(Reading time: 17 - 34 minutes)

“அன்று பொடு ஹுரா தீவில் புயலில் நீ மாட்டிக் கொண்டதை அறிந்து, உன்னை தேடி அலைந்த பொழுது, என் உயிரே என்னை விட்டு போனது போல் இருந்தது பூஜா. அதனால் அப்பொழுதே முடிவு செய்தேன், நீ கிடைத்த நிமிடத்தில் இருந்து உன்னை என்னுடையவளாக,  என் பக்கத்தில் வைத்தே பாதுகாக்க வேண்டும் என்று. அதற்கு கல்யாணம் ஒன்று தான் வழி என்று யூகித்து, உன்னை தேடிக் கொண்டிருந்த நேரத்திலேயே, அந்த தீவின் அதிகாரியுடன் பேசி அணைத்து ஏற்பாடுகளையும் கவனிக்க சொன்னேன். அவரும் எல்லாம் ஏற்பாடு செய்தார்.” என்றான் இந்தர்........

“இதை என்னிடம் அப்பொழுதே சொல்லி இருக்கலாம் தானே, அதற்கு ஏன் அப்படி ஒர் பொய்யாய் சட்டம் இருப்பதாய் கூறி என்னை ஏமாத்தினீங்க?” என பூஜா வினவ...........

“நான் உன்னிடம் முறையாய் தானே அன்று ப்ரப்போஸ் செய்தேன். நீ அன்றே சரின்னு சொல்லி இருந்தா, எனக்கு இப்படி ஒரு பொய் சொல்ல அவசியமே வந்து இருக்காது.” என இந்தர் பதில் அளித்தான்.

“நீங்க பொய் சொன்னதற்கும் நான் தான் காரணமா?, உங்களை பிடிக்கலைன்னு, சொல்ற பெண்ணை இப்படித்தான் ஏமாற்றி திருமணம் செய்வீர்களா? இந்தரின் பதிலால் பூஜாவிற்கு இன்னும் தான் கோபம் கூடியது.

“என்னை பிடிக்காத பெண்ணை நான் ஏறெடுத்தும் பார்த்திருக்க மாட்டேன். என்னை பிடித்திருந்தும், பிடிக்காது என்று நாடகமாடும் பெண்ணை தான், ஏமாற்ற வேண்டி இருந்தது.” என்று இந்தர் எந்தவித குற்றவுனர்வும் இல்லாமேலே பதில் அளித்தான்.

“அப்போ என்னை எமாதியத்தை ஒத்து கொள்கறீர்கள், அப்படித் தானே” என்ற பூஜாவின் கேள்வியில் ஏளனம் இருந்தது.

“உன்னை, உனக்கு புரியவைக்க, என்னுடைய அருகாமையில் உன்னை கொண்டு வர எனக்கு வேறு வழி தெரியல பூஜா. அது தான் உண்மை.” என்றான் இந்தர் பரிதாபமாக...........

“போதும், எனக்காக, என்று சொல்லி நீங்க உங்களுக்காக செய்து கொண்டது எல்லாம் போதும்.” சொல்லும் போதே தான் ஏமார்ந்து விட்டோம் என்ற வலி அதிகமாக இருந்தது பூஜாவின் குரலில்.

“சரி நாம் இப்போ இதை பத்தி பேச வேண்டாம் பூஜா. கோபத்தில் நீ இருக்கும் பொழுது, நான் என்ன சொன்னாலும் உனக்கு மனதில் அது ஏறாது. நீ இப்போ உடை மாற்றி வந்து படு” என அவனருகே கையை காட்டினான் இந்தர்........

பூஜாவிற்கு இருந்த கோபத்தில் அவன் என்ன சொன்னாலும் கேட்க கூடாது என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. அதனால் அவன் கூறியபடி உடை மாற்றாமல், அவன் காட்டிய, அவன் பக்கத்தில் படுக்கையில் படுக்காமல், கோபத்துடன் வந்து அங்கிருந்த திவானில் தலைகாணி கூட இல்லாமல் சென்று படுத்துக் கொண்டாள்.

அதை பார்த்துக் கொண்டிருந்த இந்தருக்கு, ஒரு குழந்தை கோபித்து கொண்டு இருப்பது போல் தோன்றியது. அவனும் அதற்கு மேல் ஏதும் வாதம் செய்யாமல் படுக்கையில் படுத்தான்.

இருவருக்கும் அது உறங்கா இரவாக அது கழிந்தது...............

NAU

நாமும் அங்கே அவர்களோடு...

Episode 16

Episode 18

{kunena_discuss:1103}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.