(Reading time: 9 - 18 minutes)

"ஏ...என்னடி?பொண்ணுக்கு காலகாலத்துல கல்யாணம் பண்ணி வைக்க எங்களுக்கு விருப்பம் இருக்காதா?"

"அப்போ!நீங்களே இவனை கட்டிக்கோங்க!எனக்கு இவனைப் பிடிக்கலை!"-சட்டென அவள் சீற,தன் கரத்தை ஓங்கிவிட்டார் மீனாட்சி.

"மீனா!என்ன பண்ற நீ?குழந்தையை அடிக்க வர?!"

"இப்படியே செல்லம் கொடுங்க!எனக்கு தெரியாது!இவன் உன்னை பார்த்து பேச சொல்லிருக்கார்!நீ சனிக்கிழமை போற!நான் யாரை கை காட்டுறேனோ அவனை தான் கல்யாணம் பண்ணியாகணும்!"-பொரிந்து தள்ளிவிட்டு போனார் மீனாட்சி.சிவன்யாவின் இயலாமை,மனதளவில் சினமாய் உருமாற,தந்தையின் கரத்திலிருந்து புகைப்படத்தை பிடுங்கியவள்,அதை,சுக்கலாய் கிழித்தெறிந்தாள்.

"கண்ணா?"-பதிலேதும் உரைக்காமல்,அவ்விடம் விளகினாள் அவள்.நேராக தனதறைக்கு வந்து,கட்டிலில் விழுந்து,கதற ஆரம்பித்தாள்.ஒருவேளை,அசோக்குடனான முதல் சந்திப்பு நிகழாமல் போயிருந்தால்...இதற்கு முழு மனதுடன் சம்மதம் தெரிவித்து,அதே மெத்தையில் அமர்ந்து இந்நேரம் கனவுகளை தொடங்கி இருப்பாள்.எல்லாம் அமைதியாக செல்லுமானால் சுவாரசியம் தான் ஏது???

"இவங்க கை காட்டுற பையனை தான் கல்யாணம் பண்ணணுமாம்!நான் என்ன பொம்மையா?எல்லாத்தையும் இவங்க தான் தேர்ந்தெடுத்தாங்க!சின்ன சின்ன விஷயம் கூட என் வாழ்க்கையில அம்மா தான் முடிவு பண்ணாங்க!என் எண்ணங்களுக்கு அவங்க மதிப்பே கொடுக்கலை.ஒரு பெரிய எழுத்தாளராகணும்னு ஆசைப்பட்டேன்!ஆனா,அந்தக் கனவுகளை எல்லாம் சிதைத்தவங்களே இவங்க தான்!இப்போ வாழ்க்கையையும் சிதைக்க முயற்சி பண்றாங்க!இல்லை...எனக்கு அசோக் தான் வேணும்!நான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்."-கனவுகளை தனிமையிடம் வாய்விட்டு கூறினாள் அவள்.வேறு யார் உள்ளார் அவள் குறை கேட்க???

ரத்தில் இருந்த வர்ணங்களை எடுத்து,தான் பார்த்து பார்த்து வரைந்த ஒவியத்திற்கு வர்ணம் பூசினான் அசோக்.நேர்த்தியாய் உருவாகி கொண்டிருந்த ஓவியத்தின் விழிகளுக்கு மை தீட்ட,அது முழுமை அடைந்தது.எனினும்,ஏதோ ஓர் குறை உள்ளது.என்ன குறை????விழிகள் சுறுக்கி சில நொடிகள் அதையே உற்று நோக்கினான்.ஆம்...!குறையை கண்டாயிற்று!!மேசையிலிருந்த சிவப்பு வர்ணத்தை எடுத்தவன்,அதை தூரிகையில் தடவி,இரு புருவங்களுக்கு மத்தியில் திலகத்தைச் சூட்டினான்.அடுத்த நொடி,அவன் எதிர் உயிர் பெற்றாள் அவனது சிவன்யா.

விழிகள் அவளைவிட்டு நீங்க மறுத்தன.தனிமையில் இருந்த போதும்,சுற்றும் முற்றும் ஒரு நொடி பார்த்தவன்,அதே சிவப்பு மையினை அவள் நெற்றி வகிட்டிலும் வைத்தான்.அதான் கனவுலகில் அங்கீகரித்துவிட்டானே!!

வறண்டதோர் பாலை நிலத்தினில் ஊற்றெடுத்த நதியாய் அவள்!!ஆண்டுகளுக்கு பிறகு காதல் சுரக்கிறது...ம்...இந்தக் காதலில் ஏதோ ஒன்று உள்ளது!!ஆனால் இது கரம் சேருமா என்பதே கேள்விக்குறியல்லவா???விதி போடும் சுவாரசிய முடிச்சுகளை அவிழ்க்கும் வல்லமை காலத்திற்கு மட்டுமல்லவா இருக்கிறது!!!

Episode 04

Episode 06

தொடரும்!

{kunena_discuss:1149}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.