(Reading time: 17 - 34 minutes)

17. நானும் அங்கே உன்னோடு... - பூஜா பாண்டியன்

NAU

காலையில் வீட்டிற்க்கு வந்தவுடன், தங்களது அறைக்குள் வந்து, இந்தரை கட்டி அணைத்து சிறிது நேரம் மௌனமாக இருந்தாள் பூஜா. இந்தரும் அவளது அணைப்பில் மெய் மறந்து நின்றான்.

சில நிமிடம் கழித்து தனது அணைப்பை சிறிது கூட்டி, “ஐ லவ் யூ ஜித்து” என்றாள்.

“மீ டூ டா “ என்றான் இந்தர் , அவளது தலை வகிட்டில் முத்தமிட்டு.........

“ரெண்டு நாளா நீங்க பக்கத்திலே இருந்தும், உங்ககிட்ட சரியா பேச முடியாம, உங்களை எவ்வளவு மிஸ் செய்தேன் தெரியுமா?”

“உனக்கே இப்படின்னா, எனக்கு எப்படி இருந்திருக்கும்?

“அது என்ன, உனக்கே இப்படி, எனக்கு எப்படி? நான் தான் உங்களை அதிகமா மிஸ் செய்தேன்.”

“கண்டிப்பா இல்லை. நான் தான் ரொம்ப மிஸ் செய்தேன்.”

“அது எப்படி சொல்றிங்க?

“நீ இன்னைக்கு தான் என்னை காதலிக்கறேனே சொன்ன, நான் சொல்லி எவ்வளவு நாள் ஆச்சு? அதனால் சினியாரிடி பிரகாரம் நான் தான் உன்னை ரொம்ப மிஸ் செய்தேன்.” என்றான் இந்தர் கண்களில் குறும்பு மின்ன..........

“அப்படி பார்த்தா, மூணு வருஷம் முன்னாடி நான் தான் முதலில் சொன்னேன்.” என்று தலையை ஆட்டி கூறினாள் பூஜா........

“இது போங்கு, மூணு வருஷம் முன்னால், லவ் பண்றன்னு நீ சொல்லவில்லை . கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று தான் கேட்ட”..........

“ம்ம்....... லவ் செய்யாம தான், கல்யாணம் செய்துகலாமன்னு கேட்பாங்களா?

அதற்கு பதில் கூறாமல், அவள் முகம் நோக்கி குனிந்தான் இந்தர்.

“ஹே, இப்போ என்ன செய்யறிங்க? பேசிட்டு இருக்கும் போது, பதில் பேசாம” என பூஜா வெட்கப்பட.......

“நீ தான டா, இப்போ, ம்ம் கேட்ட, முதல் முறை மனைவி கேட்டதை, உடனே நிறைவேற்ற தான், பதில் கூட சொல்லாமல், உடனடி நடவடிக்கையில் இறங்கிட்டேன்.” என கூறி அவளை நெருங்கிய பொழுது, அவர்களது அறையில் இருந்த இன்டர்காம் அலறி அவனை தடுத்தது..........

இன்ட்டர்காமை எடுத்து ஹலோ என்ற பொழுது “இந்தர் கண்ணா நீங்க ரெண்டு பேரும் குளிச்சு கிளம்பி, கீழ வாங்க, முக்கியமா பேசணும்” என கூறி சம்யுக்தா அழைத்தார்.

“சரி மா, வர்றோம்” என கூறி காலை கட் செய்த இந்தர், பூஜாவிடம் திரும்பி ........

“அம்மா கூப்பிடறாங்க டா, கிளம்பி கீழ வர சொன்னாங்க” என்றான்.

ம்ம் என்று சொல்ல வந்த பூஜா அதை வாய்க்குள் முழுங்கி சரி என்றாள். அவளது தடுமாற்றத்தை ரசித்த இந்தர் புன்னைகைத்துக் கொண்டே,

“கிளம்பு டா”  என்றான்.

இருவரும் கிளம்பி கீழே வந்த பொழுது, “சாப்பிட வாங்க “ என சம்யுக்தா சாப்பாட்டு மேஜையிலிருந்து அழைத்தார். அங்கு அர்ஜுனும் அமர்ந்து இருந்தார்.

சாப்பிட ஆரம்பித்ததும், “சொல்லுங்க அம்மா, என்ன விஷயம்? என்று இந்தர், சம்யுக்தாவை கேட்க, பூஜா அவனை ஆச்சர்யமாக பார்த்தாள். அத்தை ஒன்றும் சொல்லாமலே, அவர்கள் எதோ சொல்ல போகிறார்கள் என்று, இந்தருக்கு தெரிகிறதே, இனி நாமும் எல்லாவற்றையும் நன்கு கவனிக்க வேண்டும் என நினைத்து கொண்டாள்.

“சாப்பிட்டு ஹாலுக்கு வாங்க சொல்றேன்.” என கூறி அவரும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்பதே பழக்கம். உடன் அமர்ந்தாலும், அர்ஜுனுக்கு என்ன தேவை என்பதை பார்த்து, பரிமாறியபடியும் இருந்தார் சம்யுக்தா.

அதை பார்த்த பூஜாவிற்கு தனது வீட்டில் அம்மா சரோஜினி, அப்பாவிற்கு பரிமாறி அவர் சாப்பிட்டு முடித்த பின்பே , சாப்பிட அமர்வார் என நியாபகம் வந்தது. அனால் இது பூஜாவிற்கு மிகவும் பிடித்து இருந்தது. பரிமாறவும் செய்யலாம், உடன் அமர்ந்தும் சாப்பிடலாம். சம்யுக்தா செய்யும் எல்லாம் பூஜாவிற்கு பிடித்தமானதாகவே இருந்தது. அதை சம்யுக்தாவிடம் கூறவும் செய்தாள் பூஜா.........

“நீங்க எது செய்தாலும் அதை வித்தியாசமா , நேர்த்தியா செய்யறிங்க  மா........ அத் “ என்று எப்படி சம்யுவை அழைப்பது என்று புரியாமல் விழித்தாள் பூஜா.........

“உனக்கு எது வசதியோ அப்படியே என்னை கூப்பிடலாம் டா,  அத்தைன்னு கூப்பிடு, இல்லை அம்மான்னு கூப்பிடு, இல்லை இரண்டையும் சேர்த்து அத்தமா ன்னு கூட கூப்பிடு............

“இது நல்லா இருக்கு அத்தமா” என கூறி புன்னகைத்தாள் பூஜா......                 

“அப்போ அப்பாவை எப்படி கூபிடுவ? மாமாப்பா ன்னா என்று கிண்டலடித்தான் இந்தர்.  அதை கேட்டு அனைவரும் சிரித்தனர்.

சிரித்தபடி சாப்பிட்டு முடித்து, ஹால் சோபாவில் வந்து அமர்ந்தனர். சம்யுக்தாவே ஆரம்பித்தார்.

“பூஜா, உங்க அம்மா, அப்பாவை வந்து உன்னை ரெண்டு நாள், அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லி இருக்கேன். ரெண்டு நாள் கழித்து நாம மால்டிவ்ஸ் கிளம்பிடலாம்.” என்று சம்யுக்தா கூறி முடித்த பொழுது ஆள் இல்லா தீவின் அமைதி நிலவியது அங்கு.

அந்த அமைதியை கலைத்து முதலில் பேசியது இந்தரே. “ மா, எங்களுக்கு இங்க தான் வசதியா இருக்கம்ன்னு நினைகிறேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.