(Reading time: 2 - 3 minutes)

கண்ணா...வருவாயா...? மீரா...கேட்கிறேன்... - தங்கமணி சுவாமினாதன்

கண்ணா.... வருவாயா..?

மீரா.. கேட்கிறேன்....

காற்றில் கலந்து வரும்-எந்தன்

கானம் கேட்டு நீயும்-காதலி

எனைத் தேடி..கண்ணா...

வருவாயா...?

என் விழிகளில் கண்ணீர்தான்

வழிந்தோடும் கங்கைபோல்..

உன் பாதம் தொடுவதற்குள்

விரைந்து நீ வருவாயா...(கண்ணா)

உனையே நினைத்து எந்தன்

உள்ளம் உருகி-மெள்ள..

என்னையே உருக்க-நானும்

இல்லாது போவதர்க்குள்..

விரைந்து நீ வருவாயா..(கண்ணா)

ஊனில்லை,உணர்வில்லை..

உறக்கமோ கண்ணிலில்லை..

என் உயிரும் உடல் விட்டுப்

பிரிவதர்க்குள் எனைத் தேடி..

விரைந்தே நீ வருவாயா..(கண்ணா)

என் மேகலையும் சரிந்தது..

வளையல்களும் கழன்றனவே..

இடுப்பில் துகில் நிற்காமல்..

மேனியும் இளைத்ததுவே...

"மோகமோ" "காமமோ"இல்லாத்..

தூய காதல் எனை-மொத்தமாய்

முடிப்பதற்குள்..கண்ணா நீ..

விரைந்தேதான் வருவாயா..(கண்ணா)

னீ ராதையோடு காதல் பேசி..

களித்தேதான் இருந்தாலும்..

கோபியரின் மடிகளிலே..

மகிழ்ந்தேதான் கிடந்தாலும்..

எனக்கொன்றும் இல்லை கண்ணா..

உனைத் தனக்குத்தான் சொந்தமென்று..

யாருனை நினத்தாலும்...

உன் மனதில் நானுமுண்டு-அங்கே

எனக்குமோர் இடமுண்டு..

விரைவாய் வந்துவிடு..

காதலா...காதலா....காதலால்..

தவிக்கிறேன்....

உன் உயிரோடு என் உயிரைக்..

கலந்திடவே துடிக்கிறேன்..

ராதையும்,கோபியரும் உனைக்

கொஞ்சி முடித்ததும்..

கண்ணா... வருவாயா...?

மீரா...கேட்கிறேன்...

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.