எனவே அவனது பாட்டி,மாதேஷிடம் அந்த பையன் ஆதித்தின் அம்மா பெயர் ஜானகி, அவன் ஒன்றும் உன் அப்பாவின் வாரிசு கிடையாது நீ மட்டும் தான் உன் அப்பாவின் வாரிசு. அவன் உன் அப்பாவின் வைப்பாட்டியின் மகன் என்று கூறினாள்
அவனுக்கு அந்த சிறு வயதில் தன் தந்தைக்கு வைப்பாட்டி ஒருத்தி இருக்கிறாள் என்று தெரிந்ததும் எதுவோ புரிந்த மாதிரி இருந்ததது. இருந்தாலும் தன் பாட்டியிடம் வைப்பாட்டி என்றால் என்ன? என்று கேட்டான்.
அதற்கு உன் அப்பாவிடம் நிறைய காசு இருக்குதுள்ள அது தெரிந்து அவரிடம் இருக்கும் சொத்து, பணத்திற்காக சிமிட்டி உன் அப்பாவை மயக்கி அவகூட தங்க வச்சுகிடுறா. அதனால்தான் அவ வப்பாட்டி என்றாள்.
உடனே அப்போ நம்ம அப்பாவை அவங்களே வச்சுகிடுவாங்களா பாட்டி? என்று கேட்டான்.
அதனை கேட்ட மனோன்மணி அவனிடம், நானும் உன் அம்மாவும் அப்படி விட்டுடுவோமா…?, நம்ம மாதிரி பணக்கார வீட்டுல உள்ள ஆம்பளைங்க என்ன தான் வப்பாட்டி வச்சுகிட்டாலும் பொது இடத்துக்கு பொண்டாட்டியைக் கூட்டிட்டு போனாதானே மதிப்பு, என்று கூறி அந்த அறியா சிறு வயதில் அவனது மனம் என்னும் குளத்தில் கல் எரிந்து கலக்கி விட்டாள் மனோன்மணி.
அதனால் மாதேஷின் பார்வையில் பெண்கள் என்பவர்கள் ஆண்களை தன் அழகால் மயக்கப் பார்பவர்கள் என்ற தப்பான எண்ணம் பதிந்தது. எனவே பெண்களை அவன் பார்க்கும் கண்ணோட்டம் வளர வளர வேறுவிதமாக மாறியது, அதற்கேற்றார் போல் அவனுக்கு கையில் நிறைய காசும் சேர்க்கையும் அவனை தடம் புரள வைத்தது.
கல்லூரியில் வாழ்கை அனுபவிக்க என்ற எண்ணம் உள்ள செல்வந்தர் வீடு கன்றுக்குட்டிகளுடன் இணைந்து கொண்டான். அதில் நரேனுக்கு எப்பொழுதும் போனில் அழகான பெண்களின் அசந்தநேரம் வெளிப்படும் அங்கங்களை பெட் கட்டி போட்டோ எடுக்கும் பழக்கம் இருந்தது, அதனால் தான் அவனின் போனில் போட்டோஸ் வீடியோஸ் டெலிட் பண்ணவில்லை என்று தெரிந்ததும் அதிர்ந்தனர் அவனது நண்பர்களான மாதேசும் வசந்தும்.
மேலும் அவர்கள் கேங் உள்ளாசமாக இருக்கும் போதும் நரேனின் போட்டோ எடுக்கும் பழக்கத்தால் அதையும் சூட் செய்திருந்தான் தன் போனில்,
உடனே மாதேஷ் “டேய் போன மாதம் நாம் ரெசார்ட் போனபோது சூட் பண்ண போட்டோசும் அதில் தான் இருக்கா..?” என்று டெண்சனாக கேட்டான்.
அவன் ம்... என்று சொன்னதும் ஆடிப்போய்விட்டான் மாதேஷ்.
உடனே வசந்த் என்னடா விஷயம் என்ன ரெசார்ட்! போட்டோஸ்! என்று சொல்றீங்க எதுவும் எக்குத்தப்பான போட்டோஸ் அதில் இருக்கா என்று கேட்டான் ?
அவன் கேட்டதும் போடா சாம்பாரு நீ தான் மேட்டர் பண்றதுள்ள எல்லாம் கலந்துக்கிடமாட்டியே போன மாதம் டிஸ்கோத்தே போனோமா,அப்ப அந்த ஆக்டர் ரம்யா வந்திருந்தா செம ஹாட்டா இருந்தா நம்ம நரேனை ஏற்கனவே மினிஸ்டர் மகன் என தெரிந்து வைத்திருந்ததால் லேசாக அவகிட்ட பேசி கரக்ட் பண்ணி ரெசார்டுக்கு தள்ளிட்டு போய் என்ஜாய் பண்ணினோமா! அப்பா இந்த நரேன் லூசு எப்பவும் போல் நாங்க சேர்ந்து என்ஜாய் பண்றத செல்பி எடுத்தான் அப்போவே நான் உசார் ஆகி இவனை அதை என் கண் முன்னாடி டெலிட் பன்னச்சொன்னேன். ஆனா இவன் என்னவோ சொல்றான் என்று மூட் அவுட்டாகி கூறினான் .
என்னதான் அயோக்கியர்களாக இருந்தாலும் தொழிலதிபர்களின் பையன்களும் அரசியல்வாதிப் பையன்களும் நடிகையுடன் செய்யும் தவறுகள், போட்டோவுடன் நெட்டில் வெளியேறினால் காட்டுத் தீ போல் பரவி சமுதாயத்தில் அவர்களுக்கு ஏற்படும் தலையிரக்கத்தை நினைத்து கதிகலங்கி போய்விட்டனர் மூவரும்.
இப்பொழுது புரியுதா வசந்த் அதை ஏன் அவளிடம் இருந்து வாங்கணும் என்று சொல்கிறேன் என்றான் நவீன். ஆனால் அந்த போட்டோசை அவளால் பார்த்திருக்க முடியாது ஏனென்றால் என் போனை ஆன்செய்ய என்னை தவிர மற்றவர்களால் முடியாது மேலும் அவள் கைக்கு போனதில் இருந்து அது சுவிட்ச்டு ஆப்பிலேயே இருக்கு என்றான்.
அவன் கூறியதை கேட்டு மாதேஷ் ஆத்திரத்தில் நான் அப்போவே அதை டெலிட் பண்ணச் சொன்னேனே என் கண் முன்னாள் தானே டெலிட் பண்ணின என்றதும் . நரேன் அதுதான் டெலிட்டான வீடியோசை ரெக்கவர் செய்வதற்கு சாப்ட்வேர் இருக்கே அதை திரும்ப கொண்டுவந்தரலாம் என்று தெரிந்ததனால் தான் உன் கண் முன்னே டெலிட் செய்து பின் அதை ரெக்கவர் பண்ணிவிட்டேன் என்றான் நரேன்.
அன்று அவர்கள் ஓர் இரண்டாம் கட்ட நாயகியை நைட் கிளப்பில் இருந்து நேரடியாக அந்த ரெசார்டுக்கு கூட்டிச்சென்று கூத்தடிதிருன்தனர் அது மட்டும் வெளியில் லீக் ஆனால் அவ்வளவு தான் என்று தலையில் கை வைத்து உட்காந்துவிட்டனர்.
பாவம் அழகுநிலா கழுகுகளின் பார்வை வட்டத்தில் விழுந்துவிட்டால் அவர்களிடம் இருந்து அவள் தப்பிப்பாலா..? அல்லது மனிதப் போர்வைக்குள் இருக்கும் அந்த மிருகங்களின் முகத்திரையை அவள் கிழித்தெறிவாளா..?.