(Reading time: 10 - 20 minutes)

மறுபடியும் காதல் – ப்ரியா

This is entry #07 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

ளார்.........

"இல்ல"

சுற்றும் முற்றும் பார்த்தாள்.பயம் மனதை மெல்லிதாய் பற்றியிருந்தது ஆனால் கோபமோ மனம் என்ன உடல் முழுதும் ஏன் அவள் உடை உடமைகளில் கூட நர்த்தனம் ஆடியது!!!

Marupadiyum Kathal

சிவந்த கருவிழந்த கண்கள் களைந்த முடி போட்டு கூட இல்லாமல்..

'ச்சே' மனது ஏகத்திற்கும் சலித்துக் கொண்டது!!

கனவில் இருந்து விழித்து எழுந்த கைபையில் இருந்த சிறு முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் முகம்  பார்த்து தான் சலித்து கொண்டிருந்தாள்.அந்த அரையின் சத்தம் கூட கனவில் தான்!!

மணியை பார்த்தாள். 5.45.. இன்னும் ஒரு மணி நேரத்தில் திருப்பூர் வந்துவிடும். 'அப்பாவிற்கு போன் பண்ணலாமா? வேண்டாம் பாவம் அவரை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும், ஆட்டோவில் போய் கொண்டால் ஆயிற்று' கேள்வியும் பதிலும் அவளிடத்தில் இருந்தே எழுந்தது...

கைகள் லேசாக இட புற கன்னத்தை தடவின.. 'காட்டுமிராண்டி' 'நம்பிக்கை துரோகி' ........ மனம் புதி புதியதாய் அவனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தியது.. மூளை மழுங்கி போனால் பாலாய் போன மனம் தடம் புரள்வது சரி தானே.

நினைவுகளின் குவியலில் தேடி பிடித்து கோபம் வர கூடிய நிகழ்வுகளின் பதிவுகளை மட்டுமாய் மனம் தேர்ந்தெடுத்து கோப கூத்தாடியது. மூளை அந்தோ பரிதாபமாய் அறிவுறுத்த ஏதும் இன்றி கையை  பிசைந்து முகம் கவிழ்த்து கொண்டது...

நினைத்தது போல ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தவள், அழைப்பு மணியை அழுத்தி விட்டு தான் ஆசையாய் வளர்த்த ரோஜா செடிகளுடன் பேச்சு வார்த்தையில் இறங்கி இருந்தாள். வாசலில் அம்மாவின் கோலம் வாஞ்சையாய் வரவேற்றது..

கதவை திறந்த அன்னையோ, " என்னடி? இப்படி காலையில வந்திருக்க?" என்று கேள்வியுடன் மகளின் முதுகை வெறித்தார்.

" என்ன சாந்தி நீ? உன் புள்ள அங்க இருந்து வந்திருக்கேன் அதுவும் வயித்து புள்ள காரி. அவளை இப்படியா நிக்க வெச்சு பேசுவ.. போ மம்மி நீ ரொம்ப பேட்" என்று அன்னையை ஒர கண்ணில் அலைந்தவாறு கூறினாள்.

"ஏய்..! என்னடி சொல்ற நிஜமாவ? திவி தம்பி நைட் போன் பண்ணப்போ இதெல்லாம் சொல்லலியே, சரி சரி பர்ஸ்ட் உள்ள வா" என்று அவள் பையை தூக்கி கொண்டு சந்தோசமாக திரும்பியவர், உளறி கொட்டியதை அப்போது தான் உணர்ந்து நாக்கை கடித்து கொண்டு உள்ளே சென்று விட்டார்.

'திவி தம்பி'?! "கடன்காரன் நைட்டே போன் பண்ணிடானா.. ச்சே அதானே அம்மாவோட வரவேற்பு அப்படி இருந்த போதே சந்தேக பட்டிருக்கணும். இருக்கட்டும் பாத்துக்கலாம்" தனக்குள் பேசியவாறு உள்ளே நுழைந்து குளியலறை நோக்கி சென்றவளிடம்

"அப்பா அஞ்சு மணிக்கே எந்திரிச்சு யாரோ முக்கியமானவங்கள பார்க்கணும்ன்னு போய்ட்டாங்க டீ, நான் போன் பண்ணி சொல்றேன் நீ குளிக்க வேண்டாம் இப்போ, சுடு தண்ணி போட்டு தரேன், காபியா பூஸ்டா? ஐயையோ நான் பாரு இப்போ காபி எல்லாம் வேண்டாம்.. பேசாம ராகி கூழ் பண்றேன்.. வெல்லம் போட்டு தான்..." என்று தன் போக்கில் கேள்வி பதில் என பேசிய அன்னையை பார்த்து கொண்டே நின்றவள் மெல்ல தன் வயிற்றை வருடி கொடுத்து விட்டு அகன்றாள்.

தியம்...

"அப்பா"

"என்ன செல்லம்?"

"உங்க கிட்ட ஒன்னு.... இல்லப்பா"

"என்ன சொல்லணும் பிரியா சொல்லுமா"

"அது இனி நான் அந்த வீட்டுக்கு போக மாட்டேன் என்ன அங்க போக சொல்லாதிங்க அப்பா ப்ளீஸ்"

"ஏய் என்னடி சொல்ற? நினைச்சேன்.. வீட்ல தான் எப்போ பாத்தாலும் உன் ராஜ்ஜியம் நடக்கணும்.. அப்போவே நான் தலையால தண்ணி குடிச்சேன் போற இடத்துல இப்படி தான் நடக்கும்னு.. அப்பனும் மகளும் எங்க என் பேச்ச கேட்டிங்க.. "

"ஏய் சாந்தி.. சும்மா இரு, ஏன் செல்லம் மாப்பிள ஏதும் சொன்னாரா மா?"

"இல்லப்.."

"ஆமா மாப்பிள்ள தான் சொல்ல போறாரு உங்க மகளை பத்தி நமக்கு தெரியாது பாருங்க. இவ நம்ம கூடயே அவ்ளோ ஒட்டுநாலா என்ன?  அன்னைக்கு வந்து அவன தான் லவ் பண்றேன் கல்யாணம் பண்ணி வைன்னு சொன்ன. பண்ணி வெச்சோம் இப்போ வேண்டாம்ன்னு வந்து நிக்கற.. சந்தி சிரிச்சு போயிரும் வெளில தெரிஞ்ச.. எல்லாம் அந்த கிழவிய சொல்லணும் அது பிள்ளைய எப்படி வளர்த்து வெ.."

'பளார்'

கன்னத்தை பிடித்து கொண்டு அடுப்படிக்குள் நுழைந்து விட்டார் சாந்தி! அதிர்ந்து விட்டாள் பிரியா!!

"அப்பா என்ன நினைச்சுட்டு இருக்கீங்க பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி கொடுத்து பேரன் பேத்தி எடுக்கிற வயசில பொண்டாட்டிய கை நீட்டி அடிக்கறிங்க.. எல்லா ஆண் ஆதிக்கம்..ச்சே"

"பிரியா!! உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு.. அவ என் பொண்டாட்டி அவளை கொஞ்சரதுகும் இவ்வளவு நாள் வெச்சு காப்பதுரதுக்கும் எனக்கு உரிமை இருக்க மாதிரி அவளை அடிகறதுக்கும் எனக்கு உரிமை இருக்கு"

"ஒ.. பெரிய உரிமை உங்க கோபத்த கூட கண்ட்ரோல் பண்ண முடியாம கையாளாக தனத்த காட்டிட்டு..."

ப்ரியாவின் வலது கன்னத்தை பதம் பார்த்திருந்தது அன்னையின் கைகள். அவ்வளவு தான் மிருகமாக மாறி இருந்தார் ராஜா.

"ஏண்டி வீட்டுக்கு வந்த என் பொண்ண அதும் வாயும் வயிறுமா இருக்குற அவளை போய் கை நீட்டி அடிக்கிற.. நீயெல்லாம் ஒரு அம்மாவாடி.. ச்சை"

இன்னொரு கன்னமும் கோபத்தின் பரிசை பெற்றிருக்க சாந்தி பதில் பேசாது கண்ணீர் வடித்தார்.

பத்து நிமிடங்களில் போர் களம் போல் கட்சி அளித்த வீட்டில் இருக்கவே ராஜிற்கு எரிச்சலாய் வர வழக்கம் போல் கிளம்பி விட்டார்!!!

அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்த பவித்ரா அம்மா ஒரு புறமும் அக்கா மறு புறமும் விட்டத்தை வெறித்து பார்த்து அமர்ந்து இருக்க, ஏதோ யுகித்தவலாய் அம்மாவிடம் சென்று விஷயத்தை கரந்தாள்.

நேரே ப்ரியாவிடம் சென்று பேச்சு கொடுத்தாள்.

"ஹே அக்கா எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க, அப்பா அம்மா பத்தி தான் நமக்கு தெரியும்ல.. அவங்க எப்பவும் இப்படி தான்.. நீ விடு டாக்டர் கிட்ட போனியா?"

"இல்ல டி"

"மாமாக்கு தெரியுமா" வெறித்த பார்வை தான் பதிலானது.

"சரி விடு, எங்க வீட்ல அவரு வெளியூருக்கு போயிட்டாரு அதான் வந்தேன், நைட் இங்க தான்"

"அப்போ ரித்து" பவியின் ஒன்றரை வயது குழந்தை.

"அவன எங்க மாமியார் நைட் கொண்டு வந்து விடறேன்னு சொன்னங்க சரி நீ ரெஸ்ட் எடு"

"ம்ம்ம்ம்"

எங்கிருந்து ஓய்வெடுப்பது அது தான் அத்துணை நிம்மதியும் அவனோட மூட்டை கட்டி அந்த வீட்டிலே போட்டு வந்து விட்டாளே!!அம்மா சொன்னதும் நியாயம் தானோ..!! மூளை கொஞ்சம் தெம்பு வந்தார் போல் மனதை கரைக்க முடிவு செய்தது...

நினைவுகள் பின்னோக்கி பயணமானது!!!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.