(Reading time: 1 - 2 minutes)

ஐந்து புஷ்ப்பங்கள்... - தங்கமணி சுவாமினாதன்

Five flowers

புஷ்ப்பம் 1.அம்மா:

எனை வயிற்றில் சுமந்து..

நெஞ்சில் நிறைத்து...

தோளில் சாய்த்து..

பாசம் கலந்து..பரிவைக் காட்டி..

நேசம் கலந்து நீதியைப் புகட்டி..

வாச மலர்போல் என்னை... 

வளர்த்திட்டவள்...

புஷ்ப்பம்  2. அப்பா:

மகளாய்ப் பிறந்த என்னை..

தன் தாய் போல் நினத்து..

தினம் தினம் என்னைக்..

செல்லம்மா..நீ என் கண்ணம்மா..என..

பாசமாய் எனக்குப் பலதும் செய்து..

வறுமையை என் கண்களில் காட்டாது..

கல்விக் கடலில் என்னை நீந்தச் செய்தவர்..

புஷ்ப்பம்  3..குரு:

டீச்சர்...டீச்சர்..ஜெயலெட்சுமி டீச்சர்..

விரல்பிடித்து எனக்கு எழுதும் பலகையில்..

"அ" வை அறிமுகப் படுத்திய ஆசான்...

அறியாமை எனும் இருள் நீக்கிய..

அறிவுப் பகலவன்...

தன்னலமில்லா ஏணி...

அறியாமை எனும் இருட்டுக் கடலை..

எளிதாய்க் கடக்க உதவிய தோணி...

புஷ்ப்பம் 4..தோழி:

என் உயிரில் கலந்தவள்...

என் நிழலாய் இருப்பவள்..

நான் சிரித்தால் சிரித்தும்..

அழுதால் அழுது்ம்...

ஆதாயம் கருதாமல்....

அன்பைத் தருபவள்...

புஷ்ப்பம் 5..கணவன்:

காதலில் கலந்து..

கணவனாய் இணந்தவன்..

தாயாய்,தந்தையாய்..

ஆசானாய்,தோழனாய்..

அனைத்துமாய் இருப்பவன்..

நேசத்தைக் கண்களிலும்..

பாசத்தை நெஞ்சினிலும்..ஏந்தி..

என் சுவாசத்தில் கலந்து..

எனக்குத் தாய் எனும் தகுதி தந்தவன்...

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.