(Reading time: 22 - 43 minutes)

19. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ

தரை இறங்கிய பறவை போலவே

மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே

 

கரை ஒதுக்கிய நுரையைப் போலவே

என்னுயிர் தனியே ஒதுங்குகிறதே

 

தொடத்தொடதொட தொலைந்து போகிறேன்

எடை எடை மிகக்குறைந்து போகிறேன்

 

அட இது என்ன உடைந்து சேர்கிறேன்

நகத்தின் நுனியும் சிலிர்த்து விடக்கண்டேன்

 

நதியில் மிதக்கும் ஓடம் என

வானில் அலையும் மேகம் என

 

மாறத்துடிக்கும் வேகம் கண்டேன்

இதுவும் புதிய உணர்வு அல்லவா

 

காதல் பேச்சில் பொய் பூசுவாய்

மயங்கும் வேளை மை பூசுவாய்

 

விலக நினைதால் கண் வீசுவாய்

தவித்தேன் தவித்தேன் கிடந்து தவித்தேன் தவித்தேன்

ல்யாண கலை அகலாமல் வீட்டின் சாப்பாட்டு மேஜை பேச்சும் சிரிப்புமாய் களைகட்டியிருக்க கீதா ஒவ்வொருவருக்காய் பரிமாறிக் கொண்டிருந்தார்..கார்த்திக் அவ்வப்போது சஹானாவிற்கு பிடித்தவற்றை இயல்பாய் அவள் இலையில் வைக்க இளவட்டம் வழக்கம்போல் தங்கள் கேலிப் பேச்சை ஆரம்பிக்க சஹானாவிற்கோ முகம் சிவக்காமல் இருக்க வைப்பது பெரும்பாடாய் இருந்தது கார்த்திக்கோ எதற்கும் அசைவதாய் தெரியவில்லை..சிறுபுன்னகையோடு தன் வேலையை தொடர்ந்து கொண்டுதான் இருந்தான்..

கார்த்திக் நீங்க எப்போ ஊருக்கு கிளம்புறீங்க??-மோகன்..

நாளைக்கு நைட்ப்பா..கார்தான சோ ஒரு 8 மணிக்கு கிளம்பினா போதும்..ஒரு 15 டேஸ் லீவ் போட்ருக்கேன்ப்பா..அதுக்கப்பறம் எக்ஸ்டெண்ட் பண்ணவா வேண்டாமாநு பாக்கனும்..

ம்ம் கரெக்ட் தான்..இன்னும் ஒரு வாரம் கூட எடுத்துக்கோ எப்போ பாரு வேல வேலநு ஓடிட்டேயிருப்ப கொஞ்சமாவது ரிலாக்ஸா இருந்துட்டு வாங்க..சஹானா ட்ரெஸ்லா பேக் பண்ணிட்டியாம்மா??

இல்ல அங்கிள் அம்மா வீட்டுக்கு போய்ட்டு வந்துட்டு பண்ணலாம்நு இருக்கேன்..இப்படியாய் உணவை முடித்து இருவரும் சேகர் வீட்டுக்கு கிளம்பிச் சென்றனர்..சிவா குடும்பமும் வந்திருக்க கவனிப்பிற்கு குறைவில்லாமல் ஏதோ பத்து வருடங்கள் கழித்து மகளும் மருமகனும் வந்ததைபோல் கவனித்தனர்..சற்று நேரத்தில் சஹானா பெண்களோடு சமையலறையில் புகுந்து கொள்ள கார்த்திக் சிவா மற்றும் பெரியவர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்..கௌரியும் கிட்சனில் இருக்க சரியாய் மணி உள்ளே நுழைந்த நேரம் சஹானா அவளிடம்,கௌரி நேத்து நா குடுத்த கிப்ட பத்திரமா வச்சுகிட்டல நா சொன்னமாறி இப்போ பிரிக்ககூடாது புரியுதா??என கேட்க..

என்ன கிப்ட் சஹானாம்மா???-மணி

அது சஸ்பென்ஸ் அண்ணா அவ பர்த்டே வருதுல அதுக்கு எங்களோட கிப்ட் ஷரவந்தி அங்க இருக்க மாட்டால அதான் நேத்தே குடுத்துட்டோம்..

விளையாட்டு புள்ளைங்க என்றவாறு அவர் நகர சஹானா கௌரியிடம் கண்சிமிட்டி சிரிக்க கௌரி வெட்கத்தோடு தலை குனிந்து கொண்டாள்..

போதும் போதுமெனும் அளவிற்கு தடபுடலாய் விருந்து உணவுவகைகள் இருக்க சாப்பிட்டு முடிப்பதற்குள் கார்த்திக் ஒருவழி ஆகிவிட்டான்..அதன்பின் அனைவருமே ஓய்வெடுக்கச் செல்ல சஹானா கார்த்திக்கை தனதறைக்கு அழைத்துச் சென்றாள்..

அய்யோ சஹி முடில இந்த ரேஞ்ச்ல சாப்டா பேமிலி பேக் பார்ம் ஆய்டும் ஷப்பா முடில என கட்டிலில் அமர சஹானா அவனருகில்அமர்ந்து தோள் சாய்ந்து கொண்டாள்..சட்டென அவள் அப்படி செய்ததும் பதறியவன்..

சஹி என்னாச்சுடா டயர்டா இருக்கா??

அதெல்லாம் இல்ல மாமா..ரொம்ப ஹேப்பியா இருக்கு..எத்தனை நாள் இந்த ரூம்ல தனியா உக்காந்து உன்னை நினைச்சுட்டு இருந்துருப்பேன்..கடைசிவர உனக்கு என்ன பிடிக்காமயே போய்டுமோநு கூட பயந்துருக்கேன்..பட் இப்போ ஐ அம் சோ ஹேப்பி மாமா..

ஆதரவாய் தோள் பற்றியிருந்தவன் உச்சந்தலையில் இதழ்பதிக்க நிமிரிந்து அவனைப் பார்த்தாள்..சஹி நா ஒண்ணு சொல்லட்டுமா???

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.