(Reading time: 29 - 58 minutes)

அதுவும் போக ஹனிமூனுக்கு குடும்பத்தையே கூட்டிட்டு போனா என் பொண்டாட்டி என்ன உண்டு இல்லநு ஆக்கிர மாட்டாளா நீங்களே சொல்லுங்க. என்று கண்சிமிட்டியவனை வழக்கமான ஆச்சரியத்தோடு எதிர்கொண்டு விடைப் பெற்று நகர்ந்தான்..

அவன் பாட்டி தாத்தா அத்தை தவிர அனைவருமே கிளம்பியிருக்க சஹானா ஹாலில் ஷரவன் ஷரவந்தியோடு பேசிக் கொண்டிருந்தாள்..சஹி நீ ட்ரெஸ் சேஞ்ச் பண்றதுணா மேல ரூம்ல போய் பண்ணிக்கோ உன் ட்ரெஸ் எல்லாமே அங்க தான் இருக்கு என்றவாறு கார்த்திக் சோபாவில் அமர்ந்தான்..

ஆமா அண்ணி நா கூட சொல்லணும்நு நினைச்சேன் போங்க நா உங்களுக்கும் அண்ணாக்கும் சாப்ட எதாவது எடுத்துட்டு வரேன் என்றவாறு ஷரவந்தியும் கிளம்ப கார்த்திக் தம்பியோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்..

மாடியின் அறை கதவை திறந்து உள்ளே சென்று தாழிட்டு திரும்பியவளுக்கு தன் பிறந்தநாளன்று சுவரேறி வந்தது நினைவு வர தானாக அவளிதழில் புன்னகை குடிகொண்டது..அலமாரியை திறந்தவளுக்கு கண்கள் தானாக விரிந்தது..அழகான அரக்குநிற சில்க் காட்டன் புடவையில் பச்சைநிற பார்ட்ரோடு அழகாய் இருந்தது அந்த புடவை அதனை வருடியவளுக்கு உள்ளே ஏதோ தட்டுப்பட மடிப்பை பிரித்தவளுக்கு உள்ளிருந்த காகிதம் கண்களில்பட்டது..

வெல்கம் டு அவர் ரூம் மை பொண்டாட்டி..

இந்த லெட்டர நீ படிக்கும்போது நா எவ்ளோ ஹேப்பியா இருப்பேன்னு எனக்கே தெரியாது..என் சஹி இனி புல்டைம் என்கூடவே இருக்க போறா..ஐ அம் வெரி லக்கி டு ஹேவ் யூ அஸ் மை பெட்டர் ஹாவ் சஹிம்மா..இனி இது உன் வீடு எப்பவும் ஹேப்பியா இரு..இதேமாறி அடிக்கடி சர்ப்ரைஸ் குடுக்க ட்ரை பண்ணிட்டே இருப்பேன்..இப்போ குட் கேள்ஆ இந்த சாரிய கட்டிட்டு சீக்கிரமா கீழே வா பாக்கலாம்..லவ் யூ பேபி..

அதை கைகளால் வருடியவளுக்கு மனமெல்லாம் நிறைந்து போனது..கார்த்திக் அவளை இன்னும் இன்னுமாய் ஆக்கிரமித்துக் கொண்டேயிருந்தான்..இனி அவன்தான் அவள் உலகம் என தீர்மானித்தாள்..தன்னவனுக்காக பார்த்து பார்த்து புடவையை கட்டியவள் கண்ணாடியில் பலமுறை பார்த்து த்ருப்தியடைந்த பின் மெதுவாய் கீழிறங்கினாள்..ஏதோ நாளிதழை பார்ப்பதாய் நடித்துக் கொண்டிருந்தவன் படிகளில் கேட்ட அரவத்தை தொடர்ந்து ஆவலாய் மேலே பார்க்க துடைத்து வைத்த குத்துவிளக்கு போல் அம்சமாய் வருபவளிடமிருந்து கண்களை நகர்த்த முடியாமல் நகர்த்தவும் விரும்பாமல் இதழோர புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான்..இரு புருவத்தையும் மேலும் கீழுமாய் அசைத்து புடவை எப்படியிருக்குஎன பெண்ணவள் கேட்க கண்ணடித்து வாய் சுழித்து பிரமாதம் என்றான் கார்த்திக்..இருவருமே தங்கள் செய்கையை நினைத்து சிரிக்க ஷரவந்தி சஹானாவிற்காக ஜுஸ் எடுத்து வந்தாள்..

அண்ணி இந்தாங்க சாப்டுங்க வாவ் சாரி ரொம்ப அழகாயிருக்கு எங்க வாங்கினீங்க???

தேங்க்ஸ் ஷரவ் இதுவா இது வந்து அப்பா கடையில தான்..என சமாளிக்க கார்த்திக் ஒன்றும் அறியாதவனாய் மறுபுறம் திரும்பிக் கொண்டான்..அதன்பின் மதிய உணவு அக்கம்பக்கத்தாரின் வருகையென பொழுது கழிய இருவரும் சந்தித்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமலே போனது..இரவு உணவை முடித்து ஷரவந்தியோடு அமர்ந்திருந்தவளை கீதா அழைக்க ஓரளவு சகஜ நிலைக்கு திரும்பியிருந்தவள் அதே நினைவோடு அவர் பின்னே சென்று சொல்லுங்க ஸ்வீட்டி என முடித்தவள் சட்டென நிலைமை உணர்ந்து அவர் ஏதோ சொல்ல வாய் திறப்பதற்குள் சாரி சாரி இனி அத்தநு தான கூப்டனும் சாரி..என காதைப் பிடித்து நின்றாள்..

சட்டென சிரித்தவர் அவள் கையை இறக்கி சஹானா நீ எப்பவும் போல இரு அதுதான் அழகே..நா எப்பவும் ஸ்வீட்டி தான்..ரொம்ப சந்தோஷமா இருக்குடா..கார்த்திக் முதன்முதலா உங்க விஷயத்தை சொன்னப்பவே எனக்கு அவ்ளோ சந்தோஷம் காரணமே உன்னோட இந்த வெகுளிதனம் தான்..வீட்டோட மூத்த மருமக அந்த வீட்டுல இருக்குறவங்களுக்கு அடுத்த அம்மா மாதிரி..இப்போ நீ ஷரவ் ஷரவன்லா ப்ரெண்ட்லியா பழகுறத பாக்கும்போது அந்த சந்தோஷம் இரட்டிப்பாய்டுச்சு என அவள் கன்னம் வருடினார்..

தேங்ஙங் யூ சோ மச் ஸ்வீட்டி என அவரை கட்டிக் கொண்டாள்..இனி நம்ம வேலையே வீட்ல எல்லாரையும் ஒரு வழி ஆக்குறதுதான் டீலா??

கண்டிப்பாடா பண்ணிடுவோம்..அடடா உன்னோட சேர்ந்து நானும் என்ன பண்ணிட்டு இருக்கேன்..எதுக்கு கூப்டேனே மறந்துருவேன் போல இந்தாம்மா இந்த புடவையை கட்டிட்டு வா நா உன்ன ரெடி பண்றேன்..கார்த்திக் அப்போவே மாடிக்கு போய்ட்டான்..இருநா போய் பூ எடுத்துட்டு வரேன் என அவர் நகர்ந்ததுதான் தாமதம் சஹானாவிற்கு கை கால்களெல்லாம் உதறாதகுறைதான்..தனிமை அவர்களுக்கு புதிதில்லை எனினும் கணவணாய் தன்னவனை தனிமையில் சந்திக்கப் போவதை நினைத்தால் ஏனோ வெட்கமும் பதட்டமும் மொத்தமாய் வந்து அப்பிக் கொண்டதாய் உணர்ந்தாள்..இருப்பினும் இவையெதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் புடவையை உடுத்தி வந்து கண்ணாடி முன் அமர கீதா அவளுக்கு தலைவாறி கொண்டு வந்திருந்த பூச்சரத்தை வைத்துவிட்டார்..மருமகளை தன்புறம் திருப்பி திருஷ்டி கழித்து பால் சொம்பை கொடுத்து அனுப்பினார்..

அடிமேல் அடி வைத்து நகர்ந்தவளுக்கு யார் கண்ணிலும் படாமல் போக வேண்டுமே என்ற நாணம் வேறு இருக்க அவள் பயந்தாற் போல் ஹாலில் யாருமே இருக்கவில்லை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.