(Reading time: 18 - 35 minutes)

 

மீரா கிருஷ்ணாவின் கோபம் குறைய காத்திருந்தாள்..கிருஷ்ணன் மீராவின் மனம் மாற காத்திருந்தான் ..ஆனால் காலம் காத்திருக்கவில்லை....

 இருவரிடையே அடிப்படை பேச்சுகளும் மிகவும் குறைந்துவிட கிருஷ்ணனின் அன்பிற்கு ஏங்கினாள் மீரா.... பல இரவுகள் அவள் உறங்கிவிட்டதாய் எண்ணி அவளின் தலை கோதிவிட்டு செல்லும் கிருஷ்ணனை பின்னாலிருந்து அணைத்துக்கொள்ள  துடிப்பாள் மீரா... அவனின் தூரம் அவள் மனதில் காதல் விதையை விதைத்தது...

மனைவியின் மன மாறுதலை அறிந்தும் அறியாதவன் போல் நடித்தான் கிருஷ்ணன் .

ஒரு நாள்  ,

" கிருஷ்ணா,...."

"ம்ம்ம்ம் "

"கிருஷ்ணா ..மணி ஒன்பாதச்சு... வேலைக்கு போகலையா ? "

".............................."

"ஹேய் என்ன நெருப்பா கொதிக்குது " என்று படபடத்தவளுக்கு பதில் கிடைத்தது கிருஷ்ணனின் முனகல் தான் ...

சிறிதும் காலம் தாழ்தாமல் விரைவாய் செயல்பட்டாள். உடனே மருத்துவரை வீட்டிற்கு வரவைத்தாள்.

" வைரஸ் காய்ச்சல் ... 3 நாள் நல்ல ரெஸ்ட் எடுக்கணும் ... அவர் தூங்கும்வரை தூங்கட்டும் ...எழுப்பாதிங்க .... "

" நன்றி டாக்டர் "

கணவனின் அருகில் வந்தமர்ந்தாள் மீரா... ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனின் கேசத்தை கோதி

" என்னால தானேடா ? நான் பேசிருந்தா உனக்கு இவ்ளோ காய்ச்சல் வர்ற வரை பார்த்துட்டு இருந்திருப்பேனா ? சீக்கிரம் கண் விழிசுக்கோ கிருஷ்ணா ..உன் கிட்ட நிறைய பேசணும் " என்றாள் ... இரண்டு நாட்கள் கடந்திருந்தது ..மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினான் கிருஷ்ணன் ... மனைவியின் அருகாமையில் அவன் குணமாயிருந்தான் .. எனினும் மீராவிடம் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தான்... கண்களில் ஜீவன் இல்லாமல் இறுகிய முகத்துடன் இருந்தவளை பார்த்து குழம்பினான் கிருஷ்ணன்.

" ஜூஸ் கொண்டு வரவா ?

" வேண்டாம் "

" ம்ம்ம் சரி "

" மீரா"

" ம்ம்ம்"

" வேலையா இருக்கியா ? "

" இல்ல "

" அப்போ பேசு "

" என்ன பேச ? "

" ஒன்னும் பேச இல்லையா? "

" .........................."

" நான் மயக்கத்துல இருந்தாதான் பேசுவியா? அப்படின லைப் லாங் சுயநினைவில்லாமல் .........................."

என அவன் முடிக்குமுன்னே  ஓடி வந்து அவன் அணைத்துக்கொண்டு கதறினாள் மீரா....

" மீரா .....மீராம்மா.............."

" சொல்லாத....சொல்லாத கிருஷ் .... இனி அப்படி சொல்லாத "

" ஹேய் சரிடா நான் சொல்லல்லே ...நீ அழாத பிளிஸ் ..எனக்கு கஷ்டமா இருக்கு கண்ணம்மா"

என்றவன் பேச்சுக்கு கட்டுபடடவள்போல் உடனே கண்களை துடைத்துகொண்டவளை சீண்டினான் கிருஷ்ணன்

"பாருடா ...என் பொண்டாட்டியா  இது ? என் பெசுகுலம் கூட மரியாதையை கொடுக்குறாளே"

" ஆமாடா இப்போதான் நான் உன் பொண்டாட்டி நு உனக்கு ஞாபகம் வந்ததா ? "

" அதென்ன இப்போ ? எப்பவுமே உன் நெனப்புதான்.... பேருலதாண்டி நான் கிருஷ்ணன் குணத்துல ராமன் .... " என்று இல்லாத கோலரை தூக்கி விட்டுக்கொண்டான் ...

" இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை .... இருந்தாலும் அழுத்தம் ஜாஸ்திடா உனக்கு ..எவ்வளோ நாளு என் கிட்ட பேசாம இருந்த நீ ...நான் பேசினாலும் முகம் பார்த்து பதில் சொல்றதில்ல... ஆனா ஆனா நைட் மட்டும் ................" என்றவளை

" ஹேய் உனகெப்படி தெரியும் ? " என வினவினான் கிருஷ்ணன் ,,

" ஆல் டிடைல் ஐ நோ ...... "

" ஆமா நீ மட்டும் என்னவாம் இந்த ரெண்டு நாளும் நான் தூங்கும்போது என்னை பார்த்து நீ ஐ லவ் யு சொல்லல ? இது தப்பு மீரா உன் மனசை மாத்திக்கோ என்று அவள் சொன்னதை மீண்டும் அவன் சொன்னான்.... "

" இது தப்புனா அந்த தப்பை நான் லைப் லிங்க் செய்வேனடா .... பட் அதுக்கு முன்னாடி அன்னைக்கு ஏன் அவ்ளோ கொபபட்டே நீ அதை சொல்லு.... "

" அதுவா நீ பிடிவாதக்காரி.. கெஞ்சினா மிஞ்சுவே ..மிஞ்சினா கொஞ்சுவே ...பார்த்தியா இப்போ எப்படி கொஞ்சுற " என்று கண்ணடித்தான் ...

" கேடி கேடி நான் பிடிவாதக்காரினா நீ கல்லுளி மங்கன்"

என்றபடி அவன் மார்பில் குத்தினாள்..அவளின் கைகளை எடுத்து கன்னங்களை அழுத்திகொண்டவன்

" என்னை மன்னிச்சுரும்மா " என்றான்

" ச்ச என்னடா இப்படி பேசற ? நாந்தான் மன்னிப்பு கேக்கணும்.... உன்னை மாதிரி ஒரு அன்பான புருஷன் எனக்கு கிடைக்க நான் கொடுத்து வெச்சுருக்கணும்...கிருஷ் ...ஐ லவ் யு டா " என்று அவனை கட்டிகொண்டாள்....மனைவியின் உச்சியில் இதழ் பதித்தவன்...

" நீ எங்கடி கொடுத்து வெச்ச ? நான் தான் கொடுத்துகிட்டே இருக்கேன் " என்றபடி அவள் இதழில் விரல்கள் கோலமிட

" சீ போடா"  என்று சிணுங்கி கொண்டே அவன் மார்பில் முகம் புதைத்தாள்... இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக்கொண்டனர் .... தன் காதல் மனைவியை தழுவி கொண்ட கிருஷ்ணன் சுவரில் மாட்டியிருந்த அவர்களின் திருமண புகைப்படத்தைபார்த்தான் ....

சகியாய் வந்தவளே

என் மனம் வென்றவளே

உடல் மட்டும் நானாகி போக

என் எதிரில் நின்ற உயிர் நீயடி ...!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.