(Reading time: 18 - 35 minutes)

“படிக்க பிடிக்கலன்னா மக்கா?, நாங்க எல்லாம் படிக்காத மேதைகளாக்கும்” என்று இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள் குழலி........... “சரி உங்களுக்காக, இப்போ இந்த,  ரெண்டு வருடத்தை கடத்த பி.ஜி சேர்ந்துகறேன். ஆனா ரெண்டு வருஷம் கழித்து சான்றிதழ் எல்லாம் என்னிடம் கேட்க கூடாது, என்னோட அப்பா மாதிரி.” என கண்டிஷன் போட்டாள் குழலி........

“கண்டிப்பா கேட்க மாட்டேண்டா, நீ சந்தோசமா ஊர் சுற்ற மட்டும் இதை உபயோக படுத்திக்கோ, ரெண்டு வருஷம்  முடியுமுன்,  நான் வந்து உன் வீட்டில் கேட்டு, உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன்” என கூறி உறுதி அளித்தான் அபிஜித்.........

“சரி” என்று சந்தோசமாக ஒப்பு கொண்டாள் குழலி. “இந்த ரெண்டு வருஷம் உங்களை பார்க்க முடியாதா” என ஏக்கத்துடன் அபியிடம் கேட்டாள் குழலி........

“வாட்ஸ் அப், நமக்காகத் தான் கண்டு பிடிச்சு இருக்காங்கடா. உனக்கு எப்போ தோணுதோ, அப்ப எல்லாம் வீடியோ காலிலேயே பேசலாம்.” என வழி சொன்னான் அபி.

“நீங்க சுவிஸ் குளுரில் இருந்து ஜாலியா பேசுவிங்க, நான் சென்னை வெப்பத்தில் இருந்து பேசணும்” என்று அலுத்து கொண்டாள் குழலி.

“அந்த குளுரில் நடுங்கரதுக்கு, இந்த வெயிலில் இருக்கலாம்டா” என பதிலுக்கு அபியும் அலுத்து கொண்டான். இக்கரைக்கு அக்கரை பச்சை தான் எப்பொழுதும்.

இருவரும் பேசி கொண்டிருந்த பொழுது அங்கு வந்த சம்யுக்தா, என்ன அபி இங்க தனியா என்ன செய்யறிங்க, இந்த மதிய வெயிலில்? என கேட்க.........

அதுவரை இருவருக்கும் தெரியாத வெயிலின் தாக்கம் அப்பொழுது சுள் என சுட்டது இருவரையும்.

“அது ஒன்னும் இல்லை மம்மி, இங்கிருந்து பார்த்தா, எத்தனை தீவுகள் தெரியும் என்று காண்பித்து கொண்டிருந்தேன் குழலிக்கு”.......

அபி எப்பொழுதும் சம்யுக்தாவை மம்மி என்று தான் அழைப்பான். சம்யுவுக்கு யாரும் அவரை பெரியம்மா என்று அழைத்தால் பிடிக்காது. எதோ வயதானது போல் தோன்றும் என்று.

“குழலி உன்னோட அம்மா உன்னை தேடறாங்க, உன்னோட சாமான்களை பெட்டியில் அடுக்கனுமாம்” என கூறி அவளை அனுப்பினார் சம்யுக்தா.......

அவள் பின்னே கிளம்பிய அபியை நிறுத்தி,  “ அபிம்மா, குழலியோட அப்பா கொஞ்சம் ஒரு மாதிரி, கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ” என அறிவுரை வழங்கினார்.

“மம்மி, நீங்க ஒன்னும் கவலை படாதிங்க, நான் பார்த்துகறேன். அவர் ஏதும் முறுக்கி கிட்டா , “அட மாமா உன் பொண்ண கொடு, அப்படின்னு ரஜினி ஸ்டைலில் பாட்டு பாடி கவுதிர மாட்டேனா என்ன? என பதில் கூறினான்.

“அட படவா, இப்போ தான் தீவை காட்டிட்டு இருக்கேன்னு சொல்லிட்டு, இப்போ என்னடான்னா பொண்ணு குடுன்னு பாட போறேன்னு சொல்ற” என புன்னகைத்தபடி கேட்க.........

“அதை பாட இன்னும் கொஞ்சம் காலம் இருக்கு என்பதால், குழலி முன்பாக சொல்லவில்லை , ஆனா உங்களுக்கு தெரியாம நான் ஏதும் செய்ய மாட்டேன் மம்மி” என கூறி அவர் தோள் சாய்ந்து கொண்டான்.

“இப்படியே சொல்லி கவுதிடுவிங்கடா, நீயும், உன் அண்ணனும்.” என சம்யு கூறிய படி இருவரும் கிழே இறங்கி வந்தனர்.

அனைவரும் மதிய உணவை முடித்து விமான நிலையம் கிளம்பினர். உடன் வழியனுப்ப கிளம்பிய பூஜாவிற்கு தான் வருத்தமாக இருந்தது. பெற்றோரை விட்டு இருக்க வேண்டுமே என்றும், வழியனுப்ப இந்தர் வரவில்லையே என்று  தவிப்பாகவும் , அப்பா, அம்மா ஏதும் நினைத்து கொள்வார்களோ என்றும் வருத்தமாக இருந்தது. என்ன தான் இந்தருடன் சண்டை என்றாலும், அவனை தன் பெற்றோர் தவறாக நினைத்து விட கூடாதே என்றும்  இருக்க தான் செய்தது பூஜாவிற்கு.

அப்பா, அம்மா, அக்கா, குட்டி தேவதை ஜானு, எல்லோரும் கிளம்புகிறார்களே என்ற வருத்தத்தை விட, அதை பகிர்ந்து கொண்டு, தலை சாய அவன் தோள் இல்லையே என்ற வருத்தமே அதிகமாக இருந்தது. எங்கு சுற்றினாலும் அவளது எண்ண ஓட்டங்கள், இந்தரின் கழுத்தை சுற்றிய அவளது கைகளாகவே இருந்தது.  எங்கு பார்த்தாலும் அவன் உருவமே தெரிந்தது. யாரிடம் சென்று விடை பெற்றாலும், இந்தர் அவர்களின் அருகில் இருப்பது போன்றே தோன்றியது. தலையை உலுக்கி இனி அவனை நினைக்க கூடாது என்று எண்ணி, எப்பொழுதும் கலகலப்பாகவே பேசும் அபியிடம் சென்று பேச ஆரம்பித்தாள் பூஜா..........

“என்ன அபி, உன்னை பார்க்கவே முடியலை, எப்பவும் மேல் தளத்திலேயே உலாவிக் கொண்டிருந்ததாக அத்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள்? என்று அவனை வம்புக்கிளுதாள் பூஜா. அத்தை ஏதோ சின்ன அத்தையிடம் பேசியது காதில் விழுந்ததை வைத்து பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும், சும்மாவே தூண்டில் வீசினாள்.

“உங்களுக்கு தெரியாமல் நாங்க ஏதும் செய்ய மாட்டோம் அண்ணி, உங்க அளவுக்கு எங்களுக்கு விபரம் பத்தாது. நீங்களும் அண்ணாவும் எதுவுமே யாருக்கும் தெரியாமல் கல்யாணம் வரை மறைதீர்களோ, அப்படி என்னால் முடியாது.” என்று பதில் கூறினான் அபி........

ஹைய்யோ என்று இருந்தது பூஜாவிற்கு எங்கு போய் பேசினாலும் இந்தரை பற்றியே கேட்க வேண்டி இருந்தது. அவன் முகம் தான் எங்கும் தெரிகிறது என்று பார்த்தால், அவன் குரலும் கேட்டது பூஜாவிற்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.