(Reading time: 1 - 2 minutes)

!! தீபாவளி நல்வாழ்த்துளுடன் கொண்டடுவோம் !! - கஜலக்ஷ்மி

இயன்ற மாத்திரம் ஒரு அலகு(யுனிட்) மின்சாரத்தயேனும் மிச்சம் புரிந்து பூமித்தாயின் மூச்சு எனும் வளிமண்டலம் தினறாமல்லிருக்க, வேண்டுமென தீபாவளி நல்வாழ்த்துக்கள் நல்குவோம் !

இயன்ற மாத்திரம் ஒரு வாலி நீரையேனும் மிச்சம் பிடுத்து பூமித்தாயின் இரத்தம் எனும் நீர்வங்ஙியின் சேமிப்பு குறையாமலிருக்க, வேண்டுமென தீபாவளி நல்வாழ்த்துக்கள் நல்குவோம் !

இயன்ற மாத்திரம் ஒரு மரத்தையேனும் நட்டு பூமித்தாயின் வனம் குறையாமலிருக்க வேண்டுமென,

தீபாவளி நல்வாழ்த்துக்கள் நல்குவோம் !

இயன்ற மாத்திரம் ஒரு நெகிழியேனும் தூக்கி எரிந்து பூமித்தாய்க்கு ஒவ்வாத அணிகலன், வேண்டவே வேண்டாம் என தீபாவளி நல்வாழ்த்துக்கள் நல்குவோம் !

இயன்ற மாத்திரம் ஒரு முறையேனும் சொந்த வாகனத்தை விடுத்து பொது போக்குவரத்து வாகனத்தில் பயனித்து பூமித்தாயின் மாசு எனும் நோய் நிவாரணமடைய, 

வேண்டுமென தீபாவளி நல்வாழ்த்துக்கள் நல்குவோம் !

எதுவுமே முடியாது எனினும் - இயன்றவற்றை இல்லாதவருக்கு(அவர்களும் பூமித்தாயின் பிள்ளைகள் தாம்!)

வேண்டுவன அளித்து தீபாவளியை நாம் அனைவரும் நல்வாழ்த்துளுடன் கொண்டடுவோம் !

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.