அதை பார்த்த மனோன்மணி தன பேரனிடம் மாதேஷ்..... என்ற சத்தத்துடன் வர, விழுந்த வேகத்தில் எழுந்தவன் கோபத்துடன் திரும்ப ஆதித்தை அடிக்கப் போக அதற்குமுன்
மனோன்மணி தன பேரன் கீழே விழக் காரணமாக இருந்த ஆதித்தின் கன்னத்தில் இடி என அறைந்து விட்டாள்.
அதிர்ந்தும், வழியுடனும், அவமானத்துடனும் தன்னை சுற்றி ஆதித் பார்த்தான் அங்கு சேகரும், அவனது வகுப்பு மாணவர்களும் நின்று இவர்களை வேடிக்கை பார்ப்பதை பார்த்தவன் அதன் பின் மனோன்மணியின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளை கேட்டு அவமானத்தில் மனம் வெந்து போனான் .
அவனை அறைந்ததுமட்டும் அல்லாமல் என் மக புருஷனை காசுக்காக மயக்கி வாழ்ரவ பையனை எப்படி வளர்ப்பா இப்படி ரவுடியாகத்தான் வளர்ப்பா! என்று தன் பேரனின் மேல் தப்பே இல்லாதது போல் ஆதித்தின் பிறப்பை கொண்டு அவனை அவமானப் படுத்தினாள் மனோன்மணி .
இதோபாரு விளக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் கேட்குதோ! கேடுகெட்ட உனக்கு பி எம் டபுள்யூ கார் கேட்குதோ! இதுக்கு முன்னாடி ஒருநாள் இந்த கார்லதான் நீ வந்தயாமே.! உன் அம்மாகாரிகிட்ட சொல்லிவை அவ அழக காட்டி என் மகபுருஷனை மயக்கி வச்சுக்கிட்டாலும் என் மகளுக்கு பிறந்த என் மாதேஷ் தான் என் மாப்பிள்ளை வேலாயுதத்தின் வாரிசு .சீச்சீ அடுத்தவ புருஷனை காசுக்காக கட்டிட்டு குடும்பம் நடத்துற உன் அம்மாவெல்லாம் நல்ல பொம்பளையா? என்று கூறிவிட்டு தன பேரனின் கை பிடித்து காருக்கு கூட்டிச்சென்று காரில் ஏறினார்கள்.
அவர்கள் ஏறிய தன அப்பாவின் காரையும் அதில் ட்ரைவர் இடத்தில் அமர்ந்து கண்ணீருடன் தன்னை பார்த்தபடி காரை கிளப்பிய முருகன் மாமாவையும் பார்த்தவன் அவமானத்திலும் கோபத்திலும் தனது ஸ்கூல் பஸ்ஸில் ஏறி அமர்ந்தான்
ஆனால் அவனின் சீட்டின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த சேகர், எப்படி அடி விழுந்துச்சு ஒரு அடினாலும் அப்படியே ஐந்து விரலும் பதிந்து கன்னமே வீஞ்கிடுச்சு பாரேன், என்னைமாதிரி நல்ல அம்மாவிற்கு பிறந்த பையனை, கெட்ட அம்மா பெத்த மகனான ஆதித் அடிச்சதினால்தான் உடனே கன்னம் வீங்குற மாதிரி கடவுள் தண்டனை கொடுத்திட்டாரு என்று ஆதித்தின் காதில் விழுமாறு பக்கத்தில் உள்ளவனிடம் சேகர் கூறினான் .
ஆதித்துக்கு அந்த பஸ்ஸில் உள்ள அனைத்து மாணவர்களும் தன்னை கேவலமாக் பார்ப்பது போல் தோன்றியது. அவனுக்கு முள் மேல் அமர்ந்து இருப்பது போல் பஸ்ஸில் கொதிக்கும் உள்ளத்தோடு அமர்ந்திருந்தான்.
ஸ்கூல் பஸ்ஸிலிருந்து இறங்கி வேகமாக தன வீட்டிற்குப் போனவனை வந்துட்டாயா ஆதித்..! வா.. வா.., அம்மா உனக்குப்பிடித்த பஜ்ஜி செய்துகிட்டு இருக்கிறேன். பாத்ரூமில் டவல் போட்டுவச்சிருகிறேன் ஒருபோனி மேல ஊத்திட்டு யூனிபார்ம் மாத்திட்டு வா. அம்மா அதற்குல் உனக்கு தட்டில் எடுத்து கொண்டு வருகிறேன் என்று அவன் வந்த அரவம் கேட்டு அடுப்படியில் இருந்து சத்தம் கொடுத்தாள் ஜானகி.
ஆனால் அவள் கூறியதற்கு எதற்கும் பதில் கொடுக்காமல் ஹால் சோபாவில் விரல் தடம் பதிந்து வீங்கிய முகம் கொடுத்த வலியைவிட சொல்தடம் ஏற்படுத்திய மனதின் வலியால் கண்ணில் பெருக்கெடுத்த நீருடன் அம்மாவின் வார்த்தையை காதில் ஏற்றாமல் அமர்ந்திருந்தான் ஆதித்.
தான் கூறியதும் மகன் பாத்ரூம் போகாமல் அடுப்பறைக்குள் வந்து தன்னிடம் கொஞ்சிகேட்டு, தன் கையால் சட்னிதொட்டு பஜ்ஜி இரண்டினை வயிற்றினுள் தள்ளாமல் போகமாட்டான் என்று மனதினுள் நினைத்தவள், உதட்டில் சிரிப்புடன் அப்படியே அவன் அப்பாவை போலவே நெனச்சதை சாதிப்பவன் என்று நினைத்தபடி தன மகனுக்கு தட்டில் சட்டினியோடு பஜ்ஜியையும் எடுத்துவைத்துவிட்டு அடுத்த வாழைகாய் துண்டை மாவில் தோய்த்து எண்ணையில் போட்டவள் இன்னும் தன் மகன் வராததை நினைத்து யோசனையுடன் வாணலியில் போட்டிருந்த பஜ்ஜியை திருப்பிவிட்டுவிட்டு கையை கழுவி டவலில் துடைத்தவள் என்னையில் மிதந்த பஜ்ஜியை எடுத்து ஏனத்தில் போட்டுவிட்டு அடுப்பை அணைத்து பின் மகனை தேடி வந்தாள் ஜானகி .
வீங்கிய கன்னமும் அழுத கண்களுமாக ஹாலில் உட்கார்ந்திருந்த ஆதித்தை கண்டு பதற்றத்துடன் என்ன ஆதித்! ஏன அழுகிற கன்னத்தில் யார் அடித்தார்கள்..?என்று கேட்டபடி தன மகனிடம் சென்ற ஜானகியின் கையை பிடித்து ஆதித்
அம்மா என் ஸ்கூலில் படிக்கும் மாதேஷின் அப்பாவும் என் அப்பாவும் ஒருவர் கிடையாது தானே!. நீங்கள் அப்பாவை காசுக்காக ஒன்றும்..... என்று கூறியவன் மேற்கொண்டு கூறமுடியாமல் விம்மலுடன் மாதேஷின் அப்பாவின் வைப்பாட்டி இல்லையே... என்று தடுமாரிபடி கூறி முடித்தான்.
தன மகன் மாதேஷ் என்று கூரியதுவுமே அதிர்ந்த ஜானகி கடைசியாக அவன் கூறிய வைப்பாட்டி என்று சொல்லை கேட்டதும் அதிர்ச்சி விலகி கோபத்துடன் என்னசொன்ன என்று கூறியவள் அவனின் மறு கன்னத்தில் தானும் ஓர் அரை கொடுத்தார்.
பின் அழுதபடி நானும் அவருக்கு பொண்டாட்டிதான். இதோபார்... என் கழுத்திலும் அவர் தாலி கட்டியிருக்கிறார் என்று தன கழுத்தில் கிடந்த தாலியை எடுத்து அவனிடம் காண்பித்தாள் என்னை எந்த மாதிரி வார்த்தை சொல்லிவிட்டாய்? என்று கூறி தன் முகத்தில் இருகைகளாலும் அறைந்து அழுக ஆரம்பித்தார் ஜானகி