(Reading time: 29 - 57 minutes)

தனது ஹாஸ்டலை விட்டு வெளியில் வந்ததும் அவளுடைய மொபைலுக்கு அழைப்பு வந்தது பயந்து கொண்டே அதை எடுத்து பார்த்தவளுக்கு அதுவும் ஓர் பிரைவேட் நம்பர் கால் என்பது புரிந்தது கலக்கத்துடன் காதில் வைத்தாள்.

அழைத்தவன் இரவு அவளுக்கு போன்செய்து அவளை கதிகலங்க வைத்தவன் தான், என்ன கேர்ள் இன்னைக்கு மதியம் நான் சொன்ன மாலுக்கு வந்துவிடனும், நான் அங்கு நீ வந்தவுடன் போன் செய்து எங்கு நிற்க வேண்டும் என் சொல்கிறேன் ஏதாவது சொதப்பலாம் என்று நினைத்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று கூறிவிட்டு தொடர்பு துண்டித்தான்.

அழகு நிலாவிற்கு அந்த மொபைலில் இருந்த அன்று அவளுக்கு நடந்த நிகழ்வின் வீடியோ பதிவை நீக்காமல் அதனை கொடுக்கவும் மனது இல்லை, மேலும் அவனின் மிரட்டலை அசால்டாக பாவித்து வேறு நடவடிக்கை எடுக்கவும் பயம் ஏற்பட்டது .

மேலும் அன்று அதை அந்த டிப் டாப் ஹீரோவால் மட்டும் எப்படி அதை இயக்கி தன்னிடம் காண்பிக்க முடிந்தது என்னால் இதை லாகின் செய்யவே முடியவில்லையே என்று நினைத்தாள்.

மேலும் அந்த வீடியோ பதிவை பார்பவர்கள் அன்று அவனுடன் தான் இணைந்து விழுந்த காட்ச்சியை எப்படிவேண்டுமானாலும கதைகட்டி தன்னை தப்பாக நினைக்கவும் வழி இருப்பதை தெரிந்தவள் இது மட்டும் வெளியில் பரவினால்!, என்பதை நினைத்தவள் நெஞ்சம் நடுங்கியது

முதல் முதலாக் தனது அம்மா சொல்வதை கேட்டு தான் வேலைக்கு வராமல் இருந்தால் இந்த மாதிரி இக்கட்டில் மாட்டாமல் இருந்திருக்கலாமோ? என்ற எண்ணம் ஏற்பட்டது.

என் அம்மாவிற்கு இந்த விஷயம் தெரிந்தால் என் மேல் தப்பு இல்லையென்று நான் கூறியதை அது நம்பினாலும், அம்மா கூறும் “முள்மேல் சேலை விழுந்தாலும் சேலை மேல் முள் பட்டாலும் சேலைக்குத்தான் நட்டம்” என்று நினைத்து குழம்பியபடி அவளது அலுவலகத்தை அடைந்தாள்.

அவள் ஆபீஸ் வாசலில் இறங்கியதும் மறுபடியும் போன் வந்தது. அவளின் ஓவ்வொரு அசைவையும் அவன் அறிந்து வைத்திருக்கிறான் என்று அவள் உணரச்செய்யவே இப்படி அவளை தொடர்புகொண்டு பேசுவதாக கூறினான்.

உன் ஒவ்வொரு அசைவும் எனக்குத் தெரியும். எனக்குத்தெரியாமல் எதுவும் உன்னால் செய்யமுடியாது. அப்படியேதும் புத்திசாளித்தனமாக் நீ நடக்க முயன்றால்! பிறகு நீ ஒழுங்காக குட்லாம்பட்டிக்கு போய் சேரமாட்டாய் என்ற மிரட்டலுடன் பேசினான். மேலும் அவன் மாலில் பெயரை சொல்லி அங்கு மதியம் 3 மணிக்கு மொபைலை தன்னிடம் கொடுக்க வரவேண்டும் என் கூறி வைத்துவிட்டான் .

காலையில் சாப்பிடாமல் வந்ததும் மேலும் இந்த பிரச்சனையை எப்படி சமாளித்து மீளுவேன் என்ற மண்டைகுடைசசலும் சேர்ந்து அவளுக்கு தலைவலி ஏற்பட்டது. என்றுமே அவள் இருக்கும் இடம் கலகலப்பாக் இருக்கும். இன்று அவளின் அமைதி கண்டு உடன் வேலை பார்பவர்கள் உடல்நலமில்லையா? என்று விசாரிக்கவேறு ஆரம்பித்துவிட்டனர்.

ரமேஸ், ஒருபடி மேலே சென்று மதியம் அவள் லன்ச் கூட சாப்பிடவராமல் தலையை பிடித்தபடி அமர்திருந்தவளின் முன் கேன்டீனில் இருந்து சாப்பாடும் தலைவலி மாத்திரை, தண்ணீரோடு வந்து அமர்ந்தான்

நிமிர்ந்து பார்த்தவளிடம் அழகுநிலா சாப்பிடாமல் இருந்தால் தலைவலி இன்னும் கூடத்தான் செய்யும். முதலில் சாப்பிடுங்க என்று கட்டாயப்படித்தினான்.

அவளுக்குமே கொஞ்சம் தன்னை கவலையில் இருந்து வெளிக்கொண்டுவர கொஞ்சம் யோசிப்பதற்கு சக்திவேண்டும், அதற்கு கொஞ்சம் சாப்பிட்டு மாத்திரையை போட்டுக்கொண்டு இந்த தலைவலியை விரட்டினால்தான் முடியும் என்று உணர்ந்தவள், தாங்ஸ் ரமேஸ், என கூறி அவன் கொடுத்த சாப்பாட்டை வாங்கி அவசரமாக சாப்பிட்டு முடித்தவளிடம் ஓர் மாத்திரையையும் தண்ணீர் கேனையும் நீட்டியவனின் முகம் பார்த்தால் அழகுநிலா.

ம்...வாங்கி போட்டுக்கோங்க என்று நீட்டினான். முதலில் அவளுக்கு இருந்த தலைவலியிலும் குழப்பத்திலும் அவன் குடுத்த சாப்பாட்டை யோசிக்காமல் உடன் வேலைபார்பவன் தானே! என்று நினைத்து உண்டவளுக்கு இப்பொழுது சாப்பாடு உள்சென்றதும் கொஞ்சம் தெளிவு வந்ததினால், ரமேஸ் சாரி! உங்களுக்கு என்னால் சிரமம் வேண்டாம் கீழே வச்சுடுங்க நான் எடுத்துப்போடுப்பேன் என்றவள் தனது பேக்கில் இருந்து சாப்பாட்டுக்கும் மாத்திரைகும் உரிய பணத்தை எடுத்தாள்.

அவள் ரமேஸிடம், செம பசி அதனால் தலைவலி கூடிருச்சு. கேண்டீன் போய் வாங்க கூட தெம்பு இல்லாமல் இருந்துச்சு. என்னோட கஷ்டம் பார்த்து உதவிசெஞ்சதுகு தாங்ஸ் ரமேஸ்! என்றபடி இத வாங்கிக்கோங்களேன் என்று பணத்தை கொடுத்தால்

அவள் தன்னிடம் சாப்படுக்கான காசை நீட்டவும் முகம் சுருங்க, கூடவேலை பார்பவர்களுக்கு உடலுக்கு முடியாதபோது ஓர் வேளை சாப்பாட்டு வாங்கி கொடுப்பதற்கு போய் யாராவது காசு வாங்குவாங்களா? அல்லது உங்களை மாதிரி இந்த சின்ன விசயத்துக்கு உதவி செய்ததுக்கு போய் காசு கொடுத்து அவமானப்படுத்துவாங்காளா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.