(Reading time: 18 - 35 minutes)

பார் ஏரியா மிக பெரியதாக, டிஸ்கோ தளத்துடன் கூடியதாக இருந்தது. அதனை ஒட்டியே பெரிய நீச்சல் குளம் அமைக்க பட்டிருந்தது. அதில் ஒரு பக்கம் முழுவதும் சிறு சிறு படிக்கட்டுகளாக அமைக்க பட்டு  இருந்தது. அந்த படிக்கட்டுகளில் விளக்கு பொருத்தப் பட்டு, நீல நிறத்தில் ஒளிர்ந்தது. அங்கிருந்த ஒரு கம்பத்தில் பொருத்த பட்டிருந்த டிஸ்கோ விளக்கும் தண்ணீரின் மேல் ஒளி வீசி, எதோ தண்ணீருக்குள் ஜெல்லி மீன்கள் இருப்பது போன்ற மாய தோற்றத்தை உருவாக்கி கொண்டிருந்தது. முதல் படியில் சில மேஜை நாற்காலிகளுகும், போட பட்டிருந்தன. சிலர் அங்கு அமர்ந்து இயற்கையை ரசித்த படி மது அருந்தி கொண்டிருந்தனர்.

எதோ தேவ லோகத்தில் சஞ்சரிப்பது போல் இருந்தது, பூஜாவிற்கு. அவளும் தன்னை மறந்து அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து இயற்கையுடன் கூடிய செயற்கையை ரசித்து கொண்டிருந்தாள். எவ்வளவு நேரம் அமர்ந்து இருந்தாளோ தெரியவில்லை. பக்கத்து நாற்காலியின் நகரும் சத்தத்தினால் மீண்டு, தலை திரும்பி பார்த்தாள் யார் என்று.

இந்தர் தான், அவளை பார்த்து புன்னகைத்த படி அமர்ந்தான். “என்னடா, உனக்கு பிடிச்சு இருக்கா இந்த ரெசார்ட்”. என வினவவும் செய்தான்.

“ம்ம்....... ரொம்ப இந்தர்.” என்று மகிழ்ச்சியுடன் கூறிய பின்பே நாக்கை கடித்து கொண்டாள். ம்ம் என்றதற்கு ஏதும் சொல்வானோ என்று மெதுவாக அவன் முகம் பார்த்த பொழுது, அவன் ஒன்றும் கேட்காதது போல் இருந்தான்.

பூஜாவிற்கு சட் என்று  கோபம் வந்தது. நாம் தான் கோபமாக இருக்கிறோமே, இவனாவது ஏதும் சொல்கிறானா பார் என்று.

“உனக்கு பிடித்த இடத்தில் வைத்து விளக்கமாக சொல்லலாம் என்று தான் இங்கு, உன்னை அழைத்து வந்தேன்.” என்று இந்தர் கூற.......

“நீங்க எங்க என்னை அழைத்து வந்தீர்கள்? அத்தை தான் விடாபிடியாக உங்களுடன் அனுப்பி வைத்தார்கள்.”.........

“நானே கூப்பிட்டு இருந்தால் நீ வந்திருக்க மாட்ட, அதனால் தான், அம்மா மூலமா கூப்பிட வேண்டியதா போச்சுடா”

“எதையும் நேரிடையா செய்ய மாட்டிங்களா?”

“நேரிடையா செய்தா தான் உன் மர மண்டைக்குள் ஏற மாட்டேங்குதே. அதனால் தான் இப்படி.”

“ என்னது மர மண்டையா” என்று பூஜா ஆவேச பட.........

“அதை பிறகு ஆராய்ச்சி செய்யலாம். இப்போ முதலில் இருந்து நம்ம கதையை என்னோட கோணத்தில் இருந்து பார்ப்போம். அப்போ தான், நான் செய்தது சரியா, தவறான்னு உனக்கு புரியும். சொல்லட்டா?

“ம்ம்” என்று உம் கொட்டினாள் பூஜா.......

ஒரு மெல்லிய புன்னைகையுடன் பேச ஆரம்பித்தான் இந்தர். “முதல் முதலா நான், உன்னோட குரலை தான் கேட்டேன் டா. அது தமிழாக இருக்கவும், நின்று கவனித்தேன். உனக்கே தெரியும், சுவிஸில் பல ஐரோப்பிய மொழிகளுக்கு நடுவே, நமது தாய் மொழி கேட்டால் ஒரு சுகம் தானே. முதலில் உன் குரல் என்னை வசிகரித்தது, அடுத்து நம் மொழி நம்மை இணைத்து. பிறகு உனது உயர்ந்த எண்ணங்கள், என்னை உன் முகம் பார்க்காமலே உன் மேல் மரியாதை கொள்ள வைத்தது டா........அந்த மரியாதை தான் உன் மேல் காதல் கொள்ளவும் வைத்தது.” என இந்தர் கூறிய பொழுது, எதை பற்றி கூறுகிறான் என்று பூஜா அவன் முகத்தை பார்த்தாள்..............

NAU

நாமும் அங்கே அவர்களோடு...

Episode 17

Episode 19

{kunena_discuss:1103}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.