(Reading time: 29 - 58 minutes)

நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்

(இதுதானா..)

 

இன்மேல் வீட்டில் தினமும் நடக்கும்

நாடகம் இனித்திடுமே

ஒளிந்திடும் எனையே உனது விழிகள்

தேடியே அலைந்திடுமே

மாடியின் வலைவினில் என்னை கண்டு பிடிப்பாய்

பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்

விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்

படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்

அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே

எண்ணங்களும் விட்டுபட்டு ஒளிந்திடுமே

அதன்பின் பெரியவர்களிடம் மணமக்கள் ஆசீர்வாதம் வாங்க சேகரோ கண்களில் நீர்கோர்க்க தன் ஆசியை வழங்கினார்..மாமா என்னை நினைச்சு கவலபடுறீங்கநு தெரியுது..என் தலையை நா பத்திரமா பாத்துக்குறேன் அதுக்காக சஹி முன்னாடியே இப்படி அழலாமா??என முடிப்பதற்குள் சஹானாவிடமிருந்து அடியை பெற்றுக் கொண்டான்..

மாப்ள நிச்சயமா இது ஆனந்த கண்ணீர்தான்..என் பொண்ணு ஒரு அழகான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துருக்காநு நா மனசார நம்புறேன் என அவனை இறுக கட்டிக் கொண்டார்..அடுத்ததாய் சிறியவர்கள் பெரிய கிப்ட் ப்ரப் செய்யப்பட்ட பார்சலோடு வர சஹானா,மறுபடியும் முதல்லயிருந்தா..யூ கைஸ் மேட் மை டே..என ஷரவந்தியை கட்டிக் கொண்டாள்..

அண்ணி இது ஸ்பெஷலா உங்களுக்குத்தான் ஓபன் பண்ணுங்க என ஷரவன் கூற ஆர்வம் தாங்கமாட்டாமல் பிரித்தவள் தன்னிலை மறந்து நின்றாள்..குலதெய்வ கோவிலுக்குச் சென்றபோது ஷரவன் ஷரவந்தி சிவா சேர்த்து அவர்கள் இருவரையும் ஒரு வழியாக்கி எடுத்த புகைப்படம்..சுற்றிலும் வயல்வெளி அதன்முன் சிறியதாய் ஒரு பாறை அதில் கார்த்திக் ஒரு கால் நீட்டியவாரு அமர்ந்திருக்க அவன் காலருகில் சஹானா புடவையில் அவன் காலில் தன் தாடையை வைத்து அவனை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்…அதை அந்தகால முறையில் மாற்றி கிட்டதட்ட 50 60 வருடங்கள் முன் எடுத்ததாய் அமைந்திருந்தது..கார்த்திக் அவர்களை அர்த்தமுள்ள பார்வை பார்க்க மூவரும் சிறு புன்னகையோடு அதை ஆமோதிக்கும் பாவத்தோடு நின்றிருந்தனர்..

ஷரவன் க்ரேட் வொர்க் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு தேங்க் யூ சோ மச் என அதை சஹானா தன் கைகளால் வருடினாள்..

அதனை தொடர்ந்து அனைத்து சடங்கு சம்பிரதாயங்களும்முடிந்து மணமக்கள் கார்த்திக் வீட்டிற்கு கிளம்ப தன்னவன் கொடுத்த தைரியத்தில் ஓரளவு அழாமல் சமாளிக்க முடிந்தது அவளால்..பெற்றோரிடம் விடைபெற்று புகுந்த வீட்டை அடைந்தவளை கீதா விளக்கேற்ற அழைத்துசச் சென்றார் அதன்பின் சில நிமிடங்களில் அவர்களோடு வந்திருந்த சிவா கிளம்ப தயாராக சஹானாவிற்கு முதன்முதலாய் தமையனாய் அவனை நினைக்கத் தோன்றியது..

அப்பப்போ வருவல சிவா என கண்களில் நீர்கோர்க்க கேட்பவளை பார்த்தவனுக்குமே உருகிவிட்டது..சட்டென தன் மேல் சாய்த்துக் கொண்டான்..சஹானாம்மா அழக்கூடாது உனக்கு எப்போ பாக்கனுமோ சொல்லு நா ஓடி வந்துரேன் அப்படிநு சொல்லுவேன்னு நினைச்சியா ஓய் நா இந்த வீட்டு மாப்ள மூத்த மருமகளா லட்சணமா நா வர்றப்போலா ஒழுங்கா கவனிக்கனும்..என் ஷரவ் பேபிய பத்திரமா பாத்துக்கோ புரியுதா??என கண்ணீரை அடக்கியவாறு அவளை சீண்ட அவன் நினைத்ததை போலவே சிலிர்த்தெழுந்தவள்,வாடா நீ வரும்போது எப்படி கவனிக்குறேன்னு மட்டும் பாரு..எருமை என்றவாறு உள்ளே சென்றவளை கடந்து கார்த்திக் சிவாவை நோக்கி வந்தான்..

என்ன சிவா சண்டைகோழி சிலிர்த்துட்டு போகுது என்னாச்சு??

ஹா ஹா அது வழக்கம்போல அவளை வம்பிழுக்குறதுதான் கார்த்திக்..என்றவன் சற்று இடைவெளிவிட்டு கார்த்திக் நீங்கதான் அவளை பாத்துக்கணும்..நா உங்களுக்கு எதுவும் சொல்ல வேண்டியதில்ல..இன்பேக்ட் உங்கள விட அவளை யாரும் நல்லா பாத்துக்க போறதுமில்ல இருந்தாலும் ஒரு அண்ணணாசொல்ல தோணுது..அவ எதாவது தப்பு பண்ணிணாலும் நீங்கதான் எடுத்து சொல்லி புரிய வைக்கனும்..என கைப்பற்றி கொண்டான்..

சிவா இதெல்லாம் சொல்லணுமா சஹானா இனி என் பொறுப்பு ..அவளை பத்திரமா பாத்துக்குறேன் ஓகே தான ஆனாலும் எப்பவுமே சண்டை போட்டுட்டே இருப்பீங்க ரெண்டு பேரும் பட் இப்போ என்னடானா பாசமலர் படத்தையே மிஞ்சிட்டீங்க போங்க என இயல்பாய் முடித்தான்..

அதற்கு புன்னகைத்தவன் கார்த்திக் நீங்க எப்போ கிளம்புறீங்க அம்பைக்கு..நாங்களும் வர்றேன்னு சொன்னா கேக்க மாட்றீங்க..

நாளை மறுநாள் கிளம்புறேன் சிவா..நீங்க இங்கயிருந்து எனக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்ண வேண்டியிருக்கும் அதனாலதான் வேண்டாம்நு சொல்றேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.