(Reading time: 29 - 57 minutes)

நரேன் அப்படி நினைத்துக்கொண்டு இருக்கையில் மாதேஷ்க்கு ஆதித்தராஜ் ஜானகி பில்டர்ஸ் எம்.டி என்ற பேர் கேட்டதும் “தன் அப்பாவின் இரண்டாம் வீட்டின் மகன் அவன் என்பதை தெரிந்துகொண்டான்” இவனுக்குத்தான் ஏற்கனவே வர்ஷா கூட லவ் ஓடிட்டு இருக்கு என்று பார்த்தால் இப்போ இன்னொரு கிளாசிக் புயூட்டி காக இவன் கூட சண்டை வேறு போட்டிருக்கிறான் எப்படித்தான் இவனுக்கு மட்டும் அழகான பொண்ணுங்க எல்லாம் செட் ஆகுதோ..? என்று மனதிற்குள் கடுப்பாக யோசித்துக்கொண்டு இருந்தான்.

வசந்த்.... என்னடா இரண்டு பெறும் சைலன்ட் ஆகிட்டீங்க, என்றதும் தங்களின் யோசனையில் இருந்து மீண்டு இரண்டுபேரும் பார்த்ததும், வசந்த் நரேனிடம் அதுதான் உன் அப்பாவிடம் சொல்லிடீயே அவனை உன் அப்பா சும்மாவா விடுவார் என்று கேட்டான்.

அவன் அவ்வாறு சொல்லியதும், நீவேற! ஏன் கடுப்பை கிளப்பற என் அப்பா என்னடா என்றால் என்னையே அடிக்க வந்துட்டார்! என்றவன், ஏன் அவர் தன்னை அடிக்க வந்துவிட்டார் என்ற உண்மை காரணத்தை மறைத்து அவர்களிடம் அந்த ஆதித்தராஜ் தலைவருக்கு வேண்டிய ஆளாம். “அவனை பகைத்துக்கொண்டால் தலைவரை பகைத்துக்கொள்வது போல்!” என்று என்னை அடக்கி வாசிக்க சொல்லி அரட்டுகிறார் என்றான்.

சரிடா , இப்போ என்ன போன் தானே போச்சு, உனக்கு என்ன அது ஒரு மேட்டரா மாசம் ஓர் போன் மாற்றுகிறவன் தானே நீ. அதை என் ஸ்டாப் அழகு நிலாவிடம் திரும்ப வாங்கப் போய் திரும்ப ஏதேனும் பிரச்சனை அந்த ஆதித்தராஜ் பண்ணினால் பிறகு உன் அப்பா உன்னை உண்டு இல்லைன்னு செய்துடப்போறார், இந்த மேட்டர இதோட விட்டுரு என்றான் வசந்த்.

அவன் அவ்வாறு கூறியதும் டெண்சனான் நரேன் வசந்திடம் டேய் வசந்த் போன் எனக்கு முக்கியமில்லை ஆனால் அதில் நான் பெட் கட்டி எடுத்த போட்டோஸ் வீடியோஸ் எல்லாம் இருக்கு அது தான் டா பிரச்சனை என்றான்.

அவன் அவ்வாறு சொன்னதும் என்ன....? நீ அதையெல்லாம் சேவ் பண்ணியா வச்சிருக்க... என்று வசந்த் மாதேஷ் இருவரும் கோரசாக பயந்த குரலில் கேட்டனர்.

மாதேஷ் மற்றும் வசந்த் ,நரேன் மற்றும் இன்னும் சில பணக்கார வீட்டு பசங்கள் எல்லோரும் காலேஜில் ஒன்றாக படிகிறேன் என்ற பெயரில் சுற்றித்திரிபவர்கள். அவர்கள் எல்லோரும் படித்தது ஓர் தனியாரின் செல்வந்தர்கள் வீட்டு பசங்கள் அதிக டொனேசனும், பீசும் கட்டி படிக்கும் ஓர் கல்லூரி அவனுடைய செட்டில் வசந்த் மட்டும் ஓர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் மெரிட்டில் டொனேசன் மட்டும் இல்லாமல் ஆனால் பீஸ் அதிகம் கட்டி அவன் ஆசைக்காக அவனது பெற்றோர் அந்த காலேஜில் கஷ்ட்டப்பட்டு அவனை சேர்த்தார்கள்.

அங்கு வசந்துக்கு மாதேஷின் நட்பு கிடைத்தது ஓர் விதத்தில் அவனுக்கு சந்தோசமாக இருந்தது. ஏனெனில் மாதேஷ் வசந்தின் குடும்ப சூழலைப் புரிந்து கொண்டு அவனுக்கு அவன் ஏழ்மை தெரியாதவாறு தனது நட்பு வட்டத்துக்குள் அவனுக்கான் செலவுகளையும், உடை போன்ற விசயங்களையும் தானே பூர்த்தி செய்தான், அதற்கு பதிலாக வசந்த் அவனுக்கு பாடத்தில் நோட்ஸ் எடுக்க செமஸ்டர் டைமில் தனது குறிப்பு கொண்டு அவனுக்கு எக்ஸாமில் பாஸ் ஆகும் விதத்தில் உதவி புரிந்தான்.

மாதேஷ் ஒன்றும் மூளையில்லதவன் கிடையாது. ஆனால்! ஒழுங்காக வகுப்பு அட்டன் பண்ணாமலும் அப்படியே வந்தாலும் அசால்டாக நோட்ஸ் எடுக்காமலும் காலேஜ் வாழ்க்கை என்பது அனுவிப்பதற்கென்றே வாழ்பவன். இருந்த போதும் எக்ஸாம் டைமில் சுருக்கமாக வசந்த் கூறும் பாடக் குறிப்புகளை புரிந்து கொண்டு அரியர் இல்லமால் பாஸ் செய்வற்குன்டான புத்தியும் அதற்காக உதவும் வசந்தினை தக்க வைப்பதற்கு லக்சூரியஸ் வாழ்க்கை வாழ வசந்துக்கும் சேர்த்து பணம் செலவு செய்வது ஒன்றும் அவனுக்கு பெரிய விஷயமாக இருக்கவில்லை.

மாதேஷ், சிறுவயதில் தன் பாட்டியின் முழு பராமரிப்பில் வளர்ந்தவன் அவன் சிறியவனாக இருக்கும் போது அவனின் பள்ளியிலேயே அவரின் அப்பாவின் மற்றொரு மனைவியின் மகனான தன்னை விட ஒரு வயது சிறியவனான ஆதித்தும் படித்தவிசயத்தை முதலில் அறியாமல்தான் இருந்தான். ஆனால் ஓர் நாள் தனது தந்தையின் கார்களில் ஒன்றில் தனது வீட்டு டிரைவர் ஓர் பையனை ஸ்கூலில் வந்து இறக்கிவிடுவதை தற்செயலாக் பார்த்தான் மாதேஷ் .

அவன் வேகமாக தனது டிரைவரை கூப்பிடுவதை டிரைவர் கவனிக்காமல் சென்று விடுகிறான் உடனே உள்ளே சென்று கொண்டிருந்த அந்த பையனிடம் போய் யார் டா நீ? எப்படி என் அப்பா காரில் வந்து இறங்குகிறாய்? என்று விசாரித்தான் அதற்கு அவன் அது ஒன்றும் உங்க அப்பா கார் கிடையாது. என் அப்பா கார் .

நான் இன்று ஸ்கூல் பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன் அதனால்தான் என் அப்பா காரில் வந்தேன் என்று கூறினான். அவன் சொல்வதை பார்த்து குழம்பியபடி சாயங்காலம் வீட்டிற்கு போனதும் தனது பாட்டியிடம் அன்று நடந்ததை கூறினான் மாதேஷ் .

ஏற்கனவே மனோன்மனிக்கு தன் மருமகன் இன்னொரு பெண்னை மணந்திருக்கும் விஷயம் தெரிந்தும் அதை கண்டிக்க முடியாமல் வேதனையில் இருந்தவருக்கு தன் பேரன் அந்த சிறுவன் பற்றிக் கூறியதும் அது தன் மருகனின் இரண்டாம் மனைவியின் பிள்ளை என புரிந்து கொண்டார். எனவே தன்னால் தன் மருமகனையும் அவரின் இரண்டாம் மனைவியையும் தண்டிக்க முடியாத ஆத்திரத்தை தன் பேரனின் மூலம் அந்த சிறுவனை காயப்படுத்துவதில் தணிக்க எண்ணினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.