(Reading time: 29 - 57 minutes)

கைகழுவியபடி அவரது பேச்சை கேட்டு சிரித்துக்கொண்டே வந்தவன், தன் பாக்கெட்டினுள் இருந்த அந்த செக்கை எடுத்து அவன் அம்மாவிடம் கொடுத்தான் .

என்னது அது... என்று பார்த்த ஜானகி, அது ஒன்றரை கோடி ரூபாய்கான காசோலை என்பதை அறிந்து வருத்தத்துடன் என்னப்பா இது! என்று கேட்டாள்

அதற்கு, அம்மா! இந்த பணம் நான் பிசினஸ் ஆரம்பிக்கும் போது நீங்க உங்கள் நகைகள் மற்றும் வீட்டை அடகு வைத்து எனக்கு கொடுத்த ரூபாய் தான், நான் கடனாகத்தான் அன்னைக்கு வாங்கினேன் உங்களிடம் என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் ஏண்டா இப்படி சொல்ற நீ!. என் பெயரில் வாங்கி கொடுத்திருக்கும் வீட்டின் மதிப்பு, நான் உனக்கு தொழில் துவங்க கொடுத்த இந்த தொகையை விட அதிகம். அப்படி இருக்க நீ இதை எனக்கு திரும்பிக்கொடுக்கிறேன் என்று சொல்வது எனக்கு வருத்தமாக இருக்கு ஆதித் என்றார்.

அம்மா அன்னைக்கு நான். உங்கள் பணம் என்று நீங்கள் கொடுக்கும் போதே நான் வாங்க மாட்டேன் என்று தான் சொன்னேன்.

ஆனால், அந்தநேரம் பார்த்து உங்கள் புருஷன் வந்து நீங்கள் எப்படி அவரின் வாழ்கையில் வந்தீர்கள் என்று உங்களின் பிளாஷ் பேக் கதையை என்னிடம் சொல்லி நான் உங்களை நினைத்து கொஞ்சம் நெகிழ்ந்திருக்கும் போது நீங்கள் சாவு அது இது என்று என்னை கூறி ப்ளாக் மெயில் செய்து என்னை இந்த பணத்தை வாங்க வச்சுட்டீங்க.

ஆனால் அப்போவே நான் சொன்னேன் கடனாத்தான் நான் வாங்குகிறேன் என்று .மேலும் நான் சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே இதை உங்க கிட்ட கொடுக்கணும் என்று தான் நினைத்தேன். ஆனால்! முதலிலேயே கிடைத்த லாபத்தை எடுத்துவிட்டால் ரொட்டேசனுக்கு பணம் பத்தாது என்று தான் ஒவ்வொரு ப்ராஜெக்ட் செய்யும் போதும் ஓர் குறிப்பிட்ட அளவு லாபத்தின் ஒரு பகுதியை எடுத்து வைத்து மொத்தமாக சேர்ந்ததும் உங்ககிட்ட கொடுக்கிறேன் .

நீங்க இதை வாங்காவிட்டால் நான் கஷ்ட்டப்பட்டு ஆரம்பித்து இவ்வளவு தூரம் வளர்த்த இந்த தொழிலை உங்களின்பேரில் எழுதி வைத்துவிட்டு நான் இந்த தொழிலில் இருந்து விலகி வேறு புதியதை முதலில் இருந்து ஆரம்பிக்கும் படி ஆகிவிடும் என்று குரலில் உறுதியாக கூறினான் .

அவள் மனது வலிக்க, அந்த காசோலையை வாங்கிகொண்டார் .அதன் பின் என்னப்பா இப்படி சொல்கிறாய் என்னிடம் உள்ளது எல்லாம் எனக்குப் பிறகு உனக்குத்தானே என்று கூறினார் ஜானகி

அதற்கு ஓர் கசந்த புன்னகையுடன் அது உங்களுடையது என்று நீங்கள் சொன்னாலும் அது எல்லாம் மிஸ்டர் வேலாயுதம் உங்களுக்கு வாங்கிக்கொடுத்ததுதான். அதை நான் எப்பொழுதும் தொட்டுகூட பார்க்கமாட்டேன் என்றவன்.

ஓகே மா..... பை எனக்கு நேரமாய்விட்டச்து நான் கிளம்புகிறேன் என்று கூறி அவன் வாசலுக்கு வரும் பொது அவனின் தந்தை வேலாயுதத்தின் கார் அங்கு வந்து நின்று அதிலிருந்து இறங்கினார் அவர்.

இறங்கியவர் ஆவலோடு அவனின் முகம் பார்த்தார். அவர் பார்வையை பார்த்ததும் மனதினுள் நீங்களும் பதினெட்டு வருசமாக நான் அப்பா என்று கூப்பிட மாட்டேன் என்று தெரிந்தும், என் வாயில் இருந்து அந்த வார்த்தை வந்து விடாதா என்று ஏக்கத்துடன் பார்ப்பதை நிறுத்தவே மாட்டேன் என்கிறீர்களே..!

இது தான் உங்களுக்கு நான் கொடுக்கும் தண்டனை. இது எனக்கும் வருத்தமே.. என்று நினைத்தபடி அவரது முகத்தை பார்த்துக்கொண்டே தனது காரினுள் ஏறி அமர்ந்தவன் அதனை வேகத்துடன் எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

ஆதித்தின் மனம் ஏனோ இன்று தன அம்மாவிடம் பேசிய பேச்சுக்குப் பின்னும் தனது அப்பாவின் ஏக்கமான பார்வையை கண்டும் நீண்ட நாளுக்குப் பின் திரும்பவும் இன்று கடவுளை சபித்தது,

எதற்கு எனக்கு இந்தநிலை என் மேல் பாசமான அம்மாவும் அப்பாவும் இருந்தும் என்னால் அவர்களின் முறையற்ற திருமணத்தால் நான் அடைந்த அவமானத்தால், அவர்களை புறக்கணித்து என்னை நானே தனிமைப் படுத்திக்கொள்ளும் நிலையை, உறவுகளை பற்றி புரிந்தும் புரியாமலும் இருந்த அந்த எட்டாம் வகுப்பு குழந்தை பருவத்திலேயே கொடுத்தாய் என மருகினான்.

ஏனோ இன்று தனது ஆபீஸ் போய் தனது வேலையில் ஈடுபாட்டுடன் செய்யமுடியும் என தோன்றவில்லை. எனவே தனது பி.ஏவை மொபைலில் தொடர்புகொண்டு இன்றைக்கு தனக்கு முக்கியமான சந்திப்புகள் எதுவும் இல்லையென்பதை உறுதிபடுத்திக்கொண்டு இன்று தன்னை எதற்கும் தொந்தரவு பண்ணவேண்டாம் என்று கூறியவன் முதல் முதலில் அவனுக்கென்று அவன் கட்டிய பங்களாவிற்கு வ்ந்தான்.

அவனின் காரை பார்த்ததும் முதலாளி என்பதை அறிந்து கொண்ட வாட்ச்மேன் கதவை விரிய திறந்துவிட்டான். காரை அதற்குரிய இடத்தில் பார்க் பண்ணாமல் வாசிலிலேயே நிறுத்திவிட்டு உள்ளே சென்ற தன முதலாளியை அதிசயமாக் பார்த்தான் வாட்ச்மேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.