(Reading time: 29 - 57 minutes)

அவர் கூறியதை தான் அலட்சியப்படுத்தியதால் அவர் சொன்னபடி செய்து என் கையில் காசு இல்லாமல் செய்துவிட்டார்.

பின் பாட்டிதான் அவர்களின் டெபாசிட்டில் இருந்து எனக்குப் பணம் கொடுத்து என்னை இக்கட்டில் இருந்து காப்பாற்றினார்கள்

ஆனால் ஒருமாதம் கழித்து பாட்டியே ஏன்கன்னு! நீ கொஞ்சம் தொழிலை பார்க்கக் கூடாத என்று புலம்ப ஆரம்பிச்சுடுச்சு.

பிறகு நான் தான் அந்த ஆதித் மட்டும் சுயமா தொழில் செய்து சம்பாதிக்கிறான் நான் மட்டும் என்ன குறைச்சலா எனக்கும் பணம் வாங்கிகொடுங்கள் நானும் அவனைவிட முன்னேறி காட்டி அப்பா முகத்தில் கரியை பூசிக்கான்பிகிறேன் என்று கூறி இங்க வந்து சென்னை வாழ்க்கையை சந்தோசமாக பாட்டி காசில் என்ஜாய் பண்ணிட்டு இருந்தேன். ஆனால் கையில் இருக்கும் காசு குறையும் நேரம் இந்த வசந்தை பார்த்தேன். அவன் பிஸ்னசை விரிவுபடுத்தக் கையில் காசு இல்லாமல் முளித்துக்கொண்டிருந்ததையும் பார்த்தேன்.

அவனுடன் பார்னராக சேர்ந்து பிசினஸ் செய்ய பணம் போடுறேன் என்று கொக்கியை போட்டேன், பட் முதல் மட்டும் தான் நான் போடுவேன், லாபத்தில் எனக்கு பங்கு நீ கொடுத்திடனும் என்றும் அவன் தொழிலை பார்த்துக்கொள்ள நான் தொழில் செய்கிறேன் என்ற பேரில் வாழ்கையை என்ஜாய் பண்ணலாம் என்று பார்த்தால் விடமாட்டார் போல என்ன செய்ய அவர் சொல்வதற்கு சரி சொல்லிவிடுவோமா...? என்ற யோசனையுடன் காரில் சென்றவன் அந்த ஷாப்ட்வேர் கம்பெனியின் முன் காரை பார்க் செய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.

அவன் நேராக எம்.டி வசந்தன் என்ற பெயர் போட்ட அறைக்குள் நுழைந்தான். அவன் உள்ளே நுழைகையில் எதிரில் இருந்தவனிடம் கோபமாக வசந்த் கத்திக்கொண்டு இருந்தான்.

டேய் இது நான் பிசினெஸ் பண்ணும் இடம், நம்ம பிரண்ட்ஷிப் எல்லாம் நாம் வெளியில் மீட் பன்னும் போது தான், இங்கவருகின்ற ஜோலியெல்லாம் வச்சுக்ககூடாது. வா! எதுனாலும் நாம் வெளியில் போய் பேசலாம் என்று வசந்த் எதிரில் உட்கார்ந்திருந்த நரேனிடம் சொல்லிக்கொண்டு இருந்தான்.

கதவு திறக்கும் அரவம் உணர்ந்து யார் என்று பார்த்தனர் வசந்தும் நரேனும் மாதேஷை பார்த்ததும் தனக்கு சப்போர்ட்டுக்கு ஆள் வந்த சந்தோசத்தில் டேய் மாதேஷ் வசந்த்தை பாரடா எனக்கு ஓர் இக்கட்டான நிலைமை இவனால் உதவ முடியும் ஆனால் செய்ய மாட்டேங்கிறான் நீ கொஞ்கம் ஹெல்ப் பண்ண சொல்லுடா என்று கூறினான் நரேன்.

அவன் கூறிக்கொண்டு இருக்கும் போதே மாதேஷ் நீ இவனுக்கு சப்போட் பண்ணாத. வா வெளியில் போய் மத்ததை பேசலாம் என்றவன் தனது அசிஸ்டென்டை அழைத்து செய்ய வேண்டிய வேலைகளை செல்லி விட்டு வெளியில் வந்தனர்

வெளியில் வரும் போது மாதேசிடமும் வசந்திடமும் பின்னால் தன்னை மறைத்து குனிந்தபடி வந்த நரேன். நான் சொல்கின்றவளை இரண்டு பேரும் பார்த்துக்கோங்க மத்ததை வெளியில் போனதும் சொல்கிறேன் என்றான்

கண்ணாடி தடுப்புக்கு அந்தபக்கம் உட்கார்ந்து கம்யூட்டரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அழ்குநிலாவை இருவருக்கும் அடையாளம் காண்பித்தான் .

மூன்று பேறும் வெளியில் வந்ததும் அருகில் இருந்த ரெஸ்டாரெண்டுக்கு சென்றதும் இப்பொ சொல்லு அவளை எதுக்கு அடையாளம் காண்பித்த என்று கேட்டார்கள் மாதேஸும்,வசந்தும் .

அந்த நரேன் என்பவன் வேறு யாரும் இல்லை ஹோட்டலில் வைத்து அழ்குநிலாவிடம் வம்பிளுத்தவன் தான் அவன்.

.நரேன், இரண்டு நாள் முன்பு, தான் தனது மற்ற நண்பர்களுடன் அருகில் இருந்த த்ரீ ஸ்டார் ஹோட்டலுக்கு போனதும் அங்கு அழ்குநிலாவின் துருதுருப்பிலும் அழகிலும் ஈர்க்கப்பட்டு தன் நண்பர்களிடம், சபலத்தால் அவளை தொட்டுப்பார்க்க விரும்புவதாக பெட் கட்டி அது போல் சரியாக எல்லாம் நடந்து முடிக்கும் நேரத்தில் குறுக்கே ஒருவன் வந்து அத்தனை சந்தோசத்தையும் கெடுத்ததோடு அல்லாமல் தனது மொபைலையும் பறித்து அழ்குநிலாவிடம் கொடுத்த விபரத்தையும் கூறினான்.

அவன் கூறி முடித்ததும் வசந்த் டேய் நீ யாரு என்று தெரிந்துமா உன் மேல் ஒருவன் கை வைத்தானா? என்று கேட்டான்,

‘ஆமாம்’ அந்த நரேன் மினிஸ்டர் காந்தனின் மகன் . டேய் நான் யார் என்பதை சொன்ன பிறகு தான்டா அவன் என்னை அடித்தான். பிறகு அவனை பத்தி விசாரித்தபோதுதான் தெரிந்தது அவன் பேர் ஆதித்தராஜ் ஜானகிபில்டரின் எம் டி என்று தெரிந்து கொண்டேன்.

என் அப்பாவிடம் அவன் என்மேல் கை வைத்துவிட்டான் என்று சொன்னேன் என்றான்.

நரேனின் “மனதிற்குள் அன்று தான் ஆதித்தின் பெயரைச் சொன்னதும், அவர் தன்னை அடிக்க வந்துவிட்டார். திகைத்து போய் நின்ற நரேனிடம் யார் கூடபோய் மோதிட்டு வந்திருக்கிற, நம்ம புது பார்ம்ஹௌசிற்கு பிளான் போட்டு கட்டிக்கொடுத்தவன் அவன் தான். அந்த வீட்டின் ரகசியம் முழுவதுவும் தெரிந்தவன் அவன்தான் அவனை பகைத்துக்கொள்வது நமக்கு நாமே ஆப்பு வைத்துக் கொள்வதுபோல் என்று கூறியதை நினைத்தான்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.