(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 05 - சகி

Uyiril kalantha urave

"சார்??"-பரபரப்புடன் மடிக்கணினியை படாதப்பாடு படுத்தி கொண்டிருந்தவன்,நிமிர்ந்துப் பார்த்தான்.

"உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்காங்க!"

"மனு எதாவது கொடுக்க வந்திருக்காங்களா?ஒரு பத்து நிமிடம் காத்திருக்க சொல்லுங்க!"

"இல்லை சார்!அவங்க மனு எல்லாம் கொடுக்க வரவில்லை.வேற ஏதோ விஷயமாம்!"

"வேற என்ன?யார் அது?"

"அவங்க பெயர் சிவன்யான்னு சொன்னாங்க!"-உரைக்கப்பட்ட அப்பெயர் அவனுள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது.

"சிவன்யாவா?வர சொல்லுங்க!"-தன்னையறியாமல் அவன் கூற,திடீரென அவன் பேச்சில் ஏற்பட்ட மாற்றம் அவன் உதவியாளரை திகைக்க வைத்தது.

"எஸ் சார்!"குழம்பியப்படி வெளியேறினான்.இவனுக்கோ அச்சில நொடிகளுள் உலக சுழற்சி மிக அதிக வேகத்தில் இருப்பதாய் ஒரு படபடப்பு!!!அந்த இரு நிமிடங்களுக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் அவனுக்குள்!!

"எக்ஸ்யூஸ்மீ சார்?"

"வாங்க...!"-அவனது கம்பீர குரல் அன்று ஏனோ அவ்வளவு கம்பீரமாய் தோன்றவில்லை.

உள்ளே நுழைந்தவளிடம் அன்று ஏதோ புதியதாய் தோன்றியது அவனுக்கு!!!அந்த முகத்தில் நட்புரிமையையும் தாண்டி ஏதோ ஒரு உணர்வு பொலிவூட்டியது.

அவளது மயில்தோகை நிற பருத்திப்புடவை,காண்போரை கவர்ந்திழுக்கும் புன்முறுவல்...சில நொடிகள் இடம்,பொருள்,ஏவல் மறந்து அவளிடமே நிலைப்பெற்றன அவன் கண்கள்!!!

"ப்ளீஸ் சிட்!"

"தேங்க்யூ!"-அவன் விழி மௌன மொழிகள் பேச துடித்தும்,அதற்கு இடமளிக்காமல் தாழ்ந்திருந்தன அவள் கண்கள்!!!

"ஆகஷூவலா!நான் உங்களை பார்க்க தான் வந்தேன்!"கூறிவிட்டு சட்டென தன் கீழுதட்டை கடித்தாள் சிவன்யா.அதை கவனித்தும்,கவனிக்காதவனாய்!!

"என்னைப் பார்க்கவா?என்ன விஷயம்?"

"ஆ...அது...வந்து!யு.பி.எஸ்.சி எக்ஸாம் எழுதலாம்னு ஒரு ஐடியா!பட்,எப்படி பிரிப்பேர் பண்றதுன்னு தெரியலை!அதான்...உங்கக்கிட்ட ஐடியா கேட்கலாம்னு வந்தேன்!"

"ஓ...வேற ஒண்ணும் இல்லையா?"-பரிதாபமாய் ஒலித்தது அவன் குரல்.இல்லை என தலையசைத்தாள் சிவன்யா.

"நல்ல விஷயம் தான்!யு.பி.எஸ்.சி ஒண்ணும் பெரிய கஷ்டமான எக்ஸாம் இல்லை..."-என்று தான் அறிந்தவற்றை பாரபட்சமின்றி அவளுக்கு போதித்தான்.

"இப்படி பண்ணீங்கன்னா,முதல் முறையே பாஸ் பண்ணிடலாம்!"

"தேங்க்யூ சார்!"-அவள் தன் நன்றியை கூற,அச்சமயம் மென்மையாக ஒலித்தது அவன் கைப்பேசி.

"ஒரு நிமிஷம்!"-என்று அதை எடுத்துக்கொண்டு தனியே சென்றான் அவன்.அங்கு தனித்திருந்தவள் தன் பார்வையை அங்குமிங்கும் அலையவிட,அதற்கு சிக்கியது அங்கு ஓரமாய் அவன் வைத்திருந்த அவனது தாயின் புகைப்படம்!!

"இது என்ன?பணி செய்யும் இடத்தில்,இறைவனது புகைப்படம் வைப்பர்!அல்லது சான்றோரின் புகைப்படம் வைப்பர்!இவர் யார்?"-கேள்வியாய் அப்புகைப்படத்தை கையிலெடுத்தாள் சிவன்யா.

'நல்ல கலையான முகம்!அந்த முகத்தில் தான் எவ்வளவு அமைதி??யாராய் இருந்தாலும் கரம் குவித்து வணங்க வைக்கும் தெய்வீக சாயல் அவர் முகத்திற்கு!சிந்திய புன்னகை மட்டுமே பல ஆயிர கதைகள் கூறும்!!'-அவள் மனதுள் ஆழமாய் பதிந்தது அவ்வோவியம்!!

"ஸாரி!"-என்று மீண்டும் வந்தவனை கண்டவள்,அப்புகைப்படத்தை வைத்தாள்.

"ஸாரி சார்!"

"பரவாயில்லை...!"புன்னகைத்தான் அவன்.

"நீங்க தப்பா நினைக்கலைன்னா,அவங்க யாருன்னு தெரிந்துக்கலாமா?"-அப்பாவியாய் கேட்டாள் அவள்.சில நொடிகள் அப்புகைப்படத்தையே புன்னகையுடன் உற்றுப் பார்த்தான் அசோக்.

"என் அம்மா!"-அவன் குரலில் இருந்த வலி,அவளை போய் சரணடைந்தது.

"அழகா இருக்காங்க!"-புன்னகைத்தாள் சிவன்யா.

"உண்மை தான்!ஆனா,இப்போ இவங்க உயிரோட இல்லை!"-வலிகள் நிறைந்த குரலில் அவன் கூறினான்.ஏனோ தனது கடந்தகாலத்தை அவளுடன் பகிர கூறியது அந்த ஆண்மனம்.

"ஸாரி ஸார்!"-சங்கடமாய் ஒலித்தது சிவன்யாவின் குரல்.

"பரவாயில்லை...ஆல் தி பெஸ்ட்!எதாவது சந்தேகம்னா சொல்லுங்க!"

"ஓ.கே சார்!ஸாரி உங்களை டிஸ்ட்ரப் பண்ணிட்டேன்!"

"அதெல்லாம் இல்லை..."

"அப்போ நான் கிளம்புறேன்!"

"ம்..."-ஏனோ அப்பிரிவு அங்கு இருவருக்கும் பெரும் துன்பத்தை நல்குவதாய் ஓர் எண்ணம் அந்த இரு நெஞ்சங்களுக்கும்!!பெரும் தயக்கத்துடன் உடல் நீங்கிய உயிராய் அவனை நீங்கி நடந்தாள் சிவன்யா.தடுக்க மனங் கூறியும் தயங்கி நின்றது மற்றொரு நெஞ்சம்!!

இது என்ன விளக்க இயலாத உணர்வாய் உள்ளது என்ற வினாவும் தொடர்ந்தப்படி!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.