(Reading time: 18 - 35 minutes)

 

" என்ன இதுவோ என்னைச் சுற்றியே

புதிதாய் ஒளி வட்டம்

கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்

கனவில் ஒரு சத்தம்

நேற்று பார்த்தேன் நிலா முகம்

தோற்று போனேன் ஏதோ சுகம்

தென்றல் பெண்ணே

இது காதல் தானடி

உன் கண்களோடு

இனி மோதல் தானடி

(என்ன இதுவோ..)

காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே

கண்களால் ஸ்வாசிக்க காற்று தந்தது

பூமியே சுழல்வதாய் பள்ளிக்கூடம் சொன்னது

இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது

ஓஹோ காதலி

என் தலையணை நீ என நினைத்துக் கொள்வேன்

அடி நான் தூங்கினால்

அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக் கொள்வேன்

கோடைக் கால பூங்காற்றாய்

எதன் வாழ்வில் வீசுவாய்

(என்ன இதுவோ..)

புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்

பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்

கோயிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன்

கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்

ஓஹோ காதலி

என் நழுவிய கைக்குட்டை எடுப்பதுவும்

சாலை ஓரமாய்

நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்

உன்னைப் பார்க்கும் நாளெல்லாம்

ஸ்வாசக் காற்று தேவையா

(என்ன இதுவோ..) "

காதல் ததும்பிய குரலில் அவன் பாடி முடிக்கும்வேளையில் சம்யுக்தாவிடம் சமிக்ஞை காடி கண்களை திறக்க சொல்ல,

கிருஷ்ணனோ கைகளில் அழகிய மோதிரம் நீட்டி

" மீரா ஐ லவ் யு  , இந்த ஜன்மம் மட்டுமில்ல எல்லா ஜென்மதுலயும் நான் உனக்கு நண்பனா காதலனா கணவனா சேவகனா உன்னுடன் வாழனும்" நு சொல்லி அவள் விரல் மோதிரம் அணிவித்தான்.

அதிர்ச்சியும் கலக்கமும் போட்டிபோட கோபத்தில் அவள் முகம் சிவக்க அதை வெட்கமென அனைவரும் நம்பினர். கிருஷ்ணனுக்கு தானே அவள் மனநிலை தெரியும் ? அதனால் சிறிது நேரம் நண்பர்களுடன் பேசிவிட்டு அவளுடன் வீடு திரும்பினான்.

டுக்கையில் இருந்த மீராவிற்கு தூக்கமே இல்லை ... அப்படியே இருக்க விரும்பாமல் ஜன்னலின் ஓரம் நிலவை பார்த்து அவள் நிற்க, அப்போதுதான் தோட்டத்தில் இருந்த கணவனை கவனித்தான். " எவ்வளோ பேசிட்டான் ... இவனுக்கு கூட கோபம் வருமா ? என் மேல் கோபபட்டுடு அவனுக்கு மட்டும் என்ன கிடைச்சது ? " என அவனை பார்த்துக்கொண்டே சற்று முன் நடந்ததை நினைத்துப்பார்த்தாள்.

" கிருஷ்ணா "

" ம்ம்ம்ம் "

" இன்னைக்கு நடந்தது எல்லாமே பொய் தானே ? "

" எது "

" நீ .........."

" நான் "

" நீ ஐ லவ் யு சொன்னது "

" ஏன் என்னை கல்லுன்னு நெனச்சியா ? "

" ஹேய் ஏன்டா இப்போ இப்படி பேசற "

" பின்ன யாராச்சும் ஐ லவ் யு சொன்னது பொய்யா நு கேட்பாங்களா ? அதுவும் நான் விளையாடுக்கு சொல்வேனா? இதுதான் என் மேல உனக்குள்ள நம்பிக்கையா ? "

" கிருஷ்ணா, ஆனா நீ என் நண்பன்னு "

" ம்ம்ம்ம் ........... நண்பன்னு ? சொல்லு ... ஏன் நிறுத்திட்டே ? நண்பன்னு நெனச்சேனே ? ஏன்டா இப்போ காதலை சொல்றேன் நு கேக்க வர்றியா ?"

" ம்ம்ம்ம்ம் "

"ஏன்னா எனக்கு உன் மேல காதல் வந்துடுச்சு .... அதுக்கு நீயும் தான் காரணம்... என் அம்மா கூட என் அப்பாவை அப்படி பார்துக்கமாட்டங்க... ஆனா நீ என் மேல எவ்ளோ அன்பு காட்டுற ... என் தேவை என்னை விட உனக்குதான் நல்லா தெரியும் ... ஆனா என் மனசை தவிர... "

" இது தப்பு கிருஷ்ணா .. உன்னை நீ மாத்திக்கோ " என்று உணர்ச்சி துடைத்த குரலில் அவள் பேச 

"  ஓ சரிதான் .. உலகத்துலேயே பொண்டாட்டியை காதலிக்கிறது தப்புதான்.... நல்ல நியாயம் டி ... அபோ இனி நீயும் மனைவி நு சொல்லி எனக்கு எதுவும் செய்யாத ... முடிஞ்சா என் கண்ணுல படாதே ...இல்லேன்னா நீயே நம்ம சொந்தம் பந்தம் கூப்பிட்டு இவன் வெறும் நண்பன்தான் என் கணவனில்ல ... எப்பவும் எனக்கு இவன் மேல அன்பு வராதுன்னு சொல்லிடு " என்றவன் அவள் பேச்சை கேட்காமலே சென்று விட்டான். அவன் காதலை சொன்னதை விட அவனின் கோபமும் பராமுகமும்தான்  அவளை வாட்டியது.

அதே நேரம் தோட்டத்தில் கிருஷ்ணனும்

" மீராம்மா என்னை மன்னிச்சுருடா.... உன் பிடிவாதம் எனக்கு தெரியும் ..நான் கெஞ்சினால் நீ மிஞ்சுவே .... ஆனா கோபபட்டு நீ என்னை விட்டுடு போய்ட்டா  நீ இல்லாம நான் எப்படி இருப்பேன் ? அதுக்குதான் உன்னை பேச விடாம பண்ணினேன் ...என்னை வெருக்காதேடி ..... நீ என் கூட இருந்தாலே போதும் டா கண்ணம்மா"

என தனக்குள்ளே பேசிக்கொண்டான்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.