(Reading time: 29 - 58 minutes)

ஓரளவு கூட்டம் மேடையில் குறைந்திருக்க சிவா மைக்கோடு மேடையேறினான்..

.கே மொதல்ல எங்க வீட்டு கல்யாணத்துக்கு வந்த ஒவ்வொருத்தருக்கும் எங்களோட நன்றியை தெரிவிச்சுக்குறோம்..நீங்க எல்லாரும் உங்களோட கிப்ட் மூலமா உங்க விஷஸ்ஸ சொல்லிட்டீங்க அப்போ நாங்களும் அப்படி சொல்றதுதான கரெக்ட்டா இருக்கும் அதான் நாங்க கார்த்திக்கும் சஹானாக்கும் ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் குடுக்கலாம்நு இருக்கோம்..சோ பர்ஸ்ட் என் சார்பா சஹானாக்கு ஒரு ஸ்பெஷல் ஏவி ரெடி பண்ணிருக்கேன்..கியர் யூ கோ...

சிவா மானத்த வாங்கிடாதடா..என்றவள் ஸ்க்ரீனை பார்க்க..அதில் ஒரு வயது சஹானா அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள்..அதையடுத்து அவளின் சிறுவயதின் ஒவ்வொரு பருவத்திலும் எடுத்த புகைப்படங்கள்..இதில் கூடுதல் ஆச்சரியம் அவளுக்கு என்னவென்றால் அவையனைத்தையுமே அவளே இப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறாள்..அனைத்துமே விடுமுறையில் அவள் வந்த நேரம் சிவாவின் அப்பா எடுத்திருந்தது..பேச வார்த்தைகளின்றி அவள் அமர்ந்திருக்க இறுதியாய் இருந்த போட்டோவை பார்த்து மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்தாள்கார்த்திக்கும் அவளும் ஆற்றின் நடுவில் பாறையில் அமர்ந்தவாறு எதற்கோ சிரித்த மாதிரியான புகைப்படம் இயல்பாய் அழகாய்..முதன்முதலாய் சிவாவை கிண்டல் செய்வது சண்டை போடுவதை தாண்டி அண்ணணாய் தந்தைக்கு அடுத்த நிலையில் இருக்கும் தோழனாய் பார்க்க தோன்றியது..அவள் முகம்பார்த்தே மனம் அறிந்தவன் ஆதரவாய் தோள்பற்ற தன்னை கட்டுப்படுத்தியவளாய் சிவாவிற்கு செய்கையால் நன்றி கூற கண்சிமிட்டி அவன் நகர ஷரவன் கைக்கு மைக் மாறியது..

டேய் நீயுமா??-கார்த்திக்..

அண்ணா பொண்ணுக்கே சர்ப்ரைஸ் இருக்கும் போது மாப்பிள்ளைக்கு இல்லனா எப்படி சரி உன் சர்ப்ரைஸ்க்கு ரெடியா இரு அண்ணா..ஷரவ் லைட்ஸ் ஆஃப்..என குரல் கொடுக்க அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட சில நிமிடங்களில் யார் யாரோ மேடையேறும் சத்தம் கேட்க வந்தவர்கள் ஒவ்வொருவரும் கார்த்திக்கிற்கு வாழ்த்து கூற பாதிக்கு மேல் குரல்க்கு சொந்தக்காரரர்களை அவனால் கண்டு கொள்ள முடியவில்லை..சில நிமிடங்களில் விளக்குகள் ஒளிபெற தன்னை சுற்றி நின்றிருந்தவர்களை பார்த்தவனுக்கு உண்மையாகவேஆச்சரியமாகத்தான் இருந்தது..அனைவரும் அவனின் பள்ளி கல்லூரி கால நண்பர்கள்..அவன் யாரையுமே நேரடியாய் சென்று அழைக்கவில்லை..பேஸ்புக் வாட்ஸ்அப்பில் பத்திரிக்கை அனுப்பியதோடு சரி..அதிலும் விக்ரம் கிஷோரே தங்களுக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்றும் வர முடியாததற்கு வருந்துவதாகவும் அடுத்த மாதத்தில் ஒரு நாள் வருவதாகவும் கூறிவிட்டனர் அதுகூட மெயில் கம்யூனிகேஷன்தான்..இன்று அவர்கள் உட்பட வந்திருப்பது நிறைவாய் இருந்தது..

அடுத்த சில நிமிடங்கள் அனைவரின் நலவிசாரிப்புக்களோடு தொடர கார்த்திக் அனைவருக்குமான தன்னுடைய நன்றியை தெரிவித்தான்..

ஹலோ மாப்ள சார் உங்க தேங்க்ஸ்க்காக நாங்க வரல சாப்பாடுலா ரெடியா இருக்குல..மச்சான் ப்ரெண்டா ஃபுட்டா டா??-விக்ரம்

அஃப்கோர்ஸ் புட் தான்டா..-கிஷோர்..சிஸ்டர் என் மேல இருந்த கோபம்லா போய்டுச்சா நம்பி சாப்ட போலாம் தான???

ஹா ஹா நீங்க வரீங்கநு தெரியாதே ப்ரோ தெரிஞ்சுருந்தா கண்டிப்பா எதாவது பண்ணிருப்பேன் என்று சஹி கூற அனைவருமாய் சிரித்தனர்..

உண்மையா ஷரவன் ஷரவந்திக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும் இப்படி ஒரு ப்ளான் போட்டதுக்கு..ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் எல்லாரையும் பாத்தப்போ அந்த பீல் சான்ஸேயில்ல கார்த்திக்..பாவம் நீதான் கல்யாண மாப்பிள்ளையா மாட்டிக்கிட்ட வாட் டு டூ..-விக்ரம்..

உண்மைதான் விக்ரம் பெஸ்ட் சர்ப்ரைஸ் இன் மை லைவ்..தேங்க்ஸ் ஷரவ் அண்ட் கோ என்று செல்லமாய் தம்பி தங்கையை தன்னோடு சேர்த்துக் கொண்டான்..அடுத்து ஆட்டம்பாட்டமென கொண்டாட்டங்கள் முடிந்து பெரியவர்கள் மணமக்களை கிளப்புவதற்குள் ஒரு வழி ஆகிவிட்டனர்..

மல்லிகையில் ஒரு மாலை

தங்கச்சரிகையில் ஒரு சேலை

….. மல்லிகையில் ஒரு மாலை

தங்கச்சரிகையில் ஒரு சேலை

பூவொன்றை பூட்டி வைக்கத்தான்……… ……

கல்யாணம் கண்டுபிடித்தான்

தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா

பின்பு ஜீவிதம் துந்தனானேனா

தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா

பின்பு ஜீவிதம் துந்தனானேனா

தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா

பின்பு ஜீவிதம் துந்தனானேனா

றுநாளின் விடியல் அற்புதமாய் ஆரம்பமாக திருமண மண்டபமே பரபரத்துக் கொண்டிருக்க நம் இளம் ஜோடிகள் அதைவிட பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தனர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.