(Reading time: 22 - 43 minutes)

என்ன சஹி பண்ணிட்டு இருக்க என்றவாறு மெதுவாய் அவளை கடந்து கிழிறங்கியவன் அவள் நகத்திற்கு பாலிஷ் போட்டு கொண்டிருப்பதைப் பார்த்து அவள் எதிர்புறமாய் கடைசிப்படியில் அமர்ந்து குடு நா ஹெல்ப் பண்றேன் என்றவாறு ப்ரெஷை கையில் வாங்கி அவள் காலைப்பிடித்து தன் மேல் வைக்க,

ஐயோ மாமா என்ன பண்ற இதெல்லாம் நீ போய் குடு நானே போட்டுக்கிறேன்..

நா அவ்ளோ மோசமாலா போடமாட்டேன் சஹி..சின்ன வயசுல ஷரவ்க்கு நாதான் போட்டுவிடுவேன்..நம்பி காலை நீட்டு..

அதுக்கில்ல மாமா நீ போய் காலைப் பிடிச்சுகிட்டு விடு ப்ளீஸ்..

ஹே என் பொண்டாட்டி கால நா பிடிக்கிறேன் இதுல என்னயிருக்கு என மீண்டும் காலை தூக்கி வைத்து அவன் வேலையை ஆரம்பிக்க சஹானா தன்னவனையே கண்ணிமைக்காமல் பார்த்திருந்தாள்..இரு கால்களுக்கும் பாலிஷ் போட்டுமுடித்து நிமிர்ந்தவனை கவனியாமல் சஹானா ஏதோ எண்ணத்தில் இருக்க அவள் உள்ளங்காலில் குறுகுறுப்பு மூட்டினான்.

கூச்சத்தில் நெளிந்தவள் சட்டென காலை எடுத்துக் கொள்ள,புருவமுயர்த்தி கார்த்திக் என்னவென கேட்க மென்னகையோடு எழுந்து கொண்டாள்..

மாமா காபி சாப்பிடுறியா நா போட்டு எடுத்துட்டு வரேன் வேலை ஓவரா??

ம்ம் இன்னைக்கு முடிஞ்சுது சஹிம்மா..நா உன்ன தூங்க சொன்னா நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க..நா பக்கத்துல இல்லாம தூக்கம் வரலையா?? என அவளை தலைசாய்த்துப் பார்க்க,

ம்ம் ரொம்ப நினைப்புதான் இத்தனை நாளா நா எங்கவீட்ல தனியாதான தூங்கினேன் என்றவாறு சிவந்திருந்த முகத்தை மறைத்து சமையலறைக்குச் செல்ல குறுஞ்சிரிப்போடு கார்த்திக் அவளை பின்தொடர்ந்தான்..

சஹானா தன்னவனுக்காக காபியோடு மாலை சிற்றுண்டி தயார் செய்ய தொடங்க கார்த்திக் சமையல் மேடைமேல் அமர்ந்து மிக முக்கியமான வேலையாய் தன் மனைவியை சைட் அடித்துக் கொண்டிருக்க,ஏன் மாமா இப்படி நீ குறுகுறுநு பாத்தா நா எப்படி வேலை செய்றது??

அடிப்பாவி உனக்கு சமைக்க வராததுக்கு இது ஒரு சாக்கா??

ஹலோ யாரு சொன்னா சமைக்க தெரியாதுநு??உனக்காக யூட்யூப்ல பாத்து எவ்ளோ கத்து வச்சுருக்கேன் தெரியுமா??இப்போ நா பண்ற பக்கோடாவ சாப்ட்டு அப்பறம் சொல்லு எனக்கு சமைக்க தெரியுமா தெரியாதாநு..

ஓ.கே ஓ.கே கூல் சஹிம்மா..சரி அந்த வெங்காயத்தை குடு நா கட் பண்ணித் தரேன் நீ வேற எதாவது ரெடி பண்ணு..

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் நீ போய் டிவி பாரு நா செஞ்சு எடுத்துட்டு வரேன்..

இந்த கதையே வேண்டாம் டிவி பாக்குறதுக்காகவா சென்னைல இருந்து இங்க வந்தேன்..ஒவ்வொரு செகண்டும் உன்னோட ரசிச்சு ரசிச்சு வாழனும் சஹி என அவள் காதருகிலிருந்தமுடியை ஒதுக்க தலை சாய்த்து அவன் ஸ்பரிசத்தை ரசித்தவள்,நா ஒண்ணு கேக்கட்டுமா கார்த்திக்??

என்னவென சைகையால் கேட்க,நீ எப்படி இப்படி ஈஸி கோயிங்கா இருக்க..எல்லார்கிட்டேயும் அன்பா தம்பி தங்கச்சிக்கு பிடிச்ச அண்ணணா அப்பா அம்மா பெருமைபட்ற மகனா நல்ல ப்ரெண்டா என்னை கைல வச்சு தாங்குற புருஷனா எப்படி மாமா??

உதட்டில் புன்னகைமாறாமல் அவளை கைப்பிடித்து திருப்பி தன்முன் இழுத்துஅவள் கழுத்து வளைவில் தாடையை வைத்தவாறு இடையோடு வளைத்திருந்தான்..சஹி நா என்னபத்தி இந்த அளவுலா யோசிச்சது இல்ல அதேநேரம் இப்படியிருக்குறதுக்காக ரொம்ப மெனக்கெட்தும் கிடையாது..பை நேச்சரே நா கொஞ்சம் விட்டுகொடுத்து போற டைப்தான்..ஷரவ் ஷரவனும் டுவின்ஸ்ங்றதால ரெண்டு குழந்தையையும் சேர்த்து முதல்தடவை பாத்தப்போயிருந்தே அவங்க எனக்கு ரொம்ப ஸ்பெஷலா தெரிஞ்சாங்க..5 இயர்ஸ் கேப் வேறல சோ எப்பவுமே கொஞ்சம் மெச்சூரிட்டி இருக்கும்..அண்ட் ஸ்கூல் படிக்கும்போது என் ப்ரெண்டோட அப்பா ஒருத்தர் ரொம்ப கோபகாரர்..நல்லவரு தான் ஆனா எல்லார்கிட்டேயும் சிடுசிடுநு எறிஞ்சு விழுந்துட்டேயிருப்பாரு..வைப்கிட்ட பையன்கிட்டநு எப்பவுமே அப்படிதான்..அவரைப்பாத்தாலே என் ப்ரெண்ட் நடுங்குவான்..அப்போ எனக்குத் தோணும் இப்படிகோபப்பட்டாதால அவரு என்ன சாதிக்க போறாரு..வீணா எல்லாரோட விரோதத்தையும் மனக்கஷ்டத்தையும் தான் வாங்கிகுறாரு..அதனால ஒரு நல்லதுமில்ல..அப்பறம் ஏன் கோபப்படனும்னு நினைச்சுருக்கேன்..மே பி அதுதான் என்னோட இந்த பழக்கத்துக்கு காரணமா இருக்கலாம்..நல்லதோ கெட்டதோ கோபம் ஆத்திரம் டென்ஷன் இதுனால எதுவும் மாறப்போறதில்லனு ரொம்ப தீர்க்கமா நம்புறேன்.அதனாலதான் இப்போ இப்படி இருக்கேன் என அவன் கன்னத்தால் கன்னம் உரச..

அவன்புறம் திரும்பியவள் அவன்தோளைச்சுற்றி கைகளை மாலையாக்கி அவன் மூக்கை உரசி லவ் யூ சோ மச் மாமா..நீ ஆயிரத்தில ஒருத்தன் இல்ல லட்சத்துல ஒருத்தன்..அதுவும் எனக்கே எனக்கான ஒருத்தன்..கொஞ்சம்கூட ஈகோ இல்லாம எல்லாரையும் சந்தோஷப்படுத்தி வாழறதெல்லாம் வரம் மாமா..அந்த வரத்தை இப்போ நீ எனக்கும் குடுத்துருக்க தேங்க் யூ சோ மச் பார் தட்..எவ்ளோ வொர்ஸ்ட் ஸ்சுவேஷன் வந்தாலும் நீ இப்படியே இரு இதுதான் உன்னோட பலமே..என்றவளின் பார்வை அவன் கண்கலந்து நிற்க அதுக்கு மேல நமக்கு வேலையில்ல..வாங்க வாங்க..

மக்களே மீண்டும் அம்பாசமுத்திரம் வந்தாச்சு..சின்னஞ்சிறுசுங்க கொஞ்சம் அப்படி இப்படிதான் இருப்பாங்க கண்டுக்கப்டாது..ரிவெண்ஞ்ச்சா முக்கியம்..;);)

தொடரும்

Ninnai saranadainthen - 18

Ninnai saranadainthen - 20

{kunena_discuss:1097}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.