(Reading time: 29 - 57 minutes)

கொஞ்சநேரம் அமைதியாக் இருந்த வேலாயுதம், ஜானகி திங்ஸ் எல்லாம் பேக் பண்ண ஆள் அனுப்புறேன் நீங்க இரண்டு பேரும் சென்னைக்கு கிளம்புங்க. நான் ஆதித் கூட போய் அவன் ஸ்கூலில் டி.சி வாங்கிட்டு வருகிறேன் என்றவர், தன் சென்னை நண்பருடன் பேசி ஆதித் அங்கிருக்கும் ஸ்கூலில் சேர்ந்து படிக்க வேண்டிய ஏற்பாடும் சென்னையில் ஜானகிக்கு அவள் பேரில் ஓர் வீட்டையும் வாங்குவதற்கு ஏற்பாடு செய்தார். .

சென்னையில் குடியேறியது முதல் தன அம்மாவிடமும் அப்பாவிடமும் முகம் கொடுத்து பேசுவதே இல்லை ஆதித் அவன் தன்னையே தனிமை படுத்திக்கொள்ள ஆரம்பித்தான் தன்னை யாரும் நெருங்கவிட்டதில்லை அவனின் மொத்த கோபமும் அவனை யாரும் நெருங்கமுடியாத கவசம் போன்று மாறியது தேவைக்கு மட்டும் மற்றவர்களிடம் பேசுவான் படிப்பிலும் விளையாட்டிலும் தனது முழு கவனத்தை செலுத்தினான். அவனது உலகம் முழுவதுவும் தனது படிப்பு என்றானது.

ஆண்டுகள் பல ஓடின ஆனால் ஆதித்தராஜின் போக்கில் மட்டும் மாற்றம் ஏற்படவே இல்லை. அவன் அவனுக்கென்று ஓர் உலகை உருவாகிக்கொண்டு அதில் பயணப்பட ஆரம்பித்தான். அதில் தனது பெற்றோருக்கு அவன் இடம் அளிக்கவே இல்லை ஏனோ. அவனின் அப்பா ஏற்கனவே மனம் முடித்து ஓர் பெண்ணுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் போது தன அம்மாவையும் இரண்டாம் தாரமாக மணந்து வாழ்வதை அவனுக்கு சரி என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை.

ழகுநிலா தனக்கு நேற்று இரவு வந்த போன் காலில் பயந்து இரவு முழுவதுவும் தூங்காமல் இருந்தால் அன்று தன தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு போய் வம்பை விலைக்கு வாங்கிவிட்டோமோ..? அம்மா சொன்னதுபோல் தேவையில்லாமல் வெளியே சுற்றியதால் வந்த வினையோ என வருந்தினாள்.

அன்று ஹோட்டலில் இருந்து கொண்டுவந்து சுவிச்சுடு ஆப் செய்து தனது உடைகளுக்கு அடியில் எடுத்து வைத்திருந்த போனை எடுத்து அதனை தன போன் சார்ஜரின் மூலம் ஜார்ச் செய்து எப்படியாவது ஆன் செய்து அதில் ரெகார்ட் ஆகியிருக்கும் ஹோட்டலில் தனக்கு நடந்த சம்பவத்தை டெலிட் செய்து விடவேண்டும் என்று முயன்று கொண்டிருந்ததில், பொட்டு தூக்கம் இல்லாமல் விடிந்தே விட்டது.

அதனை ஆன் செய்து பின் உள்நுழைய அந்த மொபலின் உரிமையாளனின் பிங்கர்பிரின்ட் கேட்டது அவள் எவ்வளவு முயன்றும் வேறு வழிகளில் அதனில் லாகின் செய்ய முடியவில்லை

அன்று தனக்கு ஏற்பட இருந்த ஆபத்தை முன்பின் தெரியாத அந்த ஹன்ட்சம் ஹீரோவின் மூலம் கடந்துவிட்டோம் என்ற ஆசுவாசமாக இருக்கும் போது, நேற்று வந்த அந்த போன் கால் அவளின் நிம்மதியை பறித்தது.

எப்படி அந்த ரோக்குக்கு என் மொபைல் நம்பர் தெரிந்தது. அதுவும் நான் அவனின் மொபைலை மூச்சுவிடாமல் நாளை மதியம் அந்த மாலிற்கு போய் அவனிடம் கொடுக்க வேண்டுமாமே! நான் அவனின் பார்வை வட்டத்துக்குள் விழுந்து விட்டேனாமே. அப்படி அவனிடம் கொடுக்காமல் ரொம்ப புத்திசாளித்தனமாக அந்த மொபலை பற்றி ஆராய்ச்சி செய்தாலோ? அல்லது அதனை சைபர்கிரைம் ஆபீசில் இன்பார்ம் பண்ணினாலோ நான் பத்திரமாக் என் ஊரான குட்லாம்பட்டிக்கு போக முடியாதாமே! என்னை பற்றிய அனைத்து விபரங்களையும் அவன் தெரிந்து வைத்திருக்கிறான். இப்பொழுது அவன் செய்த போன் கால் எல்லாம் பிரைவேட் நம்பரில் இருந்து வருகிறதே! இது என்ன, இப்படி ஓர் இக்கட்டில் நான் மாட்டிக்கொண்டேன்.

மதுரை மீனாட்சி தாயே எனக்கு ஓர் அவமானம் என்றால் பாதிக்கப் படுவது நான் மட்டும் அல்ல என் குடும்பம் முழுவதுவுமே. என்னை எப்படியாவது இந்த பிரச்சனையில் இருந்து மீட்டு கொண்டு வந்துவிடு என்று வேண்டுதலை வைத்தவள், தனது சுமதியை அழைத்து இன்று கொஞ்சம் சீக்கிரம் ஆபீஸ் வரச் சொல்லி அவளிடம் இதைப்பற்றி பகிர்ந்து கொண்டு என்ன செய்யலாம்? என்று முடிவெடுக்க நினைத்தாள் அழகு நிலா.

அவள் மொபைலை வெளியில் எடுக்கும் போதே சுமதியிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. அதனை ஆன்செய்து காதில் வைத்ததும் அந்தபக்கம் இருந்து சுமதி அடியே அழகி! இங்க பிரச்சனை ஆகிடுச்சுடி என்று பதட்டமாக பேசும் குரல் காதில் விழுந்தது.

அவளின் பதட்டமான் குரலில் தன்னுடைய பிரச்சனையை மறந்து அவளிடம், “சுமதி ஏன் பதட்டமாக பேசுகிறாய்...?” என்று கேட்டாள் அழகி

அதற்கு சுமதி என்னுடைய லவ் மேட்டர் எப்படியோ என் பெரியப்பாவிற்குத் தெரிந்து என் அப்பா அம்மாவை இங்கு வர வைத்து விட்டார்கள் அழகி. இன்றைக்கு என்னால் ஆபீஸ் வர முடியாது என நினைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தவள் அப்பறம் பேசுறேன் அழகி அம்மா கதவை தட்டுகிறார்கள் என்று போன் இணைப்பை துண்டித்தாள்.

தனது தோழியான சுமதியிடமும் விசுவிடமும் இப்பொழுது உதவிகேட்க முடியாது என்பதனை உணர்ந்த அழகுநிலா, நெட்டில் எப்படி ஐ போனை அதன் பாஸ்வேர்ட் இல்லாமல் லாகின் செய்யலாம் என்று சர்ச் செய்து.. செய்து... ஓய்ந்தாள். தற்செயலாக கடிகாரத்தில் மணியைப்பார்த்தவள் அது இன்னும் அவள் ஆபீஸ் பஸ் வர பதினைந்து நிமிடம் தான் இருக்கிறது என்று காண்பித்தது. எனவே வேகமாக கிளம்பி காலை சாப்பிடாமல் மதிய சாப்பாட்டையும் மறந்து பஸ்ஸை பிடிக்க ஓடினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.