உருவாகி உயர்ந்திடு - ப்ரியா
மீண்டு எழுகையில் எல்லாம்
மிதித்து நசுக்கும் விதியை வெல்லும்
வித்தை தெரியவில்லை எனக்கு..!!
விழுந்த போதும்
மண்ணில் புதையும் போதும்
உடையும் உள்ளம்
உரக்கச் சொல்கிறது..
உருக்குலைக்கும் ஒவ்வொரு உதையும்
உளியின் அடியாய் ஏற்று
உயிரின் விதை அழியும் முன்னே
உருவாகி உயர்ந்திடு என்று..!!
{kunena_discuss:779}