(Reading time: 29 - 58 minutes)

18. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை

என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ

உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ

 

உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம்

தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்

எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம் - கொஞ்சம்

பிறை முகம் பார்த்தது கொஞ்சம்

ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல

சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல

பனித்துளிதான் என்ன செய்யுமா மூங்கில் காட்டில் தீ விழும்போது

மூங்கில் காடென்று மாறினள் மாது

 

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்

உன்னோடு நான் கண்டுகொண்டேன்

ஒரு பெண்ணோடு தோன்றிடும் காமம் காமம்

என்னோடு நான் கண்டுகொண்டேன்

என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை

முள்ளை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை

இது கனவா இல்லை நினைவா என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்

உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்

டுத்த வந்த நான்கு நாட்களும் மெஹந்தி,லாஸ்ட் மினிட் பர்ச்சேஸ் என றெக்கை கட்டிப் பறக்க நாளை திருமணம்..அனைவரின் மனதுமே மகிழ்ச்சியில் நிறைந்திருக்க சஹானா பட்டாம்பூச்சியாய் தன் வீட்டை சுற்றி வந்து கொண்டிருந்தாள்..ஒருபுறம் தன்னவனின் கரம் பற்ற போகும் மகிழ்ச்சி எனில் மறுபுறம் தான் தாய் தந்தையை பிரியபோகும் துயரமென தனக்குள்ளேயே மருகினாள்..இந்த ஒரு வாரமாகவே கவனித்து கொண்டுதான் இருக்கிறாள்..அவள் அன்னை கூட ஓரளவு மனதை தேற்றிக் கொண்டார் என்றுதான் கூறவேண்டும் ஆனால் தந்தையோ மொத்தமாய் உடைந்திருப்பதாய் தோன்றியது..கடைக்குச் செல்வதை குறைத்துவிட்டார்..ஏதேதோ காரணம் சொல்லி அவளிடம் பேச்சை வளர்த்தார்..சாப்பாடு தூக்கமின்றி கண்கள் இடுங்கி பார்ப்பவர்கள் அத்தனைபேரும் கேட்கும் அளவுக்கு மனதளவில் ஓய்ந்து போய் இருந்தார்..திருமணத்தில் இது எப்போதுமே நடக்க கூடிய ஒன்று அத்தனை வருடங்கள் தன் அரவணைப்பிலும் அன்பிலும் எதற்கெடுத்தாலும் தன்னிடம் வந்து செல்லம் கொஞ்சும் மகளை இப்போது ஒரு புதியவனை நம்பி அவன் கைகளில் ஒப்படைக்கும்போது மனத்திற்குள் தானாகவே பயம் துக்கம் என அனைத்தும் ஆட்கொண்டு விடுகிறது..அம்மாக்கள் இதில் விதிவிலக்கு ஏனெனில் அவர்கள் தங்கள் திருமணத்திலேயே இந்த வலியை உணர்ந்துவிட்டதாலோ என்னவோ இப்போது ஓரளவு ஆறுதல் கூறும் நிலையில் இருக்க முடியும்..

இதற்கு இன்னுமொரு காரணம் எல்லா ஆண்களுக்குமே திருமணம் செய்து ஒரு பெண்ணை அவள் தந்தையிடமிருந்து தன்னோடு அழைத்து வரும்போது அவளின் வலி அவ்வளவாய் தெரிவதில்லை..அதே நேரம் தன் மகள் என்று வரும்போது அப்போது நினைக்கும்போது தன் மனைவியின் மனநிலைமையும் மாமனாரின் மனநிலைமையும் புரிவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது என் கருத்து..சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஒரு காணொளி கண்டேன்..திருமணம் முடிந்து தன் வீட்டாரிடம் விடைபெற்று செல்லும்போது தன் தந்தையை கட்டிபிடித்து கதறி தீர்த்துவிட்டார் அந்த தந்தையுமே கண்கலங்க தன் மகளை ஆரத்தழுவி தேம்பிக் கொண்டிருந்தார்..அதன்பின் அங்கிருந்த பெண்கள் ஒருவாறு சமாதானப்படுத்தி அவளை மாப்பிள்ளையோடு அனுப்பி வைத்தனர்..இதை இங்கு பதிவிட காரணம் டெக்னாலஜியும் வாழ்க்கை முறையும் எத்தனை நாகரீகமாய் மாறியிருந்தாலும் தாய்-மகன் தந்தை -மகள் உறவுகளின் நெருக்கங்கள் எப்போதும் மாற்றமடைவதில்லை..இப்படி எதை எதையோ நினைத்துக் கொண்டிருந்தவள் போனின் அழைப்பு சத்தத்தில் நினைவுலகிற்கு வந்தாள்..

ஹாய் மாமா என்ன பண்ற??

சஹி என்னாச்சுடா டல்லா பேசுற உடம்பு எதுவும் சரியில்லையா??

அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா..ஒரு மாறி டென்ஷனா இருக்கு..அதுமட்டுமில்லாம அப்பா ரொம்ப ஸ்ட்ரெஸ்ட்டா இருக்காரு..

ஏன் சஹி எதனால??

என்ன மாமா நீ கேஷ்வலா கேக்குற நாளைக்கு கல்யாணத்துக்கப்பறம் நா தான் நம்ம வீட்டுக்கு வந்துருவேன்ல அதனாலை தான்..

ஹே ஆனாலும் அநியாயம் டீ இதெல்லாம் நா ஏதோ கல்யாணம் பண்ணி உன்ன தண்ணியில்லா காட்டுக்கு கூட்டிட்டு போற ரேஞ்சுக்கு பேசுற இதோ இருக்கு வீடு நினைச்சா பத்து நிமிஷத்துல போகபோற இதுக்கு இவ்ளோ பில்டப்பா???

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.