(Reading time: 29 - 57 minutes)

தான் சொன்னதற்கு மாதேஷின் அப்பாவும் தன அப்பாவும் வேறு வேறு என்ற வார்த்தையை தன அம்மா வாயில் இருந்து வருவதற்குப் பதில் நானும் அவரின் பொண்டாட்டியே! என்ற வார்த்தையை கேட்ட ஆத்திதுக்கு கோபம், ஆத்திரம் அவமானம், என மாறிமாறி தாக்கியது தன் அம்மாவின் அருகாமையை விட்டு எழுந்து தள்ளி நின்று கொண்டவன்

அப்போ!.. மாதேசின் அப்பாவைத்தான் நீங்கள் கல்யாணம் செய்துகிட்டீங்களா? என்று கேள்வியை கேட்டான் ஆதித். அவனின் கேள்வியில் அடிபட்ட பார்வையோடு நிமிர்ந்து பார்த்த ஜானகி தன மகனிடம்,

நான் ஆசை பட்டு ஒன்றும் அவரை கல்யாணம் செய்யவில்லை ஆதித். என்னிடம் நீ இப்படிபட்ட கேள்வியை எல்லாம் கேட்காதே ஆதித் என்னால் தாங்க முடியவில்லை, என்று கதறினால் ஜானகி.

பிறகு நான் யாரிடம் கேட்பது என்னை என் ஸ்கூலில் படிக்கும் ஸ்டூடன்ட் முன் நிற்க வைத்து கேட்டார்களே எனக்கு மனசு வலிக்க வலிக்க பேசினார்களே! மாதேஷின் பாட்டி அவமானப்படுத்தினார்களே! எனக்கு அப்படியே அவமானத்தில் பூமிக்குள் புதைந்து போய்விடமாட்டோமா... என்பதுபோல் இருந்ததே. இனி எனக்கு மாதேசின் அப்பா வேண்டாம்...வேண்டாம் . அவரின் காசு காசுபணம் எதுவும் வேண்டாம். அதற்காகத்தானே நீங்கள் அவருடன் வாழ்வதாக கூறினார்களே! வாங்க எங்கயாவது போவோம். மத்தவங்க காசு நமக்கு வேண்டாம் என வெறி பிடித்தவன் மாதிரி கத்தினான் ஆதித்.

என்னடா சொன்ன அப்பா வேண்டாமா? அப்படி சொல்வாயா? வீட்டை விட்டு வெளியில் போவோம் என சொல்வாயா? சொல்வாயா? என்ற படி அவனை கைவழிக்க அடித்து வெளுத்து பின் ஓய்ந்து அழுகையுடன் உட்கார்ந்து விட்டார் ஜானகி .

இரண்டு நாளாக ஸ்கூலுக்கும் செல்லமாட்டேன் உங்களிடம் நான் பேசவும் மாட்டேன் என்று அழுத்தத்துடன் இருந்த மகனை பார்த்த ஜானகிக்கு நெஞ்சம் வெடிப்பது போல் துக்கம் தளும்பியது .

இரண்டு நாளாக ஜானகியும் வேலாயுதமும் எவ்வளவோ சமாதானப் படுத்தி பார்த்தாலும் இருவரின் முகத்தைக் கூட பார்க்க மறுத்துவிட்டான் ஆதித்.

இன்றும் சாப்பாட்டை எடுத்து மேஜையின் மீது வைத்துவிட்டு ஆதித் சாப்பிட வாடா! நீ சரியா சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு. உன் கோபத்தை எங்க மேல் காட்டுவது போதாது என்று சாப்பாட்டு மேலேயும் காண்பிக்காதே என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பொது,

அதை காதில் வாங்காது எழுந்து உட்கார்ந்த இடத்தை விட்டு போகப் போனவனைப் பிடித்து கோபத்துடன் அடிக்க ஜானகி கை ஓங்கினாள் அப்போது தூங்கி எழுந்து வந்த வேலாயுதம் ஜானகியின் கையை பிடித்து தடுத்தார்.

ஆதித்! நீ இப்படி பேசாமல் இருந்தால் எப்படி? உன் அம்மாவிற்கு நீயும் நானும் தான் எல்லாமே!. நீ இப்படி இருந்தால் அவளால் தாங்க முடியாது என்றார்.

அவர் அப்படி கூறியதும் ஆமாம்...! அவர்களுக்கு நாம் மட்டும் தான் எல்லாமே ஆனால் உங்களுக்கு அப்படியா?

என் அம்மா உங்களின் காசுபணத்துக்காக உங்களை எங்களோடு வைத்துக்கொண்டதாகவும் நீங்கள் எனக்கு அப்பா கிடையாது என்று என் கூடப் படிக்கும் அத்தனை பேர் முன்னாடியும் என்னை பேசியபிறகு எப்படி அசிங்கமில்லாமல் அவர்கள் கூட சேர்ந்து என்னால் படிக்க முடியும் என்றவன்,

ஜானகியிடம் திரும்பி அம்மா..... வாமா! நாம வேறு ஊருக்குப் போய்விடலாம் இங்க இருக்கிறவங்க என்னையும் உன்னையும் கேவலமா பார்க்கிறாங்கம்மா. நமக்கு இந்த ஊர் வேண்டாம் என்று சொல்லியபடி கதறி அழுதான்.

தன மகனின் வார்த்தையில் அடிபட்ட பார்வையை தன கணவன் மீது செலுத்திய ஜானகி நான் சொன்னேனே ஆத்திரத்தில் உண்மையை உணராமல் நீங்க என்னை தண்டிப்பதாக நினைத்து மஞ்சுளாக்கா உங்கள் வாழ்க்கையில் இருக்கும் போது என்னையும் நிர்பந்தத்தில் நிற்க வைத்து, என்னை அக்காவிற்கு துரோகம் செய்யும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டீர்கள். நான் செய்த பாவத்திற்கு இன்று என் மகன் சிலுவை சுமக்குமாறு ஆகிவிட்டதே! நான் பாவி.. பாவி... என் முகத்தை அறைந்து கொண்டு கதறினால் ஜானகி,

அப்படி சொல்லாதே ஜானகி! என்றபடி ஜானகியின் கையை பிடித்தவர், என்னிடம் காசுபணம் அளவில்லாமல் இருந்தாலும் நிம்மதி என்பது உன்னிடமும் ஆதித் திடமும்தான் எனக்கு கிடைகிறது. என்னுடைய நிம்மதிக்காக உன்னை நான் நிம்மதியில்லாமல் செய்துவிட்டேன். நான் தான் பாவி! நீ பவித்தரமானவள் ஜானகி என்றார்.

பின் ஆதித்திடம் நான் உன்அப்பாடா! என்றவர் அவனின் கை பிடித்து அங்கிருந்த ஆளுயர கண்ணாடிமுன் நிறுத்தியவர் பாருடா ,நீ என் மகன் என்பது உலகம் அறிந்த உண்மை. யார் இல்லை என்று சொன்னாலும் உண்மையை மாற்றவோ மறைக்கவோ முடியாது. என் மகன் நீ என்று சொல்லும் போது எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்குது தெரியுமா? உன்னை, என் ஜானகி எனக்கு கொடுத்த பொக்கிசமாக நான் நினைக்கிறேன் ஆதித் என்றார்.

இல்லப்பா நீங்க எனக்கு வேண்டாம். இனி நான் உங்களை அப்பான்னு சொல்ல மாட்டேன். நானும் அம்மாவும் வேறு எங்கயாவது போறோம் எனக்கு இங்க யார் முகத்தையும் பார்க்க பிடிக்கல என்று அழுதான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.