(Reading time: 1 - 2 minutes)

சுகம் - அனு.ஆர்

அவளுக்கு பிடித்த பாடல்

அவனுக்கும் பிடித்தது.

அவனுக்கு பிடித்த படம்

அவளுக்கும் பிடித்தது.

 

காற்று

கடற்கரை

உணவு

உடை நிறம்

படகு

பாலை நிலா

நட்பு

நட்சத்திரம்

நறுமணம்

நால்வகை மதம்

 

எல்லாவற்றிலும்

ஒரே மனம்.

 

அவனேதான் அவள்.

அவளேதான் அவன்.

 

இல்லறத்தில் இணைந்தார்கள்.

 

அவளுக்கில்லாத

பொறுமை

அவனுக்கும்

இல்லை.

 

சில விஷயங்களில்

அவனுக்கிலாத

பொறுப்பு

அவளுக்கும் இல்லை.

 

கோபம்

குறை கூறல்

பொறாமை

போட்டியிடல்

சோம்பல்

சுத்தமின்மை

செலவீனம்

அறியாமை

 

எல்லாவற்றிலும்

ஒரே குணம்.

 

அவனேதான் அவள்.

அவளேதான் அவன்.

 

விவாகரத்தில் பிரிந்தார்கள்.

 

ஒத்த மனதைவிட

ஒரே குணத்தைவிட

ஒத்துபோகும்

குணம்

தாம்பத்யத்தில்

சுகம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.