அவள் கூறியதும் அன்று உங்களிடம் வம்பிளுத்தவன் மினிஸ்டர் மகன் என்று வேறு சொல்லியிருக்கிறான். அதனால் ஜாக்கிரதையாக ஹேண்டில் பண்ணனும் என்றவன், அவன் உங்களை எந்த நம்பரில் இருந்து தொடர்புகொண்டான் என்பதை உங்களின் போனில் பார்த்து நம்பரை என்னிடம் கொடுங்க அந்த நம்பரை வச்சு அவனை கண்டுபிடிக்க ட்ரை பண்ணலாம் என்றான்.
அவன் சொன்னதும் அவன் இதுவரை என்னிடம் ஏழுதடவை பேசியிருக்கான் ஆனால் எல்லாமே வேறுவேறு நம்பரில் இருந்துதான் வந்தது மேலும் அந்த நம்பர் எல்லாமே மொபைல் நம்பர் மாதிரி இல்லை நெட்டில் இருந்து என்னிடம் பேசியிருக்கிறான் என்றாள்.
மேலும் நான் எனக்கு நடந்த வீடியோ பதிவை டெலிட் செய்துவிட்டு அவனிடம் கொடுக்கலாம் என்று பார்த்தால் அதை என்னால் அதற்குரிய லாகின் பிங்கர்ப்ரின்ட் இல்லாமல் இயக்கவே முடியல!
மேலும், அவன் என்னை பற்றி எல்லாமே தெரிந்துவைத்திருகிறான். என் போன் நம்பர் உட்பட என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவளின் மொபைல் ஒலிஎழுபியது. கலவரத்துடன் அதனை எடுத்து பார்த்தால் நிலா அதில் பிரைவேட் நம்பர்காலை பார்த்ததும் கலவரத்துடன் ஆன் செய்து காதில் வைத்தவளிடம் ,
என்ன கேர்ள்! உதவிக்கு போயும் போயும் அந்த ரமேஸ் தான் உனக்கு கிடைத்தானா? அடங்கி சொல்றதை மட்டும் கேளு, என் பலம் தெரியாமல் மேலும் உனக்கு சிக்கலை இழுத்துக்கொல்லாதே! மணி 1:30 ஆகிடுச்சு சரியா 3 மணிக்கு நீமட்டும் தனியா மொபைலை எடுத்துட்டு மாலுக்கு வந்து சேரனும்! என்று கூறி தொடர்பை துண்டித்தான் .
அந்த போன் கால் வந்ததும் வேகமாக தன்னை சுற்றி கண்களை ஓட்டினாள் அழகுநிலா. ஆபீஸ் உள்ளேயும் தான் கண்காணிக்கப்படுவதை நினைத்து அவளின் ரத்த அழுத்தம் உயர்ந்தது. ரமேஸ் உங்களோடு இப்ப நான் பேசுவதைக்கூட அவன் சொல்றான். எனக்கு என்னவோ இது பெரிய நெட் வோர்க்காக எனக்கு தெரியுது. அந்த பதிவிற்காகவோ? இந்த காஸ்லிபோனுக்காகவோ? ஒன்றும் அவன் என்னிடம் இதை கேட்கவில்லை மேலும் ஏதோ ஓர் ரகசியம் இந்த போனில் இருக்கு! அதனால் தான் அவன் இத்தனை தீவிரம் காண்பிக்கிறான்.
இதில் ஆபத்து நிறைய இருக்கும் போல ரமேஷ். அது உங்களையும் பாதிக்க வேண்டாம். நான் கிளம்பறேன். மதியம் பெர்மிசன் போட்டுவிட்டு நன் மட்டும் அந்த மாலுக்கு போகிறேன் என்றாள். ரமேஸ் பதில் கூறவருவதை பார்த்து, எதுவும் பேசாதீங்க!.. என்றவள் தனது டீம் லீடரை பார்த்து லீவ் எடுபதற்கு விரைந்தாள்.
----தொடரும்----
{kunena_discuss:1144}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.