(Reading time: 18 - 35 minutes)

 சம்யுக்தாவும், சரோஜினியின், முன்பு எதுவும் கேட்க தயங்கி, பூஜாவின் முகத்தை மட்டும் பார்த்து கொண்டிருந்தார்.

பூஜாவும் அதை அறிந்து, முகத்தை புன்னைகையுடனே வைத்து கொண்டு “நான் பூஜை அறையில் விளக்கேற்றுகிறேன் அத்தம்மா” என்றபடி நகர்ந்தாள். சரோஜினியும் அவளை தொடர்ந்ததால்,

சம்யுக்தா, இந்தரை பார்த்தது “என்ன இந்தர் கண்ணா, எல்லாம் சரி செய்துட்டியா? என கவலையுடன் கேட்டார்.

“மா......... நீங்க எதுக்கும் கவலை படாதிங்க, பூஜா என்ன சின்ன குழந்தையா? அவள் எல்லாம் புரிந்து கொண்டாள்.” என கூறியதை கேட்டு சம்யு நம்பினாரா இல்லையா என்று அவர் முகத்தில் இருந்து எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை இந்தராலேயே........ லேசாக புன்னகைத்து கொண்டே அங்கிருந்து நழுவினான்.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு முடித்ததும், அன்று மதியத்திற்கு மேல் வந்தவர்கள் அனைவரும் ஊருக்கு கிளம்புகிறார்கள் என்று தெரிந்தும், ரேசார்டிற்கு கிளம்பி செயன்றான் இந்தர்.

அதற்கும் பூஜாவிற்கு கோபம் வந்ததது. இருந்து அவர்களை வழியனுப்பி விட்டு இவன் சென்றிருக்கலாம் என எண்ணினாள்.

ந்தர் வீட்டு மொட்டை மாட்டியில், நீச்சல் குளத்தின் அருகில் நின்று, அங்கிருந்து கடலை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த குழலிக்கு உலகமே அற்புதமாக தெரிந்தது. பத்தாவது மாடியிலிருந்து பார்க்கும் பொழுது, பக்கத்தில் இருந்த சிறு தீவும், சிறு படகுகள் நகர்வதும், ஒரு பெரிய பயணியர் கப்பல் நங்குரம் இட்டு நின்று கொண்டிர்ப்பதையும் பார்த்து நேரம் போவது தெரியாமல் நின்று கொண்டிருந்தாள் குழலி.

பார்த்து கொண்டிருந்த அவளது கண்களை மூடியது,  இரு கரங்கள். சட்டென்று விலகி, யார் என்று பார்த்த பொழுது அங்கு  அபிஜித்தின் குறும்பு பார்வையுடன் கூடிய மதி முகம் தென்பட்டது. நிறத்தில் அண்ணன், தம்பி இருவருமே நிலவை ஒட்டியே இருந்தனர். இவர்களது அம்மாக்கள் அப்படி, என பெருமூச்சு விட்டாள் குழலி. கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது, இவனுக்கு எல்லாம் எதற்கு இவ்வளவு நிறம் என்று. அதற்காக குழலி ஒன்றும் நிறம் குறைந்தவள் இல்லை தான், இருப்பினும் அவன் தன்னை விட சற்று வெளுத்து தெரிகிறான் அன்றே தோன்றியது அவளுக்கு.

“ஹேய், போதுண்டா என்னை இப்படி சைட் அடித்தது” என அபி கூறிய பொழுதே, அவனை வெறித்து நோக்கி கொண்டிருப்பதை உணர்ந்து, வெட்கப்பட்டாள்  குழலி..........

இருபினும் அதை வெளிக் காட்டாது , “உங்களை சைட் அடிக்க கூட இங்கு ஆள்  இருக்காங்களா என்ன? என்று கேட்டபடி திரும்பி, அவன் பின்னே தேடுவது போல் பாசாங்கு செய்தாள் வண்டார் குழலி............

“வேற ஆள் யாரும் எனக்கு வேண்டாம், நீ மட்டும் எனக்கு வாழ்நாள் முழுவதும் போதும் குழலி” என்று அவளது கண்களை பார்த்து கூறினான் அபிஜித்.

அவனது கண் வழியே, உயிர் வரை ஊடுருவும் அவனது பார்வையும், மனதை மயக்கும் அந்த குரலும், என்னவோ செய்தது குழலியை. எப்பொழுதும் இருக்கும் குறும்பு மறைந்து, அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை கவனிக்கும் ஆவலும் பிறந்தது அவளிடம்.

“குழல், இப்போ இங்கிருந்து கிளம்பினா உன்னை எப்போ மறுபடி சந்திப்பேனோ தெரியலை. உன்னிடம் நேரில் சொல்ல வேண்டியது இது.” என கூறியபடி அவனது இரு உள்ளங்கையில் அவளது முகத்தை ஏந்தி, அவள் கண்ணோடு, கண் கலந்து “ என் வாழ்க்கை முழுவதும் என்னோட சண்டை போட என் பக்கத்தில் என் மனைவியா நீ இருப்பியாடா” என கேட்ட பொழுது அவனது கண்கள் சிறிது கலங்கி தான் இருந்தது.

அதை பார்த்த குழலிக்கும் கண்கள் சிறிது கலங்க தான் செய்தது, இருப்பினும் அவளது குறும்பு கொப்பளித்து  வெளி வர............

 “சண்டை போட நான் ரெடி, காலில் விழ நீங்க ரெடியா” என பாட்டாக பாடினாள்.

அவள் பாட்டை கேட்டு சிரித்து கொண்டே அவளை அணைத்து, அவள் நெற்றியில் தனது உதட்டை ஒட்டி “தாங்க்ஸ் டா “ என்றான்.

இருவரும் சிறிது நேரம் தங்களை மறந்து, ஒருவர் மற்றவர் அணைப்பில் கட்டுண்டு, இந்த உலகத்தையே மறந்து இருந்தனர்.  

முதலில் தெளிந்தது அபியே. “குழல், எனக்கு உன்னை இப்பவே திருமணம் செய்து சுவிஸ் அழைத்து போக ஆசை தான். ஆனால் ரெண்டு வருஷம் பொறுத்துக்கோடா, நான் கொஞ்சம் என் சொந்த காலில் நிற்க ஆசைப்படறேன். இந்தர் அண்ணா அளவுக்கு இல்லைன்னாலும், ஓரளவுக்கு, உனக்கு ஏதாவது நான் வாங்கி பரிசளிக்க விரும்பினால் அது என்னோட சொந்த பணமாக இருக்கனும்ன்னு நினைக்கிறேண்டா, புரியுதாடா? என கேட்டான் அபி........

“புரியுது, புரியுது. பி.ஜி  சேர்ந்தே ஆகணும்ன்னு சொன்ன என் அப்பாவுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, கல்யாணம் ஆகி செட்டில் ஆகலாம் என்ற, என் பெரிய கனவை தியாகம் செய்யணும்ன்னு புரியுது.” என குறும்பாக சொல்லி முடித்தாள் குழலி........

அதை கேட்டு, அவளது தலையை , தனது தலையால் செல்லமாக முட்டி “அவ்வளவு மக்காடா நீ “ என்று அபியும் குறும்பாகவே கேட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.