Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 29 - 57 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 04 - தீபாஸ்

oten

வேலாயுதம் மஞ்சுளாவிடம் முகம் கொடுத்து பேசவில்லை, இன்று காலை சாப்பிட மேஜையில் உட்கார்ந்தவர் தனக்கு பரிமாறிய மஞ்சுளாவிடம் உன் மகன் சென்னையில் தொழில் தொடங்க ஓர் இடம் பார்த்திருப்பதாக சொன்னாயே அந்த இடத்தை பேசி முடிச்சாச்சு. அந்த இடம் முழுவதுமே மாதேஷ் பெயரிலேயே நாளைக்கு ரெஜிஸ்டர் பண்ணிவிடலாம் என்று அவனிடம் சொல் என்றார் .

அந்த பிரச்னைக்கு பின் தன் கூட முகம் கொடுத்து பேசாத தன் கணவர் தன்னிடம் பேசியதும், மேலும் தான் கேட்டதுபோல் தன் மகனுக்கு தொழில் தொடங்க இடமும் வாங்கி கொடுத்து விடலாம் என்றதும் மஞ்சுளாவிற்கு சந்தோசமாக இருந்தது .

முகம் முழுவதுவும் சிரிப்பாக இன்னும் கொஞ்சம் பொங்கல் போடவாங்க என்று கூறியவள், “நீங்கதான் நான் கேட்டதுக்குப் பிறகு சென்னைக்கே போகவில்லையே பிறகு எப்படிங்க, அவன் பார்த்த இடம் பற்றி உங்களுக்கு தெரிந்து பேசி முடிச்சீங்க,” “மாதேஷ் எதுவும் உங்ககிட்ட போன் பண்ணி டீடைல்ஸ் சொல்லி எல்லா ஏற்பாடும் பண்ணிட்டானா” என்று கேட்டாள்.

அவன் என்னைக்கு என்கிட்டே நல்லபடியா பேசியிருக்கான்? இங்க உள்ளவங்க எப்படி அவனை என்கூட நல்லபடி பேச விடுவாங்க? என்று தன் மாமியாரை ஓர் பார்வை அழுத்தமாக் பார்த்தபடி கூறினார்.

பிறகு எப்படிங்க? என்று கேட்டாள் மஞ்சுளா, அவளின் மேல் ஓர் பார்வையை செலுத்தியவர் இதைக்கூட என்னால் இருந்த இடத்தில் இருந்து தெரிஞ்சுக்க முடியலைன்னா நான் இவவளவு பெரியஆள் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமே இல்லை என்றவர், நான் சொல்றதுக்கெல்லாம் மாதேஷ் சரி சொன்னா அவனுக்கு அந்த இடத்தை நாளை காலையில் அவன் பெயரில் ரெஜிஸ்டர் பண்ணி கொடுக்கின்றேன் என்று சொல்லு என்றார் .

முதலில் நாளைக்கு ரெஜிஸ்டர் பண்ணலாம் என்று கூறி தன்னை இணக்கமாக பேசவைத்துவிட்டு இப்போ எதுவோ அவர் சொல்வதற்கெல்லாம் சரி சொல்லணும் என்று சொல்கிறாரே..! ஏதோ வில்லங்கமான ஒன்றை கூறப் போகிறார் என்பதை உணர்ந்த மஞ்சுளா. நீங்க முதல்ல சொல்லுங்க என்று முயன்று தன் குரலில் கடுமையை காட்டாதவாறு கூறினாள்.

அவன் அவனுடைய பிரன்ட் வசந்த் கூட சேர்ந்துதான் கம்பெனி ஆரம்பிக்க பிளான் போட்டுருக்கான். அந்த வசந்த் பையன் திறமையானவன்தான். ஏற்கனவே பிசினெஸ் செய்துகிட்டுதான் இருக்கான் .

என்ன! இன்னும் கொஞ்சம் அவன் பிஸ்னஸ்பார்கிறதை விரிவா பார்க்கணும் என்று நினைக்கிறான் ஆனால் செய்றதுக்கு நிறைய காசு வேணும், பயபுள்ளைக்கிட்ட அவ்வளவு காசு இல்ல.

அதனால் தான், நம்ம பையனை பார்த்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்சா செலவ பகிர்ந்து லாபத்தையும் பகிர்ந்துகிடலாம் என்று பிளான் போட்டு இடம் பார்திருக்கிறார்கள்.

ஆனா! நான் என்ன சொல்றேன்னா, காசு முழுவதுவும் நம்ம பையனே போடட்டும் அந்த வசந்தை வொர்கிங் பார்ட்னராக இருக்கச் சொல்லலாம், நம்ம மாதேஷ் அப்பப்ப அங்க போய் பார்த்துக்கொள்ளட்டும் மத்தபடி அவன் இங்கிருக்க பிஸ்னசை இங்க இருந்து பார்த்துக்கிட்டா போதும், இதுக்கு சம்மதம் என்றால் அந்த இடத்தை அவன் பேருக்கு நாளையே ரெஜிஸ்டர் பண்ணிடலாம் கேட்டுச் சொல்லு என்றவர் கைகழுவ எழுந்துச் சென்றுவிட்டார்.

அவர் சென்றதும், டைனிங் டேபிளின் சேரில் உட்கார்ந்து யோசனையுடன் இருந்த மகளின் அருகில் வந்து அமர்தார் மனோன்மணி. தன் தோளில் தொட்ட அம்மாவை திரும்பிப் பார்த்த மஞ்சுளா, அவர் சொல்றது போல் மாதேஷை சென்னையில் ஆரம்பிக்கப் போகும் தொழிலுக்கு முதல் போடச்சொல்லி அவன் நண்பனை வொர்கிங் பார்ட்னராக இருக்கச் சொல்லிடலாமா அம்மா . இங்கிருக்கிற பிசினசை அவன் இங்க இருந்தாத்தானே கத்துக்கிட்டு காப்பாத்த முடியும் என்று கூறினாள்

அவள் கூறியதை கேட்ட மனோன்மணி உன் புருஷன் வெளியில மட்டும் பிசினஸ் பார்க்காம குடும்பத்துக்குள்ளேயும் அந்த திருக்கை கொண்டுவந்து உன்னை மடக்கிட்டாரு மஞ்சு. நீ இன்னும் விபரம் தெரியாதவளாகவே இருந்தால் எப்படி? என்றாள்

என்னம்மா சொல்றீங்க! எனக்கு கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லுங்களேன் என்றாள் மஞ்சுளா.

அடியே உன் மகன் அங்க இருக்கிறது, உன் புருசனுக்கு அவளை பார்க்கப் போவதற்கு இடைஞ்சலா இருக்குது. இவர் அங்க போனதும் விஷயம் கேள்விப்பட்டா இவன் நேரவே அவரை பார்க்கப் போகுற சாக்கில் அங்க இருக்கிற அவளையும் அவ மகனையும் உரசிப்பார்த்துடுவான்றதால அவனை சென்னையை விட்டு நகட்டப் பாக்கறாரு! நீ பிடி கொடுத்துடாத என்றாள்.

சென்னையில்.....,

மாதேஷ்க்கு அவனின் தந்தை தனக்கு போட்ட கண்டிசனை தன அம்மா போனில் சொன்னதில் இருந்து செய்வதறியாது தவித்தான், ஏற்கனவே இதுவரை தான் அவர்களின் குடும்ப பிசினசை பார்க்காமல் என்ஜாய் செய்தது பொருக்காதுதான் தன் தந்தை தன்னை கூப்பிட்டுவைத்து ஒன்னு ஒழுங்கா வந்து எல்லாத்தையும் பார்த்துக்கோ..., இல்லாட்டி நான் உன் கிரிடிட்கார்டு,டெபிட் கார்டு மற்றும் உனக்கு செலவுக்காக ஆபீசில் அக்கவ்ண்டில் எடுக்கும் பணம் எல்லாவற்றையும் முடக்கிவிடுவேன், கையில் காசு இல்லாமல் இருந்தாத்தான் உனக்கு உழைத்து சம்பாதிக்கணும் என்ற எண்ணம் வரும் என்று கூறினார்

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8 
 •  Next 
 •  End 

About the Author

Deebas

Latest Books published in Chillzee KiMo

 • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
 • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
 • Manathil uruthi vendumManathil uruthi vendum
 • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
 • Nethu paricha rojaNethu paricha roja
 • ThaayumaanavanThaayumaanavan
 • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
 • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Completed Stories
On-going Stories
 • -NA-
Add comment

Comments  
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 04 - தீபாஸ்Tamilthendral 2017-09-13 16:20
Good epi Deepa (y)
Mobile vachuttu intha makkal ennavellam seyranga :angry:
aduthu enna :Q:
eagerly waiting
Reply | Reply with quote | Quote
# ஒளிதருமோ என் நிலவு...?-04-தீபாஸ்Deebalakshmi 2017-09-13 21:34
Thank you Tamilthendral :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 04 - தீபாஸ்Apoorva 2017-09-13 11:25
nice ud.

Story flow is very interesting
Reply | Reply with quote | Quote
# ஒளிதருமோ என் நிலவு-04-தீபாஸ்Deebalakshmi 2017-09-13 21:30
thank you Apoorva :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 04 - தீபாஸ்Anubharathy 2017-09-12 16:34
antha mobile naala marubadiyum prachanaiyaa?? nila eppadi samalikka poraanga? Interesting epi. Waiting to read more. :GL: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 04 - தீபாஸ்Deebalakshmi 2017-09-12 22:00
இன்று மொபைல் நமக்கு பலவிதத்தில் உதவினாலும் இதுபோன்ற தவறானவர்களால் பல தொல்லைகளையும் நமக்கு தருவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.தொடர்ந்து வாசித்து கமெண்ட் தாரும்கள் தோழியே. .thank you Anubharathy :thnkx:
Reply | Reply with quote | Quote
# OTENAkila 2017-09-12 15:58
Hi
Interesting EPI.
Will Nila endup with problems?
Why this sodhanai for her?
How Adhi and Nila are going to join?
Want to read more interesting EPIs with frequent updates
Reply | Reply with quote | Quote
# ஒளிதருமோ என் நிலவு...?-04-தீபாஸ்Deebalakshmi 2017-09-12 21:54
Thank you Akila. Nila is our heroin because she stands against the issues .I would kindly ask you to continue sharing comment .தொடர்ந்து கமெண்ட் தருவதற்கு நன்றி :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 04 - தீபாஸ்katherine dass 2017-09-12 15:38
nice story. well done :Q:
Reply | Reply with quote | Quote
# ஒளிதருமோ என் நிலவு...?-04-தீபாஸ்Deebalakshmi 2017-09-12 21:16
Thank you Katherin Dass :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 04 - தீபாஸ்madhumathi9 2017-09-12 14:55
:no: nilakku entha problemum varaathillaiya? Adhith mana nilaiyai pirinthu kolla mudigirathu. Waiting to read more. :clap: :thnkx: 4 this epi. Adutha epiyai padikka miga aavalaaga ethir paarkkirom. :thnkx:
Reply | Reply with quote | Quote
# ஒளிதருமோ என் நிலவு...?-04-தீபாஸ்Deebalakshmi 2017-09-12 21:13
பிரச்சனைகளை எதிர்கொண்டு வெல்வதால் தான் நம் நிலா ஹீரோயின் ஆக முடியும் .ஹீரோயின் ரோல் ஏற்பது ஈசியா? தொடர்ந்து படித்து கருத்தை தெருவிப்பதற்கு என் நன்றி.தொடர்ந்து கமெண்ட் தருமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறேன் madumathi :thnkx:
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 04 - தீபாஸ்Priyanka MV 2017-09-12 14:04
Nice epi sis
Nila ku marubadi prblm ah??
Kadavule girls ku evlo prblm indha society la??
Adhith help pannuvara ila nila ve samalichiduvangala??
Waiting to knw that......
Reply | Reply with quote | Quote
# ஒளிதருமோ என் நிலவு...?-04-தீபாஸ்Deebalakshmi 2017-09-12 21:04
சமூகம் மட்டும் பெண்களை சோதிப்பதில்லை இயற்கையும் பூபெய்வதில் இருந்து குழந்தையை பெற்றெடுப்பதில் இருந்து தொடர்ந்து வலிகளால் வஞ்சிக்கிறது பிரச்சனைகளை என்பது அவர்களுக்கு பழகிய ஒன்றாகிவிட்டது .நம் நிலாவும் பிரச்சனையில் சிக்கினாலும் எதிர்கொண்டு வெளிவந்துவிடுவாள் தொடர்ந்து வாசித்து கருத்தை பதிவு செய்வதற்கு நன்றி :thnkx:thanks Priyanka.
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top