(Reading time: 29 - 57 minutes)

அப்பொழுது அவளது கணவனின் கார் சர்வீஸ் முடிந்து பளபளவென்று வந்ததும் இதில் என்னை கூட இதுவரை இவர் ஏற விட்டதில்லை இந்த காரில் அவளுடைய மகனை ஸ்கூலுக்கு அனுபியிருகிறாரே! என்ற கொதிப்புடன் முருகா காரை எடு என்று கூறியதும், தயக்கத்தோடு உங்க காரை எடுக்கவா அம்மா என்று பவ்யமாக கேட்டான்.

உடனே ஆத்திரத்துடன் அந்த வெள்ளை பி.எம்.டபிள்யூ காரில் விறுவிறு என்று சென்று ஏறி கதவை டமார் என்று அறைந்து சாத்தி ம்....எடு இந்த காரை என்று கர்ஜித்தாள்

அவளிடம் எதிர்த்துப்பேசமுடியாமல் அந்தகாரிலேயே மஞ்சுளாவையும் அவளின் அம்மா மனோன்மணியையும் ஸ்கூலுக்கு அழைத்து வந்திருந்தான் வேலாயுதத்தின் விசுவாசியான முருகன்.

ஸ்கூல் வரும் வரை அவனுக்கு அந்த காரில் அவரது மனைவியை கூப்பிடுவருவதற்கு தன் ஐயா தன்னை கடிந்து ஒன்றும் சொல்லமாட்டார் என்று தான் நினைத்திருந்தான் முருகன்.

ஆனால் ஸ்கூல் வளாகத்திற்குள் கார் நுழைந்ததுமே காரை எதிர்கொண்டு வந்த மாதேஷை பார்த்ததும் காரை திருப்பி எடுக்க தோதாக நிப்பாட்டிய முருகனுக்கு ஐயோ! சின்னய்யா ஆதித், காரையும் தன்னையும் பார்ப்பதற்குள் மாதேஷ் ஐயா வந்துவிடவேண்டுமே! என்ற பரபரப்பு உண்டானது

மேலும் அன்று ஆதித்தை ஸ்கூலில் இறக்கிவிட்டு திரும்புகையில் மாதேஷ் தூரத்தில் இருந்து தன்னை பார்த்து கூப்பிட்டதை நான் கவனிக்காதது போல் பாவலா காண்பித்து வந்துவிட்டேன். அதேபோல் இன்று ஆதித் பார்ப்பதற்குள் சென்றுவிடவேண்டும் என்று என்ஜினை அணைக்காமலே இருந்தான் முருகன்.

ஆனால் கார் நின்றதும் திரும்பி செல்வதற்கு தோதாக திருப்பி, பின் என்ஜினை அணைக்காமல் இருந்த முருகனை பார்த்து உடனே போகணும் என்ற அவசரமில்லை முருகா, அம்மா கொஞ்சம் இறங்கனும் என்று சொல்லி தனது அன்னையின் பக்கம் இருந்த கதவை காண்பித்து நீ போம்மா நான் இங்க உட்கார்த்தே அவனை பார்கிறேன் என்று கூறி காரின் உள்ளேயே அமர்ந்து தன மகன் கால் நீட்டி ஆதித்தை மறைத்ததை பார்த்தாள் மஞ்சுளா.

முருகனும் அதை பார்த்து அதிர்ந்தான். முருகன் தனது பத்தொன்பது வயதில் இருந்து கடந்த 20வருடமாக வேலாயுதத்தின் நம்பிக்கையான விசுவாசமான கார் ட்ரைவர் ஆதலால் அவனுக்கு தனது ஐயாவின் குடும்பவிபரம் முழுவதுவும் தெரியும் மேலும் மஞ்சுளா எப்பொழுதும் தன்னை அதிகாரத்துடனும் சற்று தள்ளி நிறுத்தி வேலை வாங்கும் மூத்த அம்மாவை விடவும், அவரின் மகன் மாதேஷ் அலட்ச்சியத்துடன் முருகா.. என்று தலையில் அடித்து கூப்பிடுவதுபோல் அதிகாரமாய் தன்னை கூப்பிடும் சின்னையாவை விட

தன்னை தன குடும்பத்தில் ஒருவனாக எண்ணி முருகன் அண்ணா என்று கூப்பிடும் ஜானகியின் மீது அளவுகடந்த மரியாதையும் அவளது மகன் “முருகன் மாமா” என்று கூப்பிடும் தனது ஐயாவை போன்றே இருக்கும் சின்ன ஐயா ஆதித்தின் நடை உடை செயல் மீதும் தனி பிரேமமே கொண்டு இருந்தான்.

இப்பொழுது போல் அப்பொழுது எல்லோரிடமும் மொபைல் கிடையாது. அங்கிருந்த சூழலை அவனால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது தனது பிரியமான சின்ன ஐயா ஆதித்தை தனது ஐயாவின் மூத்த மனைவியின் குடும்பம் அவமானப்படுத்துவதை தடுக்கவும் முடியாமல் தனது ஐயாவிடம் தெரிவிக்கவும் முடியாமல் மனம் வழிக்க சும்மா வேடிக்கை பார்க்கமட்டுமே முடிந்தது.

தன முன் காலை நீட்டி வழிமறித்த மாதேஷை கனல் வீசும் கண்களுடன் பார்த்தான் ஆதித்

பின் தன காலைகொண்டு அவன் காலை ஒதுக்கி செல்ல முயன்ற ஆதித்தை மனோன்மணி தன பேரன் மாதேஷிடம்

இவன்தான் அந்த ஜானகியின் மகன் ஆதித்தா...? என்று அவனை அடையாளம் கண்டுகொண்டாலும் தன பேரனிடம் கேட்டால் மனோன்மணி

மாதேஷ் என்ற பேரை கேட்டதும் இன்று சேகருடன் நடந்த சண்டையில் இருந்து யார் அந்த மாதேஷ் என்று நினைத்துக்கொண்டு வந்த ஆதித்துக்கு அவன் இவன்தானா...! என்று நினைத்தபடி அவனின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மனோன்மணியையும் ஏறிட்டுப் பார்த்தான் .

“ஆமாம் பாட்டி” என்று கூறிய மாதேஷிடம். மனோன்மணி பார்கான்பாரு பெரிய இவனாட்டம், இவனை நம்ம வீட்டு காசில இவ அம்மா நல்லா சோறு போட்டு வளர்த்திருக்கா... என்றதும்.

ஆதித் மனோன்மணியை பார்த்து எங்க அம்மா பெரியவங்களை எதிர்த்துபேசக்கூடாது மரியாதை கொடுக்கணும் என்று சொன்னதினால் தான் நீங்கள் என்னை இப்படி பேசியும் பொறுத்துக்கிட்டு இருக்கேன் இல்லையின்னா? என்றவன் “சற்று தள்ளி கிடந்த கல்லை காட்டி” அதை கொண்டு உங்கள் மண்டையை உடைத்திருப்பேன் என்று கர்ஜித்தான்.

அவன் அவ்வாறு கூறியவுடன் மாதேஷ், டேய்! என் பாட்டியை பார்த்தா மண்டையை உடைப்பேன் என்று சொன்ன என்று அவனை அடிக்கப்போக அவன் தன்னை அடிக்க வருவதை உணர்ந்து டக்கென்று ஆதித் நகர்ந்துவிட மாதேஷ் நிலை தடுமாறி விழுந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.