(Reading time: 22 - 43 minutes)

டுத்த 24 மணிநேரமும்பேக்கிங்,ஷாப்பிங்,தீண்டல் சீண்டலோடு கழிய இரவு 8 மணிக்கு இருவரும் அம்பாசமுத்திரத்திற்கான தங்களின் பயணத்தை தொடங்கினர்..திருமணத்திற்கு பிறகான முதல் தனிமை தன்னவனோடு மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்க ஒவ்வொரு நொடியும் தன் பயணத்தை ரசித்தாள்..

மாமா..

சொல்லு சஹிம்மா எதாவது வேணுமா??என்றபடி சாலையிலிருந்து விழியகற்றாமல் அவன் கேட்க..

மாமா என இன்னுமாய் அழுத்தி கூப்பிட என்னவென அவளை ஏறிட்டான்..

லவ் யூ சோ மச் கார்த்திக்..என இதழ்குவித்து கூற,ஒன்றும் கூறாமல் சாலையில் ஓரமாய் காரை நிறுத்தியவன்,என்னவோ சொன்னியே சஹி எனக்கு ஒழுங்கா கேக்கல இப்போ சொல்லு என அவள்புறம் திரும்பி அமர்ந்தான்..

இதை எதிர்பாராதவளோ முகம் சிவக்க தலைகுனிந்து கொண்டாள்..இப்போ நீ சொல்லாம நா காரை கிளப்பறதா இல்ல சீக்கிரம் சீக்கிரம்..

சொல்ல முடியாது போடா என வெளியே திரும்பிக் கொள்ள,அப்போ நாம இங்கேயே இருக்க வேண்டியதுதான்..எனக்கு வேற இருட்டுனா பயம் என்ன பண்றது சஹி பேபி அடம்பிடிக்குறா ம்ம் என பின்புறம் தலைசாய்த்து அமர்ந்து கொண்டான்..

இருட்டு என்றதில் நிலைமை உணர்ந்து சுற்றும் முற்றும் பார்க்க ஹைவே தாண்டிய சாலையில் செல்லும் வாகனங்களை தவிர வெளிச்சமில்லாமல் இருக்க..மாமா ப்ளீஸ் போலாம்..

முடியவே முடியாது நீ சொல்லு..

 லவ் யூ கார்த்திக் ப்ளீஸ் காரை எடு..

இல்லயே அதுக்கப்பறம் ஏதோ என்று அவள்புறம் கன்னத்தை காட்ட..

இவ்ளோ கறாரான ஆடிட்டரா இருக்ககூடாது ரொம்ப மோசம் என முனகியவாறே அவன் கன்னத்தில் இதழ்பதித்தாள்..

லவ் யூ டூ சஹிம்மா என்றவன் நெற்றியில் இதழ்பதித்து விடுவித்தான்..அத்தனை இருட்டிலும் தன்னவளின் வெட்கச் சிவப்பை ரசித்தவன் காரை கிளப்பினான்..அதிகாலை 5:30 மணிக்கு அம்பாசமுத்திரத்தினுள் நுழைய சஹானா நல்ல தூக்கத்தில் இருந்தாள்..வெளியிலிருந்த குளிர் அவனின் அடிவயிற்றை தொடுவதாய் தோன்றியது..ஆள்நடமாட்டம் கம்மியாய் இருக்க வழியில் தெரிந்த கோவிலின்முன் காரை நிறுத்தி சில நிமிடங்கள் உள்ளிருந்த அம்மனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்..ப்ரச்சனை எப்படி முடிவிற்கு வரும் இவன் என்ன செய்ய போகிறான் எதுவுமே தெரியவில்லை..அனைத்தும் உன் பொறுப்பு என்ற பார்வையை பார்த்துவிட்டு காரை கிளப்பினான்..

மணி இவர்களுக்காக தயாராய் காத்திருக்க கௌரியும் அவருமாய் பெட்டிகளை வாங்கிக் கொள்ள சஹானாவோடு உள்ளே வந்தவனை கௌரி வாசலிலேயே நிறுத்தினாள்..ஒரு நிமிஷம் அண்ணா ஆரத்தி எடுத்துதான் உள்ளே போகணும்..

அட போனவாரம் தானடா வந்துட்டு போனோம் அதுகுள்ள என்ன இதெல்லாம்???

அண்ணா கல்யாணம் ஆகி முதல்தடவை வரும்போது ஆரத்தி இல்லாமயா ம்ம் இப்போ போங்க உள்ள..

சிரித்தவாறே இருவரும் உள்ளே நுழைய அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தான்..சஹிம்மா செம தூக்கம் வருது ஒரு ஒன் அவர்டா  தூங்கி எழுந்துட்டு நாம ஹனிமூன் ஆரம்பிக்குறோம் ஓ.கே???

அடச்சே ஏன் மாமா நீ வேற பர்ஸ்ட் நல்லா ரெஸ்ட் எடு..நா போய் காபி எடுத்துட்டு வரேன் சாப்ட்டு அப்பறமா தூங்கு..

கையில் இரு காபி டாம்ளரோடு உள்ளே வந்தவள் அவனுக்கும் கொடுத்துவீட்டு தானும் பருகினாள்..நீ தூங்கு மாமா நா கௌரி கூட பேசிட்டு வரேன் என வெளியே வர கௌரி டைனிங் ஹாலில் உணவை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்..

என்ன அக்கா தூங்கலயா??டயர்டா இருக்கும்ல??

இல்ல கௌரி நா நல்ல தூங்கிட்டுதான் வந்தேன் மாமா தான் தூங்கவேயில்ல..சரி என்ன சொல்றாரு உங்க அவரு???

சட்டென அக்கம்பக்கம் பார்த்தவள் மணி இல்லையென்பதை உறுதிபடுத்திக் கொண்டு..என்னக்கா நீங்க அப்பா கேட்டுருந்தா அவ்ளோதான்..நா அவங்ககூட பேசுறதெல்லாம் இல்லக்கா..என்கிட்ட போனும் இல்ல அவங்க நம்பரும் இல்ல என மெதுவாய் கூற..

சுத்தம் என் கொழுந்தனார் பாடு திண்டாட்டம் தான் என்ன கௌரி நீ இதெல்லாம் அநியாயம் சரி விடு ஹே மறந்தே போய்ட்டேன் வந்தவுடனே அம்மா உன்கிட்ட போன் பண்ணி குடுக்க சொன்னாங்க இந்தா  பேசு நா இதோ வந்துட்றேன் என்று கிச்சனுக்குள் நுழைந்தாள்..

ஹலோ அம்மா சொல்லுங்க அக்கா நல்லபடியா வந்துட்டாங்க..பேசனும்நு சொன்னீங்களாமே??

அம்பாசமுத்திர அழகியே கொஞ்சம் இந்த பக்கம் இருக்குறவனையும் பேச விடு..இவ்ளோ பேசுவியா நீ???

அய்யோ நீங்களா???அக்கா நம்பர் மாத்தி போட்டாங்க போல இருங்க குடுக்குறேன்..

ஏய் அதெல்லாம் கரெக்ட்டா தான் போட்ருக்காங்க..நீ கொஞ்சம் அமைதியா நா பேசுறத மட்டும் கேளு..உனக்கு குடுத்த கிப்ட் பத்திரமா வச்சுருக்க தான???நைட் கரெக்ட்டா 11:45 க்கு அத பிரிக்குற அதுக்கப்பறம் நா உன்கூட பேசுறேன் பை..லவ் யூ இப்போ உங்கப்பா வர்றதுக்குள்ள போனை வச்சுடு பை பர்த்டே பேபி..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.