(Reading time: 29 - 58 minutes)

சஹானாவிற்கு தேவையானதை எடுத்து கொடுத்துவிட்டு கௌரி ஏதோ எடுப்பதற்காக வெளியே வர சட்டென அவளை இழுத்து வெளியிலிருந்த மாடிபடிகளுக்கு அடியில் நிறுத்தினான் ஷரவன்..

என்னதிது விடுங்க யாராவது பாத்தா அவ்ளோதான்..

அட உன்ன அனுப்புறதுக்காகவா இவ்ளோ கஷ்டப்பட்டு கூட்டிட்டு வந்தேன்..வந்து நாலுநாள் ஆச்சே என்ன பாக்கனும்னு தோணிச்சா உனக்கு..அண்ணியோடயே சுத்திட்டு இருக்க..

அப்பா வேற இருக்காரு நா எப்படி உங்ககிட்ட பேசுறது எனக்கு இந்த ஊரும் தெரியாதே..

ம்ம் ஆனா ஊனா இப்படி ஒரு பாவமான லுக் விட்டு ஆள கவுத்திரு..

என் பார்வையே அப்படிதான்..

ப்பார்ரா அதுசரி ம்ம் நா கூப்டதுக்கான காரணத்தையே மறந்துட்டேன் பாரு..இந்தா இந்த வருஷ பிறந்தநாளுக்கு என்னோட பரிசு..அடுத்தவாரம் உன்ன பாக்க முடியாதுல அதான் இப்போவே குடுக்குறேன் வாங்கிக்கோ..

ஐயோ முதன்முதலா வாங்கி தர்றத வேண்டாம்நு சொல்ல கூடாது ஆனா இத நா எப்படி எடுத்துட்டு போறது அப்பா யார் குடுத்தாநு கேட்டா என்ன சொல்றது??

அட என் அம்பாசமுத்திர அழகி அதெல்லாம் ரெடி பண்ணாமயா இத வாங்கிருப்பேன்..நீ எடுத்துட்டுப் போ மத்தத நா பாத்துக்குறேன்..

ம்ம் என குனிந்தவாறே தலையசைத்தவள் சட்டென கையிலிருந்து வாங்கி கொண்டு அவனை தாண்டி ஓடிவிட்டாள்..தன்னவளை கண்டு சிரித்தவாறே அவன் தனக்கான வேலைகளை கவனிக்கச் சென்றான்..

அங்கு ஷரவ் வழக்கம்போல் சிவாவிடம் மாட்டியிருந்தாள்..கீழே என்னைத் தேடி யாராவது இங்க வந்தா அவ்ளோ தான் நா கீழ போறேன் விடுங்க சிவா..இனி நீங்க மாடிக்கு வாநு கூப்டாலே உஷாராய்டுவேன் என்றவாறு அவன் கை வளைவுகளிலிருந்து தப்பிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்..

ஹே டீச்சரம்மா கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோ..என் மேல தப்பு கிடையாது நேத்து நிச்சயதார்த்தத்த முடிச்சுட்டு இவதான் என் ஃவைப்நு ஊருக்கே சொன்னப்பறம் மறுநாள் காலைலேயே கண் முன்னாடி இப்படி பட்டுபுடவையும் மல்லிப்பூவுமா அங்கேயும் சுத்திட்டு இருந்தா நா எப்படி சும்மா இருக்க முடியும் கல்யாணத்தை தள்ளி வச்சது உன் தப்பு நா எப்படி பொறுப்பாக முடியும்???

ம்ம் நீங்க க்ரிமினல் வக்கீல்தான் ஒத்துக்குறேன்..அதுக்காக என்கிட்டேயே உங்க வேலையெல்லாம் காட்ட வேண்டாம்..ஆள விடுங்க என அவன் ஏமாந்திருந்த நொடி பொழுதில் கையை தள்ளிவிட்டு ஓடிவிட்டாள்…

வருங்கால ஜோடிகளே இத்தனை உற்சாகத்தோடு இருக்க இன்றைய நாளின் நாயகனும் நாயகியும் எப்படி இருப்பார்கள் என கேட்கவும் வேண்டுமோ வாங்க வாங்க மாப்பிள்ளையை பர்ஸ்ட் பாக்கலாம்.அழகான பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாய் மேடையில் அமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களை கர்ம சிரத்தையோடு கூறிக் கொண்டிருந்தான்..அதற்குள் முகூர்த்த புடவை மாற்றி மணமகள் அறையிலிருந்து வெளியேவர சர்வமும் மறந்து போனான் மணமகன்..

அந்த ரத்தநிற புடவைக்கு ஏற்றவாறு தங்க நிற முக்கால் கை நீளச் சட்டை முழுவதும் கற்களால் வேலைப்பாடு செய்யப்பட்டிருக்க அதை இன்னும் அழகூட்டுவதாய் இருந்தது அவளை அலங்கரித்திருந்த டெம்பிள் செட் ஜுவல்லரி செட்..அவளின் அத்தனை ஆசைகளும் கனவுகளும் நிறைவேறப் போகும் பூரிப்பு அப்படியே அவள் முகத்தில் தேஜஸாய் மலர்ந்திருக்க கார்த்திக்கிற்கு மனம் நிறைந்துவிட்டிருந்தது..அருகில் வந்தமர்ந்தவள் தன்னவனை ஓரப் பார்வையால் வருட அதை புரிந்தவனோ மெல்லிய புன்னகையை பதிலளித்தான்..நிமிடங்கள் றெக்கை கட்டி பறக்க ஐயர் திருமாங்கல்யத்தை அவன் கைகளில் கொடுக்க மூன்று முடிச்சு சேர்த்து தன்பாதியாய் அவனின் தேவிகாவை தன்னோடு சேர்த்து அவளுக்கு விமோட்சனம் அளித்தான்…சிறியவர்கள் கண்களில் நீர்கோர்க்க தங்களின் வாழ்த்துக்களை பகிர பெரியவர்கள் அவர்களை கேலி செய்தவாறு நகர்ந்தனர்..தாலிகட்டி முடித்துசஹானாவை கார்த்திக் பார்க்க கண்களில் இருதுளி நீர் அவளிடத்தில்..சிறிதும் யோசிக்காமல் தன்னோடு சாய்த்து உச்சந்தலையில் முத்தத்தை பதித்தான்..குடும்பத்தினர் அனைவருக்குமே தங்கள் பிள்ளைகளின் அன்பு மனதை குளிர்வித்திருந்தது..

இதுதானா இதுதானா

எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா

இவந்தானா இவந்தானா

மலர் சூடும் மணவாளன் இவந்தானா

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக

உனதானேன் நான் உனதானே

திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்

சுகமான ஒரு சுமையானேன்

இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.