(Reading time: 11 - 21 minutes)

26. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai             

ளங்காலை சூரியனின் ஒளி முகத்தில் முத்தமிடகண்கள் கசக்கி கொண்டே விழித்துக் கொண்டாள் அர்ப்பணா.நேற்று இரவு அவளுக்கு உறங்குவதற்கு நெடுநேரம் ஆனது. காரணம் நாம் அறிந்ததல்லவா? அந்த காரணத்திற்கு உரியவனை மனம் தேடிட உடனே கைப்பேசியை கையிலெடுத்தாள் அவள்.

“ராகவ்!”அவனது எண்ணை அழுத்த வேண்டியவள் ஏதோ ஒரு உந்துதலில் பேஸ்பூக் உள்ளே நுழைந்தாள். இன்றைய ஹைலைட் அவளும் ராகவேந்திரன்தான். ஊடகங்கள் என்றாலே கலைஞர்களின் எதிரி என்று அர்த்தம் இல்லை. ஒரு கலைஞனின் படைப்பானது பாமர மக்களையும் சேர வேண்டும். அதை தடையின்றி சேர்க்க வேண்டும்.

அப்படி சேர்ப்பதற்கு ஊடங்கள் தான் பாளம். விளம்பரம் என்பது சினிமாவின் முதுகெலும்பு. ஒரு படத்திற்கு கொஞ்சமும் விளம்பரம் தராமல் ஊடகங்கள் மூலமாக அறிமுகமும் தராமல் நேரடியாக ரிலீஸ் செய்தால் அது வெற்றி பெருமா? அனைவரையும் சேர்ந்தடையுமா?

“இப்படி ஒரு படம் இருக்கா?இதென்ன படம்? எப்போ வந்துச்சு?” விளம்பரப்படுத்தப்பாடாத படங்களை என்றாவது தொலைக்காட்சியில் காணும்போது நாம் கேட்கும்கேள்விகள் இவை. பிரபலமான நடிகர்கள் நடிக்காதது மட்டும் இதற்கு காரணமல்ல.போதிய அளவு விளம்பரப்படுத்தாமல் இருப்பதும்தான் இதன் காரணம்! அல்லவா? அப்படியென்றால் ஒரு படத்தின் வெற்றி அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகத்தாரின் கைகளிலும் உண்டு!

அதனால்தான் முடிந்தளவு கலைஞர்கள் ஊடகத்தில் இருப்பவர்களை அதிகம் எதிர்ப்பதில்லை. ஒரு படக்குழு என்பது ஒருவரை வைத்து இயங்குவது இல்லை. நடிகர்கள், இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், வசனகர்த்தாக்கள், என பெரிய பட்டியலொன்று நீண்டு கொண்டே செல்லும். அந்த பட்டியலில் இருக்கும் ஒருவரின் எதிர்மறை செயலானது முழு பட்த்தையும் பாதிக்கும் வாய்ப்புண்டு. ஒரு துளி விஷம் கலந்த உணவை, ஒரே ஒரு துளிதானே? என்றெண்ணி உண்ண முடியுமா? அப்படித்தான் இதுவும்! அளிக்கும் சக்தியும் அழிக்கும் சக்தியும் ஊடகத்திற்கு உண்டு!

அர்ப்பணாவை பொறுத்தவரை அவளுக்கு ஊடகத்தாரைக் கண்டாலே வெறுப்பென்று ஏதுமில்லை. அவளது முதல் படம் அரங்கேறிடும் முன்னரே அவளை நடிகை என அறிமுகப்படுத்தியவர்களே அவர்கள் தான். அதே போல அன்று முதல் இன்று வரை அவள் எங்கு சென்றாலும் அதை பிரபலப்படுத்துவது ஒரு வகையில் அவளுடைய அடையாளத்திற்கு தீனி போட்டுக் கொண்டிருப்பதை அவளும் உணர்கிறாள். அர்ப்பணாநடித்து கொடுத்த சில படங்களில் அவள்தான் அவர்களுக்கு விளம்பரமே!

இதையெல்லாம் தவிர்த்து ,தன்னை சுற்றி எப்போதும் கேமராக்கள் கண் சிமிட்டுகின்றனவே என்ற எரிச்சலையும் சோர்வையும் தாண்டி  அவளை பல முறை “கேண்டிட்” படங்களில் அழகாய் காட்டியுள்ளனர் ஊடகத்தில் உள்ளவர்கள்.

அவளுக்கும் தெரியும்..ஒருநாள் எல்லாம் மாறிவிடும். தன்னைவிட அதிக வில்லங்க செய்திகளை கொடுக்கவல்ல ஒருத்தர் வந்துவிட்டால் அவளுக்கு பிரியாவிடை கொடுத்துவிடுவார்கள். அந்த நாளை வரவேற்க காத்திருந்தாள் அர்ப்பணா.

நேற்று வெளிவந்த புகைப்படங்களைப் பார்த்தவளின் கன்னகளை சூடேறி சிவந்து போயின. ராகவனின் முகத்தில் ப்ரதிபலித்த காதல், அவன் அணைப்பினில் தெரிந்த நெருக்கம், அவனை மிஞ்சிடுபவள் போலதானும் ஒட்டிகொண்டவிதம் அதை ரசித்து ரசித்து பார்த்தாள் அர்ப்பணா. இவ்வளவு காதலா?இவ்வளவு நெருக்கமா?எப்போ வந்தது? எங்கே ஆரம்பித்தது.

நேற்று தன் தாயாரை சந்தித்தது கூட மறந்து போனது அவளுக்கு. நினைவில் நின்றவன் அவன் ஒருவன் மட்டும்தான்! அவளின் ராகவ்! அவள் நெஞ்சுருகி அழைத்ததை உணர்ந்தவன் போல அர்ப்பணாவுக்கு அழைப்பு கொடுத்தான் ராகவேந்திரன்.

“ஹ.. ஹலோ” தனக்கு மட்டும் கேட்கும்குரலில் சொன்னாள் அர்ப்பணா. இன்னமும் வெட்கம் அவளை விட்டப்பாடில்லை.

“அபி.. என்னம்மா உடம்பு சரியில்லையா?”அக்கறையாய் கேட்டான் ராகவேந்திரன்.

“ஹும்கும்..டியூப்லைட்”என்று நினைத்தவள்,

“ஆமா, வயிறு ஒரு மாதிரி..”

“ஒரு மாதிரி..”

“வயித்துக்குள்ள…”

“வயித்துக்குள்ள??”

“பட்டாம்பூச்சி பறக்குது ராகவ்” என்று சொன்னாள் அர்ப்பணா. தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தவள், அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,

“அடியேகொஞ்சம் கூடவெட்கமே இல்லையா உனக்கு? இப்படி எல்லாமா பேசுவ நீ?”என்றாள்.  அவளின் உள்மனமோ,

“ஏன்.. ஏன் பேச கூடாது?என் ராகவ்கிட்ட இப்படி பேச எனக்கு உரிமையில்லையா?”என்று வினவியது. எதிர்முனையில் இருந்தவனோ உல்லாசமாக சிரித்தான்.

“ஆஹான்..என்ன மேடம் ஒரே ரோமாண்டிக் மூட் போல.. இப்போதான் காலிங் பெல்லை அழுத்தி உள்ளேவரலாம்னு நினைச்சேன்.. என் கற்புக்கு பாதுகாப்பு இருக்கானு தெரியலையே” பயந்தவன் போல அவன் சொல்லவும் அவள் இன்னமும் வெட்கப்பட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.