(Reading time: 18 - 35 minutes)

18. நானும் அங்கே உன்னோடு... - பூஜா பாண்டியன்

NAU

ரவு முழுவதும் சரியாக தூங்காமல், மன உளைச்சலில் இருந்த பூஜாவிற்கு, தூக்கம் வராமலே மூடியிருந்த இமைகளை, பிரித்த பொழுது, நேராக கட்டிலில் படுத்திருந்த, இந்தரே கண் முன் தோன்றினான். நிம்மதியாக் தூங்கிக் கொண்டிருந்த அவனது உருவம் கண்டு, இரவெல்லாம் உறங்காமல் இருந்த கண்களின் எரிச்சலையும் மீறி, மனதின் எரிச்சல் அதிகமானது.

அவன் மட்டும் எப்படி, நிம்மதியாக உறங்கலாம் என்ற மனதின் கேள்வியோடு வேகமாக எழுந்த பொழுது, அவள் மேலிருந்து விழுத்த போர்வையும், தலை பகுதியில் இருந்த, தலைகாணியும், சற்று நிதான படுத்தியது பூஜாவை.

அவன் தான் வந்து தனக்கு, தலையணியும், போர்வையும் வைத்து சென்று இருக்கிறான், தனக்கு அது கூட தெரியவில்லை எனில், தானும் அவனுக்கு முன் கண் அசந்து உறங்கி இருக்கிறோம் என்று தானே பொருள், என்று மனசாட்சி கேள்வி எழுப்பியது.

நேற்று சண்டையில் அவன் தன்னை சரியாக சமாதன படுத்தவில்லை என்றே பூஜாவின் எண்ணமாக இருந்தது. அதனால் இன்று எப்படி எல்லாம் சண்டையை தொடரலாம் என்ற எண்ணத்துடனே, சென்று குளித்து உடை மாற்றி, தன்னை நல்ல விதமாக அலங்கரித்து வந்தாள் பூஜா.........

அவள் கிளம்பி வந்தும், இந்தர் எழுந்து கொள்ளாதது பார்த்து, போதும் அவன் தூங்கியது என்ற எண்ணத்தில் அவன் அருகே சென்று, அவனை எழுப்ப போன பூஜாவுக்கு அவனை எப்படி எழுப்பவது என்பதில் சற்று யோசனை வந்தது.

இதுவே நல்ல படியாக நேற்று  இரவு கழிந்திருந்தால், ஆசையுடன் அவன் அருகில் சென்று அமர்ந்து, அவன் நெற்றியை மறைத்த கேசத்தை ஒதுக்கி, அதில் லேசாக இதழ் பதித்து................... இன்னும் நீண்டு கொண்டே போனது அவளது கற்பனை.

ஆனால் இப்பொழுதிருந்த கோபத்திற்கு, ஏதாவது கிடைக்குமா என, அறையை சுற்றி பார்த்த பொழுது, அதன் அழகு மனதை, மயக்கியது என்னவோ, உண்மை தான்.

அறை முழுவதும், வெண்மையும், தங்க நிறமுமே ஆக்ரமித்து இருந்தது. அங்கிருந்த அணைத்து பொருட்களும் கூட வெண்மையிலும், பொன்னிறதிலுமே, அமைந்திருந்தன. இருவர் படுக்கும் படுக்கையாகட்டும், இருவர் மட்டும் அமரும் சொபாவாகட்டும், சுவரில் இருந்த ஓவியங்களில் கூட அதிகமாக வேறு வண்ணங்கள் இல்லை.

அனைத்தும் பார்த்து பார்த்து அதனதன் இடத்தில் சரியாக அமர்த்தப் பட்டிருந்தது. அதில் மெய் மறந்திருந்த பூஜா  ஒரு சில நிமிடங்களிலேயே தனது பழைய கோபத்திற்கு திரும்பினாள்.

அங்கு பளபள என்றிருந்த  ஒரு பித்தளை பூ ஜாடியை பூக்களுடன் தரையில் உருட்டி விட்டாள். அது நங் என்ற சத்தத்துடன் தரையில் உருண்டோடியது.

அதன் சத்தத்தில் கண் விழித்த இந்தர், கோபத்துடன் நின்றிருந்த பூஜாவை பார்த்தான். அவளது ஆடை அலங்காரத்தை பார்த்து திருப்தியுற்று, “குட் மார்னிங் டா” என்றான்.

“நான் கோவமா இருக்கேன்” என்றாள், பதிலுக்கு.

“சரி, கொஞ்சம் காத்திரு, நானும் கிளம்பி வருகிறேன். கிழே போய் சாப்பிட்டுவிட்டு வந்து நமது சண்டையை தொடரலாம்.” என சாதாரணமாக கூறி எழுந்து குளியலறைக்கு முன்பு இருந்த துணி மாற்றும் அறையையும் சேர்த்தே மூடிக் கொண்டான்.

தனது கோபம் அவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதே, பூஜாவின் கோபத்தை மேலும் கூட்டியது. அவனுக்கு கோபம் மூட்ட என்ன செய்யலாம் என அங்கிருந்த சோபாவில் அமர்ந்து யோசிகலானாள். எவ்வளவு யோசித்தும் பெரிதாக ஒன்றும் யோசனை தோன்றாததால் தன் மீதே கோபம் வந்தது.

டார்க் பிரவுன் நிற பாண்ட், லைட் சந்தன நிற முழுக் கை சட்டையும் அணிந்து, சட்டையின் முழு கையை மடக்கி விட்ட படி, கதவை திறந்து வெளியே வந்தான் இந்தர். அதை பார்த்த பூஜாவிற்கு “உள்ளம் கொள்ளை போகுதே, உன்னை கண்ட நாள் முதல்”, என்ற பாடல் வரி  பின்னணி இசையாய், காதில் ஒலிக்க தான் செய்தது. அதை காற்றாய் ஊதி தள்ளி, அவனிடம் கேள்வி எழுப்ப நினைத்த பொழுது அவனே..........

“பூஜா, இப்போ எதையும் ஆரம்பிக்காதே, அதுக்கு நமக்கு நிறைய நேரம் இருக்கு. ஆனா இப்போ வேண்டாம். உன்னோட அப்பா, அம்மா எல்லோரும் ஊருக்கு கிளம்பட்டும். அதன் பின் சாவகாசமாக நமது சண்டையை வைத்து கொள்ளலாம். அதை விட முக்கியமான விஷயம், நம்ம ரெண்டு பேர் சண்டை இந்த நாலு சுவற்றிக்குள் மட்டும் தான் இருக்க வேண்டும். அதை தாண்டி நமது பெற்றோர் வரை செல்ல வேண்டாம். அது அவர்களை மிகவும்  பாதிக்கும். அதனால் அவர்கள் முன்பு நல்ல படியாக நடந்து கொள்” என இந்தர் ஒரு பெரிய பிரசங்கமே செய்து முடித்திருந்தான்.

அதை கேட்ட பூஜாவிற்கு தான், இவன் சொல்லி நாம் என்ன கேட்பது, என்று தோன்றிய பொழுதும், எனது பெற்றோர் என்று கூறாமல், நமது பெற்றோர் என்று அவன் கூறியது பூஜாவை யோசிக்க வைத்தது.

விஷயம் தெரிந்தால் அப்பாவும் அம்மாவும், மிக கவலை படுவார்கள் என்று தோன்றியதால், அவன் கூறியவற்றிற்கு ஒப்புக்கொண்டாள் பூஜா.....

இருவரும் காலை ஜோடியாக கிழே இறங்கி வந்த பொழுது சம்யுக்தாவும், சரோஜினியும் காபி அருந்திக் கொண்டிருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.