(Reading time: 22 - 43 minutes)

என்ன மாமா சொல்லு..

இரண்டு நாளா செம அழகாயிருக்க தெரியுமா??

ஓ அப்போ இவ்ளோ நாள் அப்படியில்லையா என சண்டைகோழி மோடுக்கு மாற,அட அதில்ல சஹிம்மா..இந்த ரெண்டு நாள்னு ஏன் பர்டிகுலரா சொல்றேன்னா இந்த கல்யாண களைனு சொல்லுவாங்களே அது அவ்ளோயிருக்கு உன் முகத்துல..

அப்படியா??

ஆமா சஹி நானும் கவனிக்குறேன் நேத்தும் சரி இன்னைக்கும் சரி மேக்கப்பே இல்லாம தான இருக்க ஆனாலும் எப்பவும் இருக்குறதவிட செம அழகாயிருக்க அதுக்கு காரணம் இந்த வகிடுல இருக்குற குங்குமம்,இந்த கண்ல இருக்குற சந்தோஷம்,அப்பப்போ சிவந்துட்டேயிருக்குற இந்த கன்னம்,கழுத்தில இருக்குற இந்த மஞ்சள் சரடு,என ஒவ்வொன்றாய் கூறியபடி விரல்களால் அத்தனையையும் வருட சட்டென எழுந்தவளின் கையை விடாமல் பிடித்திழுக்க அவன் பிடித்தவிதமே பிடிவாதத்தை உணர்த்த அவனுக்கு முதுகுகாட்டி படுத்துக் கொண்டாள்..தன்னவளை முழுவதுமாய் ஆக்கிரமித்தவன் அவள் உறங்கும்வரை அவளை விட்டு நகரவில்லை..அதன்பின்னும் தன் மார்பில் உறங்குபவளை வருடியவாறே சிந்தனையில் ஆழ்ந்தான்..அவள் பேச ஆரம்பித்தபோதே மனதளவில் மிகுந்த வருத்தத்தை உணர்ந்து பேசத் தொடங்கியதாய் தோன்றியது..அந்த பேச்சை தொடர்ந்தால் அது எங்கு வேண்டுமானாலும் சென்று முடியலாம்..குறைந்தபட்சம் அம்பாசமுத்திரத்தை அடையும் வரையாவது அவளை மனதளவில் வருத்தபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தான்..இந்த பேச்சிற்கு வேறு எப்படியும் முற்றுபுள்ளி வைக்க முடியும் என்று தோன்றாமல் போக அவனின் அருகாமையில் நிச்சயமாய் அவளுக்கு அனைத்தும் மறந்துபோகும் என்பதை காலையிலேயே உணர்ந்து கொண்டான்..அவனின் தீண்டலும் ஸ்பரிசத்திலும் இருந்து வெளிவர அவளுக்கு பல நிமிடங்கள் தேவைப்பட்டது..அதன்படியே பேச்சை மாற்ற தற்போது உறங்கியும் போனாள்..அப்படி இப்படியாய் இரு தினங்களை ஓட்டிவிட்டால் அங்கு சென்றவுடன் மற்றவற்றை பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தான்..

அவள் கண்விழித்தபோது கார்த்திக் அங்கு இல்லை..உதட்டோர புன்னகையோடே தன்னை சரிப்படுத்தியள் எழுந்து அமர துளசி கையில் காபியோடு உள்ளே நுழைந்தார்..

ஏண்டி மாப்பிள்ளை அங்க வந்து பேசிட்டு இருக்காரு நீ என்னனா இப்படி தூங்கிட்டு இருக்க??இன்னும் நீ குழந்தையில்லடா சஹானா..அங்க போய் இப்படிலா பண்ணாத என்றவாறு காபியை கொடுத்தார்..

ம்மா காலைல சீக்கிரமே எழுந்துட்டேன் அதான் தூக்கம் வந்துருச்சு டெய்லிலா இப்படி பண்ணமாட்டேன் கவலபடாதம்மா..அதுமட்டுமில்ல அப்படியே தூங்கினாலும் உன் பொண்ண யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க போதுமா??

ம்ம் போய் ஒரு நாள் தான் ஆகுது அதுகுள்ள புகுந்தவீட்டுக்கு சப்போர்ட்டா..என கிண்டலாய் கேட்க..

உண்மைதான்ம்மா..ஸ்வீட்டி என்னை ஷரவந்தி மாதிரிதான் பாத்துக்குறாங்க..அங்கிள் ப்ரெண்ட்லியா பேசுறாங்க..ஷரவ் ஷரவன் அண்ணி அண்ணிணு எவ்ளோ பாசமாமா இருக்காங்க தெரியுமா..எல்லாத்துக்கும்மேல என் கார்த்திக் இதுக்குமேல என்னம்மா வேணும் ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன்..இப்போகூட மாமா தான நா எழுந்துருப்பேன்னு காபி கொண்டுவர சொன்னான் எனக்கு தெரியும்..என கண்சிமிட்ட,

அடி கழுத என்ன இது மாப்பிள்ளைய நீ வாநு மரியாதயில்லாம பேசிகிட்டு..ஆனாலும் எல்லார பத்தியும் நீ சொல்றத கேக்கும்போது பெத்த மனசு குளிர்ந்துருச்சு..நீ தனியா வளர்ந்தவ ஜாய்ன் பேமிலில சமாளிக்கனுமேநு பயம் இருந்தது இப்போ நிம்மதியா இருக்கு சஹானா..மூத்த மருமகளா நீதான் பொறுப்பா எல்லாரையும் பாத்துக்கனும் புரியுதாஎன மகளோடு கிடைத்த தனிமையில் அறிவுரைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்..

அங்கு கார்த்திக் சிவாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.சிவா அந்த அருணாச்சலத்தோட ஆடிட்டர் டீடெய்ல்ஸ்லா வேணுமே..அண்ட் அவன்மேல இருக்குற கேஸ் டீடெய்ல்ஸ்லா கிடைக்குமா??

கார்த்திக் என்ன பண்ணலாம்நு இருக்கீங்க??

தெரில சிவா பட் இந்த டீடெய்லா கிடைச்சா எதாவது பண்ணமுடியும்நு தோணுது..கண்டிப்பா பெரிய தண்டனை குடுக்கனும் சிவா..

பட் அது மட்டும் தேவிகாக்கு போதும்நு நினைக்குறீங்களா??

சிவா????

தேவிகாவோட உயிருக்கு இணையான தண்டனை என்னவா இருக்க முடியும்???

நோ வே சிவா..யார் உயிரையும் எடுக்குற உரிமை நமக்கு இல்ல..அதுவும்போக நா கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போறதுக்கா தேவிகா ஆசபடுவா??

கண்டிப்பா இல்ல கார்த்திக் நா சொல்றது கண்டிப்பா நீங்க ஜெயிலுக்குலா போக மாட்டீங்க ஆனா அவன் உயிர் உங்களாலதான் போகும்..அவனின் தீர்க்கமான முகத்தை கண்டவன்,சரி விடுங்க கார்த்திக் எல்லாம் நல்லபடியா நடக்கும்..நா உங்களுக்கு டீடெய்ல்ஸ்லா அனுப்புறேன்..சரியாய் சஹானா வர அத்தோடு அந்த பேச்சை முடித்துக் கொண்டு பொதுவான உரையாடலுக்கு பின் கார்த்திக் வீட்டிற்கு கிளம்பினர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.