(Reading time: 17 - 34 minutes)

அவர் அங்கு வந்த பொழுது, கொஞ்சம் கோபமாகவே அர்ஜுன், இந்தரிடம் எதோ கேட்டு கொண்டிருந்தார். என்ன என்று புரியாவிட்டாலும் சம்யுக்தவிர்க்கு நடப்பவற்றில் உடன்பாடு இருக்கவில்லை. இந்தரிடம் யார் கோபித்து கொண்டாலும் அவரால் பொருத்து கொள்ள முடியாது. அவரை பொறுத்தவரை இந்தர் தவறே செய்யமாட்டான், அப்படியே ஏதும் செய்தாலும், அதற்கு தக்க காரணம் இருக்கும் என்று அசையா நம்பிக்கை உடையவர்.

“ரெண்டு பேரும் முதல் முறையா சேர்ந்து வீட்டுக்கு வந்து இருக்காங்க, இப்போ ஏன் அவன் மேல் கோபபடறிங்க?” என அர்ஜுனிடம் கேட்டார் சம்யு.

இதுவரை அர்ஜுனும் அவன் மீது கோபப்பட்டதில்லை தான், அவருக்கும் அவன் செல்ல மகன் தான். ஆனால் அதையும் தாண்டி அவனிடம் கேட்டு தெளிவு படுத்த நினைத்தார்.

“நீயே அவனிடம் கேள் சம்யு, அப்படி எதுக்காக அன்று நமக்கு தெரியாமல் கல்யாணம் பதிவு செய்தான் என்று,” இம்முறை சம்யுவிடம் கேட்டார்.

சம்யுக்தாவிர்க்கும் இது புது செய்தியாகவே இருந்தது. அவர் திரும்பி ஒரு பார்வை பார்த்தார் இந்தரை. எந்த கேள்வியும் இல்லை அவரிடமிருந்து...... இருந்தும் இந்தர் அதற்கு பதில் கூற வாய் திறந்த நேரம்.........

“நான் தான் அப்படி சொன்னேன் மாமா” என்று பூஜா பதில் கூறினாள்.

“அப்படி எங்களுக்கு தெரியாமல் என்னம்மா அவசரம்?” என அர்ஜுன் கேட்க...........

அன்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள் பூஜா.

“ஆனால் அவர் ஏன் அன்று ஆங்கிலத்தில் பேசவில்லை என்று தான் எனக்கு தெரியவில்லை மாமா” என்று அப்பாவியாக கூறினாள் பூஜா.....

இப்பொழுது அர்ஜுனுக்கு தான் தர்மசங்கடமானது. இந்நாட்டு வழக்கப்படி அப்படி ஏதும் சட்டம் கிடையாது என்று, அவர் அவளிடம் பதில் கூறாமல் இந்தரை பார்த்து “நீங்க ரெண்டு பேரும் பேசி கொள்ளுங்கள்” என்று அங்கிருந்து அவர் அறை நோக்கி நகர்ந்தார்.

அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த சம்யுவுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. இருப்பினும் அவர் பூஜாவை பார்த்து “இந்தர் எது செய்திருந்தாலும் அது உனக்காக............  உனக்காக மட்டும்  தான் என்பதை நீ புரிந்து கொள்ளனும் பூஜா” என்று கூறிவிட்டு இந்தரிடம் திரும்பி,

“இந்தர் கண்ணா, வாழ்கையை ஒரு பொய்யிலிருந்து ஆரம்பிக்காத, அது நல்லதுக்கு இல்ல, எதுவா இருந்தாலும் அவளிடம் உண்மையை கூறி உங்க வாழ்க்கையை ஆரம்பி” என கூறினார்.........

“மா......... கல்யாணம் முடிந்தவுடன் நானே அவளுக்கு சொல்லவதாக தான் இருந்தேன். ஆனால் கல்யாணம் ஆனதிலிருந்து அவளுடன் தனியாக பேசவே இன்னும் எனக்கு நேரம் அமையவில்லை, அது உங்களுக்கும் தெரியும். மா, ப்ளீஸ் நீங்க இதுக்காக வருத்தபடாதீங்க, இந்த பிரச்னையை  என்னால் சமாளிக்க முடியும். நான் பார்த்து கொள்கிறேன். நீங்க போய் நிம்மதியா தூங்குங்க.” என கூறினான்.

சம்யுக்தாவும், “எனக்கு உன்னை பத்தி நல்லா தெரியும் இந்தர் கண்ணா, பார்த்து நடந்துக்கோ” என கூறி இருவரையும் அவர்களது அறைக்கு அனுப்பி வைத்தார்.

பூஜாவிற்கு தான் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. இந்த அழகில் அவர்கள் அறைக்குள் நுழைந்தால், சித்தி சுஜியின் கைவண்ணத்தில், அறை அற்புதமாக அலங்கரிக்கப் பட்டு, அந்த சுழலுக்கு தயாராக இருந்தது.

பூஜாவிற்கு தான் அது எல்லாம் கண்ணில் படவே இல்லை. இந்தருக்கோ அதை பார்த்து சிறிது எரிச்சல் தான் வந்தது. இவ்வாறு அறை அலங்கரிக்க பட்டு இருந்தாலே, தங்களுக்கு எதோ பிரச்சனை வருகிறது என்று.

“என்ன இந்தர் இது, மாமாவும் அத்தையும் எதோ சொல்றாங்க” என ஆரம்பிக்க

எரிச்சலில் இருந்த இந்தர்,  பூஜாவிடம் திரும்பி “நீ முதலில் போய், உடை மாற்றி வா....... என கூறி யோசனையில் ஆழ்ந்தான்.

அதே எரிச்சல் பூஜாவையும் தொற்றியது. “கேள்வி கேட்டா பதில் சொல்லுங்க, அதை விட்டுட்டு, நான் என்ன செய்யணும் என்று, எனக்கு உத்தரவு போடாதிங்க”

“கல்யாணம் முடிந்து இப்போ தான், தனியா பேசவே ஆரம்பிக்கிறோம். இதுவே சண்டையில் ஆரம்பிக்கனுமா? என்ற இந்தரின் குரலில் அழுத்தம் இருந்தது.

“என்ன உண்மையை என்னிடம் மறைக்கறீங்க? அது எனக்கு இப்பவே தெரியனும். சொல்லுங்க” பூஜாவும் பிடிவாதமாக கேட்ட கேள்வியையே கேட்டாள் இந்தரிடம்..........

“நான் என்ன சொல்லணும் என்று எதிர்பார்க்கற பூஜா?”

“கேள்வி கேட்டா, அதுக்கு பதில் சொல்லாம, எதிர் கேள்வி கேட்கும்போதே தெரியுது நீங்க எதோ தப்பு செய்திருக்கீங்க என்று.”

“சரி ரொம்ப கற்பனையை வளர்த்துக்காத, உனக்கு தெரியாத எதையும் நான் சொல்ல போவதில்லை. உன்னை கல்யாணம் செய்ய விரும்புவதாக உன்னிடம் கேட்டு, அதை நீ மறுத்து விட்டாய்.” என இந்தர் கூறிக் கொண்டு இருக்கும் போதே நடுவில் புகுந்த பூஜா........

“அது தான் எனக்கே தெரயுமே” என்றாள்.

“அதை தான் நானும் சொல்கிறேன், உனக்கு தெரியும் என்று.”

“இது எனக்கு தெரிஞ்சது, எனக்கு தெரியாததை முதலில் சொல்லுங்க.” என்றாள் பூஜா அவசரமாக........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.