(Reading time: 2 - 3 minutes)

தூங்குவதற்கு முன் குளிக்கும் பழக்கம்...!!!???

Bath

கூழானாலும் குளித்துக் குடி!

ஆம், நம் பழக்கவழக்கத்தை பொறுத்த வரை குளியல் என்பது காலையில் நடக்கும் ஒரு விஷயம். ஒரு சிலர் காலை - இரவு என இரண்டு வேளைகளிலும் கூட குளிப்பது உண்டு.

ஆனால் சீனர்களின் பழக்க வழக்கமே வித்தியாசமாக இருக்கிறது.

சீன நாட்டில் இரவில் பேசிக் கொள்ளும் போது, கேட்கப்படும் ஒரு பொதுவான கேள்வி குளித்தாகி விட்டதா என்பது தான்!!! நமக்கு இது ஆச்சர்யமாக இருக்கலாம் ஆனால் சீனர்களுக்கு இது பற்பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ஒரு பழக்கம்.

அவர்களை பொறுத்த வரை குளித்து, தூய்மையோடு தூங்குவது கலாச்சாரத்துடன் கலந்து விட்ட ஒரு வழக்கம். தூங்கும் முன் குளிக்காமல் தூங்க செல்பவர்கள் அவர்களின் கண்ணுக்கு படு கேவலமான ஒரு ஜீவன்!

காலையில் குளிப்பது என்பதெல்லாம் அவர்களுக்கு பழக்கமில்லாத விஷயம். ஆபிஸ் கிளம்ப சும்மா பல் தேய்த்து, முகம் கழுவி செல்வார்களாம்!!!!!

காலையில் அவசர அவசரமாக குளிக்க வேண்டும். நிம்மதியாக குளிக்க முடியாது. ஆனால் இரவு நேரத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் நம் விருப்பம் போல குளிக்கலாம். கூடுதலாக வேலையினால் ஏற்படும் டென்ஷன், வியர்வை, களைப்பு எல்லாம் இந்த இரவு குளியலினால் ஓடி போய் விடும், என்று அவர்களின் வழக்கத்திற்கு ஒரு விளக்கத்தையும் கொடுக்கிறார்கள் சீனர்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.