(Reading time: 17 - 34 minutes)

“இந்தர் கண்ணா, நான் பூஜாவை மட்டும் தான் சொன்னேன். நீயும் அப்பாவும், இன்றே  கிளம்பி மால்டிவ்ஸ் போறீங்க. அங்க வரவேற்ப்பு  வேலையை போய் பாருங்க. நானும் பூஜாவும் சேர்ந்து வர்றோம்.” என்று மெல்லிய குரலில் அழுத்தமாக கூறி முடித்தார் சம்யுக்தா.

“எதுக்குமா இந்த திடீர் திட்டம். அங்க வரவேற்ப்பு ஏற்பாடுகளை கவனிக்க தான் ஆள் இருக்கங்களே.” என வாடிய பூஜாவின் முகத்தை பார்த்தபடி தன் தாயிடம் கேட்டான் இந்தர்.

“உனக்கு அப்பா விளக்கி சொல்லுவார். நீ உள்ள வா பூஜா” என்று அவளை தனது அறைக்கு அழைத்து சென்ற சம்யுக்தா அவளுக்கு விளக்கி கூற ஆரம்பித்தார்.

“பூஜா, கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். அதனால் தான் அதற்கு நேரம் காலம் எல்லாம் பார்த்தது, தேதி குறிப்பது. உங்க திருமண தினத்தன்றே நீங்க ரெண்டு பேரும் மருத்துவமனைக்கு அலைந்து, அதுக்கப்புறமும் ஊருக்கெல்லாம் சென்று வந்தால், இன்று அஷ்டமி, நவமி என்று இரண்டு நாள் நடுவில் வந்து விட்டது. உனக்கே புரியும்ன்னு நினைக்கிறன். எதுவும் நல்ல நாளில் ஆரம்பிக்கணும். அதுக்காக தான் இந்த பிரிவு உங்க ரெண்டு பேருக்கும்.” என்று விளக்கி கூறி அவர்கள் ஹாலுக்கு வந்த பொழுது..........

சரோஜினியும், பீஷ்மரும் அங்கு இருந்தனர், பூஜாவை அழைத்து செல்ல.

அதற்குள் அர்ஜுனும், இந்தருக்கு விளக்கி சொல்லி இருந்ததால், அவனாலும் பூஜா செல்வதை தடுக்க முடியவில்லை. திருமணம் ஆனதிலிருந்து, இருவருக்கும் தனியாக பேசிக்கொள்ள கூட நேரம் அமையவில்லை. திருமணதிற்கு முன்பும் அப்படி தான்.

பூஜா ஏக்கத்துடனேயே கிளம்பிச் சென்றாள்.

அடுத்து இந்தரும், அர்ஜுனும், வரவேற்ப்பு ஏற்பாட்டை கவனிக்க மால்டிவ்ஸ் கிளம்பினர்.

ரண்டு நாள் கழித்து தசமி அன்று காலை விமானத்தில் கிளம்பி ஒரு பெரிய கும்பலே மால்டிவ்ஸ் சென்று அடைந்தது. விமான நிலையத்தில் இருந்தே அனைவரும் நேராக ரெசார்டை அடைந்தனர். அங்கு தான் அன்று இரவிற்கான  வரவேற்ப்பு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்து.

அனைவருக்கும் அறைகள் ஒதுக்க பட்டிருந்ததால் அவரவர் சென்று பெட்டிகளை வைத்து, மதிய உணவிற்கு உணவகத்திற்கு வந்தனர்.

வரவேற்ப்பு பாரடைஸ் ரேசர்டில் நடப்பதாக முடிவனதிலிருந்து இந்த மூன்று நாட்களுக்கான முன்பதிவு எதுவும் இல்லாமல் பார்த்து கொண்டனர். முன்பே இருந்த முன் பதிவுகளை மற்ற நான்கு ரேசர்டிற்கு மாற்றி விட்டனர்.

பூஜா அவளுக்கு ஒதுக்கி இருந்த அறைக்கு சென்ற பொழுது அவளை வரவேற்க, அவளது தோழிகள் ஸ்ருதியும் , ஹெலனாவும் அவளுக்காக காத்திருந்தனர். அவர்களை பார்த்ததும் பூஜாவிற்கு இருந்த சோகம் எல்லாம், சூரிய ஒளி கண்ட பனியாய் விலகியது.

அதன் பின் கூறவும் வேண்டுமோ பெண்கள் அரட்டை கச்சேரியை ஆரம்பிக்க. அன்று தான் உலகின் கடைசி நாள் என்பது போல் பேசி தீர்த்தனர். மதிய உணவிற்கு பின் பியுடிஷியன் வந்து பூஜாவிற்கு அலங்காரம் செய்து விட ஆரம்பித்தார்.

தலை அலங்காரம், முக அலங்காரம் எல்லாம் முடிந்து, அவளுக்கென இந்தர் தேர்ந்தெடுத்திருந்த ஆகுவா நீல நிற லெஹெங்காவை அணிந்தாள். அதில் பாவாடை, சட்டை , துப்பட்டா  முழுவதும் ஜர்தோசி வேலைப்பாடுகளால் அழகாக மிளிர்ந்தது. அந்த உடைக்கு ஏற்றார் போல் நகைகளும், மிக பெரிதாக இல்லாத வைர நகைகளை அணிந்தாள் பூஜா.... வந்து பார்த்த சம்யுக்தாவிர்க்கும், சரோஜினிக்கும் மகிழ்வாக இருந்தது.

அனைவரும் கிளம்பி விழா ஹாலுக்கு வந்த பொழுது, அதை அலங்கரித்து இருந்த அழகை பார்த்து அனைவரும் வியந்தனர். மேடையில் மணமக்கள் அமர ஒரு திவானும், அதற்கு அடுத்து கிழே இரண்டு  குடும்ப உறுப்பினர்களும், அமரும் மேஜையும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

விருந்தினர் அமர வட்ட வடிவில் மேஜையும், சுற்றி நாற்காலிகளும் அமைக்கபட்டு இருந்தது. அந்த அறையே வண்ண விளக்குகளால் நிரம்பி இருந்தது. பக்கவாட்டில் ஒரு சிறு மேடையும் அதில் சில இசை கருவிகளும் இருந்தது.  இதை தவிர கடற்கரை மணலில் அமர்ந்து விருந்துண்ண நினைப்பவர்களுக்கு அங்கும் கட்டையான மேஜைகளுடன்,  அமர்வதற்கு பலகையும் ,  அதன் மேல் குஷன் போடப்பட்டு இருந்தது.

பூஜா வருவதற்கு முன்பே வந்து விழா ஏற்பாடுகளை கவனித்து கொண்டு இருந்த இந்தர், அலங்கார பதுமையாக உள்ளே நுழைந்த பூஜாவை பார்த்து ஒரு நிமிடம் மயங்கி நின்றான்.

உள்ளே நுழையும் போதே ஓரக்கண்ணால் இந்தரை பார்த்தபடி வந்த பூஜாவும், இந்தரின் நேர்த்தியான உடை அலங்காரத்தால் கவரபட்டாள். பூஜாவின் உடைக்கு ஏற்றவாறு இருக்குமாறு, அவனது புல் சூட் ஆழ்கடல் வண்ணத்தில் அமைந்து இருந்தது. இருவரும் இணைந்து மேடை ஏறினர்.

அதற்குள் விருந்தனர் வருகையும் ஆரம்பித்திருந்தது. பூஜாவின் அருகில் ஸ்ருதியும், ஹெலனாவும் நின்றிருக்க, இந்தரின் அருகில் அபி மட்டும் இருந்தான். அவனும் குழலி எங்கே என்று கண்களால் தேடிக் கொண்டிருந்தான். அவள் அலங்கரித்து வர நேரமாகியது.

இந்தரின் பள்ளி தோழர்கள், வியாபார நண்பர்கள் என் ஒரு பெரிய பட்டாளமே வந்தது. அனைவரையும் பூஜாவிற்கு அறிமுகபடுத்திக் கொண்டு இருந்தான். பூஜாவிற்கு தான் யாரும் இல்லை, அவனுக்கு அறிமுகபடுத்த. வந்த இரண்டு தோழிகளையும் இந்தருக்கு முன்பே தெரியுமாதலால், அவளுக்கு பெரிதாக இந்தரிடம் பேச ஏதும் இருக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.