(Reading time: 2 - 4 minutes)

எனது கால்களில் நிற்கப்  பழகிவிட்டேன் - வின்னி

secret

பவுன் நகைகள் சேர்க்கவில்லை என் பிள்ளைகளுக்கு,

நல்ல உயர் கல்வியைக் கொடுத்தேன் அவர்களுக்கு!

கார் கொடுக்கவில்லை, அவர்களுக்கு,

நடந்து போ பாடசாலைக்கு, நல்லது உடலுக்கு என்றேன் அவர்களுக்கு.

சிறு செலவுகளுக்கு, பணம் கொடுக்கவில்லை அவர்களுக்கு,

சிறு வயதிலேயே வேலை செய்து,சம்பாதிக்கக் கற்றுக் கொடுத்தே ன் அவர்களுக்கு.

உழைப்பின் பெருமையை உணர்த்தினேன் சிறு வயதில், அவர்களுக்கு.

என்னால் முடிந்தும், வேலைக்கு சிபாரிசு செய்யவில்லை அவர்களுக்கு.

தம் முயற்சியில் வேலை தேட அறிவுரை வழங்கினேன் அவர்களுக்கு ,

பிறர் உதவி இன்றி தமது உழைப்பில் வாழப் பழகிக் கொண்டார்கள்!

வங்கியில் ஒரு சதமும் போடவில்லைஅவர்களுக்கு,

அவர்கள் பணத்தை எனக்குத் தா என்று சொல்லவுமில்லை,அவர்களுக்கு.

உழைக்கும் பணத்தை சேமிக்கவும், சிக்கனமாக இருக்கவும்

கற்றுக் கொடுத்தேன் அவர்களுக்கு!

தமது காரை அவர்களே வாங்கி விட்டார்கள், வேலையில் சேர்ந்ததும்.

வீடு கொடுக்கவில்லை அவர்களுக்கு,  

வட்டி இல்லாக் கடன் கொடுத்தேன், வீடு வாங்க அவர்களுக்கு.

திருப்பிக் தந்து விட்டார்கள் கொடுத்த கடனை.

கடன் வாங்குவதைத் தவிர்க்கப் பழகிவிட்டார்கள் அவர்களும்.

வீணான செலவுகளைத் தவிர்க்கச் சொன்னேன். ஆனால்,

ஏழைகளுக்கு உதவச் சொன்னேன் அவர்களுக்கு.

ஐம்பது பேரை அழைத்து பெருமைக்காக, பிறந்தநாள் கொண்டாடாதே.

நல்லவர் நாலு பேரே போதுமென்றேன் அவர்களுக்கு.

பணம் உழைப்பதும், சேமிப்பதும் கடினம்,

ஆனால், செலவு செய்வது சுலபம் என்றேன் அவர்களுக்கு.

பணம் இருந்தால்தான் உறவும், சிநேகிதமும்,

மதிப்பும் நிலைக்கும் என்றேன் அவர்களுக்கு,

என் வாழ்வில் நடந்ததை வைத்து,

 உணர்ந்து விட்டார்கள், அதைத்  தம் வாழ்வில் அவர்களும்.

கடைசி காலத்தில், பிறர் தயவை எதிர்பார்க்காதே,

உன் பிள்ளைகளே உன்னைப் பார்ப்பாரோ தெரியாது என்றேன்.

நான் கூறியதை மனதில் வைத்திருப்பதும், இல்லாததும் அவர்கள் விருப்பம்!

நான் சொல்வது எனக்குப் பொருந்தும், எல்லார் வாழ்க்கைக்கும் பொருந்துமா?

தீர்மானிக்க வேண்டியது அவரவர் பொறுப்பு.  

என் பங்கை நான் செய்துவிட்டேன்,அவர்கள் காலில் நிற்பது, அவர்கள் பொறுப்பு !

 எனது கால்களில் நிற்க நான் பழகிவிட்டேன்!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.