(Reading time: 1 minute)

யாருக்கு இல்லை? - அனு.ஆர்

வந்தாள்

வருடகணக்காய்

மணமகன் தேடும்

மங்கையவள்.

மனதில்

வருத்தம்தான்

எனக்கும்.

 

பத்துலட்சம் பணம்

பவுன் ஐம்பது

வெண்ணிற வெர்னா

வேண்டுமாம்

நேற்று வந்த வரனுக்கு.

பேராசைக்காரன்

நாசமாய் போக

என்றாள்.

 

சென்ற மாதம்

அம்புஜம் மகன்

பங்கஜ் வந்தானே

பெண் பார்க்க......

கேள்வியாய் கேட்டேன்.

 

காசளக்கும்

கணிப்பொறிகாரன்

இல்லை அவன்

வெறும்

கணக்காளன்.

வாழ்க்கைப்பட்டால்

வரவுக்கும்

செலவுக்கும்

சரியாய் போகும்.

பிறந்தகத்தில்

பெறாத இன்பம்

பெறமுடியாதே

போகுமிடத்தில்

வேண்டாம் அவன்.

சென்றாள்.

 

யாருக்கில்லை

பேராசை?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.