு போல என்று மனதினில் நினைத்தவள், ரமேசுக்கு தெரிந்தால் தனக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுவார் என்றும், நம் முகம் பார்த்தே வருத்தத்தை போக்கவேண்டும் என்று நினைக்கும் நண்பனிடம் மறைப்பது கூடாது என்று அவனிடம் கூறி என்ன செய்யலாம் என முடிவெடுக்கலாம் என்று நினைத்தாள்.

எனவே, பிரச்சனை தான் ரமேஸ். அன்று ஹோட்டலில் எனக்கு நடந்த பிரச்சனை முடியாமல் போன் ரூபத்தில் இன்னும் என்னை துரத்துகிறது என்று அன்று நடந்ததையும் அந்த ஹேன்சம் மேன் தன்னை காப்பாற்றியதையும், அதனை தொடர்ந்து அன்று தன்னை வீடியோ எடுத்த போனை சுவிட்ச் ஆப்செய்து வைத்துக்கொண்டதையும், மேலும் நேற்றிரவு தனக்கு வந்த மிரட்டல் கால் பற்றியும் கூறினாள் அழகுநிலா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.