(Reading time: 29 - 57 minutes)

ஆனால் ஆதித் அவளைத்தான் கல்யாணம் செய்யப்போகிறோம் என்பதில் உறுதியாக் இருந்தாலும் இப்பொழுது அவன் ஏற்றிருக்கும் வேலை முடியும் வரை அவனால் கல்யாண ஏற்பாட்டில் முழுவதுமான ஈடுபாட்டுடன் இருக்க முடியாது என்பதால்தான் கல்யாணத்தை கொஞ்சம் தள்ளிப்போட நினைத்திருந்தான்

மேலும் அவனது கல்யாணத்திற்கு கட்டாயம் அப்பாவை உடன் கூப்பிட்டுத்தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்யவேண்டும் என்று அவள் அம்மா ஜானகி அவனிடம் கண்ணீருடன் கோரிக்கை வைத்திருந்தாள் நீ உன் அப்பாவை இதுவரை எதற்கும் எதிர்பார்க்கவில்லை என்பது, நான் காசுக்காக் அவரை மணக்கவில்லை என்று காண்பித்து என் கெளரவத்தை காப்பாத்தியதோ! அதே போல், உன் தந்தை அவர் தான் என்பதை சபையில் காண்பித்து என் கற்புக்கு களங்கம் ஏற்படாமல் காப்பதுவதுவும் உன் கடமையே என்று கூறியிருந்தாள்.

தன்னை போலவே தோற்றத்தில் இருக்கும் வேலாயுதத்தை தான் அப்பா இல்லை என்று கூறினால் கூட யாரும் நம்ப மாட்டார்கள் என்றாலும், இது வரை அவரின் பெயரையோ அல்லது தந்தை அவர் என்று தான் சென்னை வந்ததில் இருந்து யாரிடமும் அவன் கூறியதில்லை தான் யாரிடமும் நெருக்கமாக் பழகினால் அவர்களிடம் தன குடும்ப விபரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்குமோ? என்ற காரணத்தால் பெர்சனலாக விசயங்களை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு யாரையும் அவன் நெருங்கி பழக அனுமதித்ததில்லை.

ஆனால் தான் பிஸ்னசில் கால் பத்தித்து அதில் நன்கு வளர்ந்து வருவதை பொறுக்கமுடியாத அவனின் தொழில் எதிரிகள் அவனது பெர்சனல் வாழ்க்கையை கையில் எடுத்து கதைகட்ட முயன்றபோது கூட, அதை வேலாயுதம் தானாகவே முன் வந்து சில பத்திரிக்கையில் ஆதித் தன மகன் என்று கூறி அவர்களின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அப்பொழுது வேறு ஓர் பத்திரிக்கையில் இருந்து இளம் தொழில் அதிபர் விருது ஆதித் பெற்றதற்காக பேட்டி எடுக்க வந்த நிரூபர், விசமமாக! நீங்கள் தொழிலில் இந்த வயதில் இவ்வளவு பெரிய உட்ச்சத்தை தொட்டதற்கு உங்களின் தந்தையின் சப்போர்ட்டும் அவரின் வழிகாட்டலுமே காரணம் என்கிறார்கள் அது உண்மையா? என்ற கேள்வி எழுப்பினான்.

அதற்கு திமிராக, என் பிறப்புக்கு மட்டும் தான் அவர் காரணம் மற்றபடி எனது வாழ்க்கையில எனக்கும் அவருக்கும் வேறு தொடர்பு எதுவும் நான் வைத்துக்கொலவில்லை என்று பேட்டி கொடுத்தான்.அப்படிப்பட்டவன் ,

இப்பொழுது மட்டும் கல்யாணத்திற்காக அவரிடம் போய், எனக்கு தந்தை என்ற ஸ்தானத்தில் சபையில் நில்லுங்கள் என்று கேட்க அவனுக்கு வாய்வரவில்லை.

ஆனால் எப்போதடா தான் அவரை அப்பா என்று கூப்பிட்டு, சபையில் அவரை நிறுத்துவோம் என காத்திருந்தார் . அவரை ஆதித் தள்ளி நிறுத்தும் பொது அவர் மனம் காயம் படுவதையும் உணர்ந்தே.. இருந்தான்.

வெளியில் அவருக்கு தான் தண்டனை கொடுப்பதாக நினைத்து அவரை தள்ளி வைத்தாலும் மனதினுள் அவனுக்கும் அவரின் மேல் அன்பு இருக்கத்தான் செய்தது.

வர்ஷாவின், ஸ்வீட்டார்லிங் கோபமா? என்ன.. பதிலையே காணோம் என்ற குரலில் சுயநிலை அடைந்த ஆதித் நத்திங் பேபி. நம்ம மேரேஜுக்கு கொஞ்சம் வெய்ட் பண்ணு. எனக்கு கொஞ்சம் வேலை முடிக்க வேண்டியிருக்கு அதை முடித்ததும் டும்....டும்... தான் பிறகு உன்கிட்ட மற்றதுக்கெல்லாம் நான் எதுக்கு அனுமதி கேட்கனும் இப்போ நீ தராததுக்கும் சேர்த்து வட்டிபோட்டு நான் வசூலித்துக்கொள்வேன். ஓகே டுமாரோ ஆப்டர்னூன் 3 மணிக்கு உன்னை பிக்கப் பண்ணிக்கொள்கிறேன் பை பேபி என்றவன், போனை கட் செய்து பாக்கெட்டில் போட்டவன் தன அம்மாவிடம் கொடுக்க எடுத்து வைத்திருந்த அந்த செக்கை எடுத்து கொண்டு கீழே டைனிங் ரூமிற்கு வந்தான்.

கிளம்பிட்டாயா ஆதித் என்று கேட்டபடி அங்கு வந்த ஜானகி முகம் அன்று மகிழ்ச்சியை பிரதிபலித்தது. அதனை பார்த்த ஆதித் என்ன இன்று உங்க முகத்தில் பல்ப் எரியுது. என்ன உங்க ஹஸ்பன்ட் வருகிறாரா? என்று கேட்டான் ஆதித்.

அவன் அவ்வாறு கேட்டதும் போடா போக்கிரி, நான் எப்பவும் போலத்தான் இருக்கிறேன். நீ உட்காரு! உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்று அவனுக்குப் பரிமாறிய ஐட்டங்களை பார்த்ததுமே அவனுக்கு இன்று இருக்கும் உணவு வகைகளை கண்டு அவன் நினைத்தது சரிதான் என்பது போன்ற ஓர் பார்வையை தனது அம்மாவிவ் மீது செலுத்தியவன்.

அது என்ன உங்க வீட்டுக்காரர் வரும்போது எல்லாம் அடை தோசை காரச்சட்டினி, வடைன்னு அமர்களப் படுத்துறீங்க இல்லாட்டி எனக்கு வெறும் சத்துமாவு கூழ், புரூட் சளெட் மட்டும் பண்றீங்க! என்று வேண்டுமென்றே சீண்டினான்.

அவன் அவ்வாறு சொன்னதும், டேய் ஆதித்! நான் உனக்கு விதவிதமாய் சமைத்தால் கோபப்பட்டாய், டயட் என்று ஒரு லிஸ்ட்டை கொடுத்து அது தான் வேண்டும் என்று என்னை மிரட்டினாய், இப்போ இப்படி சொல்ற! என்று கேட்டார்.

அதற்கு சிரிப்புடன், சும்மா உங்களை கலாய்க்க சொன்னேன், டெய்லி இப்படி சாப்பிட்டா உங்க புருஷன் மாதிரி எனக்கும் தொப்பை வந்துரும், சோ எனக்கு இப்படி டெய்லி செய்து என்னுடைய பெர்சனால்டியை ஸ்பாயில் செய்திறாதீர்கள் என்று கூறி வயிறு நிறைய சாப்பிடும் மகனை பார்த்து உழைக்கிற பிள்ளை இப்படித்தான் சாப்பிடனும். நீதான் டயட் என்ற பேரில் உன் வயித்துக்கும் வாயிற்கும் வஞ்சனை பண்ற என்று கூறினார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.